twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Vattam Movie Review : ஆண்ட்ரியா இருந்தா மட்டும் போதுமா?..வட்டம் திரைப்பட விமர்சனம்!

    |

    Rating:
    2.5/5

    நடிகர்கள் : சிபி சத்யராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி

    இயக்குநர் : கமலக்கண்ணன்

    இசை : நிவாஸ்.கே.பிரசன்னா

    சென்னை : சிபி சத்யராஜ் ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள வட்டம் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாலில் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் எப்படி இருக்குனு பார்க்கலாமா?

    தனுஷ் நம்பிக்கை… அனிருத் நெகிழ்ச்சி…: எல்லாத்துக்கும் காரணம் அந்த பீப் சாங் தானாமே அப்படியா?தனுஷ் நம்பிக்கை… அனிருத் நெகிழ்ச்சி…: எல்லாத்துக்கும் காரணம் அந்த பீப் சாங் தானாமே அப்படியா?

    ட்ரீம்வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வட்டம் திரைப்படத்தை கமலக்கண்ணன் இயக்கி உள்ளார். சிபி சத்யராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி, பாலசரவணன், சைத்ரா ரெட்டி, வம்சி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

    சிபிராஜ்

    சிபிராஜ்

    சிபி ராஜ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான மாயோன் இத்திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த போதும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது சிபிராஜ், ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள வட்டம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி உள்ளது. இதில் காதலியால் ஏமாற்றப்படும், சாதாரண நடுத்தரக்குடும்பத்து இளைஞனாக சிபி சத்யராஜ் நடித்துள்ளார். ஆண்ட்ரியா ஒரு தொழிலதிபரின் மனைவியாக நடித்திருக்கிறார்.

    இதுதான் கதை

    இதுதான் கதை

    ஐடியில் வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு திடீரென வேலை பறிபோயிவிடுகிறது. இதனால் பழிதீர்த்துக் கொள்வதற்காகவும்,வாழ்க்கையை நடித்துவதற்காகவும் துணி மில் உரிமையாளரின் வாய் பேச முடியாத மகனை கடத்தி ஒன்றரை கோடி பணம் கேட்டு மிரட்டுகின்றனர். அதே நேரத்தில், காதல் தோல்வியால் வாழ்க்கையை வெறுத்து அலையும் சிபி ராஜ் தொழில் அதிபர் வம்சியின் மனைவி பார்வதி (ஆண்ட்ரியா)வை கடத்துகிறார். இறுதியில் சிபிராஜ் ஆண்ட்ரியாவை ஏன் கடத்தினார். அவரின் நோக்கம் என்ன, சிறுவனை கடத்திய ஐ டி ஊழியர்கள் என்ன ஆனார்கள் என்பதே படத்தின் மீதி கதை.

    சொதப்பல்

    சொதப்பல்

    க்ரைம், த்ரில்லிங் என்பது போல சொல்லப்பட்ட இந்த படத்தில் க்ரைமும் இல்லை த்ரில்லிங்கும் இல்லை. நல்ல வேலை இந்த படம் ஓடிடியில் வெளியானது. இல்லை என்றால் வட்டம் படம் திரையரங்கில் ஒரு நாள் கூட ஓடி இருக்காது. படக்குழு புத்திசாலித்தனமாக ஓடிடியில் வெளியிட்டுவிட்டு பெரும் நஷ்டத்தை சமாளித்து விட்டது. பொண்ணுங்க ஏன் பணம் பணம்னு அலையுறாங்க என்ற டிரைலரில் வந்த வசனத்தை பார்த்துவிட்டு படம் பார்த்தால் படத்தும் அந்த வசனத்திற்கும் சம்மந்தமே இல்லை படம் முழுக்க ஒரே சொதப்பல்.

    எரிச்சல்

    எரிச்சல்

    திறமையான நடிகையான ஆண்ட்ரியாவை ஏதோ ஒப்புக்கு என்று இந்த படத்தில் நடிக்கவைத்து இருக்கிறார்கள். எந்த பக்கமாக யோசித்து பார்த்தாலும் படத்தில் ஒரு கதையும் இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் என்னடா கதை என்று எரிச்சலடைய வைத்துவிட்டது. அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தும் ஆண்ட்ரியா இதுபோன்ற படங்களை தவிர்ப்பதே நல்லது. அதேபோல, சிபிராஜ் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், சில இடங்களில் சத்யராஜின் உடல்மொழியும், குரலும் அவரிடமிருந்து விலகிச்செல்ல மறுப்பதை உணர முடிகிறது.

    ஒரு முறை பார்க்கலாம்

    ஒரு முறை பார்க்கலாம்

    லோ பட்ஜெட் படம் என்பதற்காக படம் ஆரம்பம் முதல் இறுதி வரை அனைத்துமே காருக்குள்ளே நடிக்கிறது. பின்னணி இசை பாடல் ஸ்கின்பிளே என அனைத்திலுமே கோட்டை விட்டுள்ளனர். வட்டம் படத்திற்கு பிளஸ் என்று சொல்ல ஒன்னுமே இல்லை.உங்களுக்கு ஆதித பொருமை, வேறு எந்த வேலையும் இல்லை... எப்படியாவது நேரம் போனால் போதும் என்று நினைத்தால் சாவுகாசமாக இந்த படத்தை ஒரு முறைபார்க்கலாம். வட்டம் திரைப்படம் வட்டத்துக்குள்ளேயே சுத்துது அவ்வளவுதான்.

    English summary
    Andrea Jeremiah and sibiraj’s vattam tamil review
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X