For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆழமான பிரச்சினைகளை அலசும் ’அனெக்’ Moview Review: வடகிழக்கு மாநில மக்கள் பிரச்சினைகளை பேசும் படம்

  |

  Rating:
  3.5/5

  நடிகர்கள்: ஆயுஷ்மான் குர்ரானா, மனோஜ் பஹ்வா, ஆண்ட்ரியா கெவிச்சூசா, குமுத் மிஸ்ரா, லோயிடோங்பாம் டோரேந்திரா , ஜே.டி. சக்ரவர்த்தி

  இசை: மங்கேஷ் தக்டே

  கேமரா: இவான் முல்லிகன்

  திரைக்கதை: சீமா அகர்வால்

  வசனம்: அனுபவ்

  இயக்கம்: அனுபவ் சின்ஹா

  சென்னை: இந்தியாவின் வடகிழக்கு மாநில மக்கள் எப்போதுமே இந்தியர்களாக மதிக்கப்படுவதில்லை என்கிற கருத்தை மையமாக வைத்து அம்மாநில மக்களின் பிரச்சினைகளை பேசியுள்ளது ஆயுஷ்மான் குரானாவின் 'அனெக்' மூவி

  இந்தி நடிகர்களில் ஆயுஷ்மான் குரானா வித்தியாசமான நடிகர். தேர்வு செய்யப்பட்ட அழுத்தமான பாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளவர்.

  இவரது ஆர்ட்டிக்கிள் 15 தமிழில் உதயநிதி நடிக்க நெஞ்சுக்கு நீதி என்கிற பெயரில் வெளிவந்தது. அந்தாதூன் படமும் மிகப்பிரபலம், இவரது பதோய் ஹோ தமிழில் வீட்ல விசேஷம் என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ளது.

   'குட்டவும் சிக்‌ஷயும்’ malayalam movie review : தீரன் படத்தின் இன்னொரு மேக்..ஆனால் இது அந்த ரகமல்ல 'குட்டவும் சிக்‌ஷயும்’ malayalam movie review : தீரன் படத்தின் இன்னொரு மேக்..ஆனால் இது அந்த ரகமல்ல

   நெபோடிசத்துக்கு எதிராக வளர்ந்துவரும் ஆயுஷ்மான் குரானா

  நெபோடிசத்துக்கு எதிராக வளர்ந்துவரும் ஆயுஷ்மான் குரானா

  பாலிவுட்டில் இந்தி நடிகர்களின் வாரிசுகள் மட்டுமே தலையெடுக்க முடியும் என்பது அந்த காலம் முதல் இந்தக்காலம் வரை உள்ள நடைமுறை. சில நடிகர்களே அதை உடைத்துள்ளனர். தமிழிலிருந்து இந்திக்குச் சென்ற ரஜினி, கமல் தோல்வியுடன் திரும்பினர். இதேபோல் தோனி பட ஹீரோ சுஷாந்த் சிங் தற்கொலையில் கூட நெபோடிசம் என்கிற ஒதுக்கப்படுதல் குறித்து அதிகம் விமர்சனம் எழுந்தது. ஆனால் தமிழ் நடிகர்கள் ரஜினி, அஜித், சிவகார்ந்த்திகேயன் போல் ஆயுஷ்மான் குரானா யாருடைய உதவியும் இல்லாமல் பாலிவுட்டில் சாதித்து வருகிறார்.

   தேர்வு செய்யும் படங்களின் தனித்துவம்

  தேர்வு செய்யும் படங்களின் தனித்துவம்

  அவர் தேர்ந்தெடுத்த படங்களில் நடிப்பதால் அவருக்கு தனியான இமேஜ் உருவாகியுள்ளது. அவரது படங்களில் உள்ள தனித்துவமான தைரியமாக தொடும் பல விஷயங்களை பல மாநிலங்களில் படமாக எடுப்பார்களா? என்பதே கேள்விக்குரிய விஷயம். அப்படிப்பட்ட ஒரு படம்தான் 'அனெக்'. திரையரங்குகளில் வெளியாகி சரிவர ஓடாவிட்டாலும் ஓடிடி தளத்தில் நெட்ஃபிலிக்சில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

   கதை இதுதான்

  கதை இதுதான்

  இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் மக்களை எப்போதும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதும், இந்தியர்களாக அவர்களை மதிக்காத போக்கும், ஆனால் இந்தியாவில் தான் நாங்கள் வாழ்கிறோம் சுதந்திரத்திற்கு பின்னர் எங்களை இந்தியர்களாக ஏற்றுக்கொள்ளவே இல்லையே என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராடி வருவதையும், இந்தியாவில் தான் நாம் வாழ்கிறோம், அனைவரும் இந்தியர்களே என்கிற இருவேறு கருத்துக்களையும் மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது.

   கிளர்ச்சிக்குழுக்களுடன் பேச்சு வார்த்தை கூர்முனை வசனங்கள்

  கிளர்ச்சிக்குழுக்களுடன் பேச்சு வார்த்தை கூர்முனை வசனங்கள்

  வடகிழக்கு மாநில கிளர்ச்சிக்குழுக்களின் தலைவர் டைகர் சங்காவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார் மத்திய அமைச்சர். அதற்கு முன் செய்தியாளர் பேட்டியில் தாங்கள் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகிறோம் எங்களை சிங்க்ளி எனவும் காஷ்மீரிகளை பாகிஸ்தானி எனவும் தானே பார்க்கிறீர்கள், கிளர்ச்சியாளர்கள், நக்சலைட்டுகள் என போராட்டத்தை பார்க்கிறீர்கள் என்பார். இந்தையாவில் ஒரே மாதிரி மொழி இனம் உள்ளதா? வேற்றுமையில் ஒற்றுமை என்கிறோம் ஆனால் அது நடைமுறையில் இல்லையே என பேசுகிறார்.

   பாதுகாப்புத்துறை செயல்பாட்டை படம் பிடித்து காட்டும் காட்சிகள்

  பாதுகாப்புத்துறை செயல்பாட்டை படம் பிடித்து காட்டும் காட்சிகள்

  கிளர்ச்சிக்குழு தலைவர் டைகர் சங்காவை பேச்சு வார்த்தைக்கு நெருக்க இன்னொரு கிளர்ச்சி கும்பல் ஜான்சன் என்பவருக்கு அரசு உதவுவது போல் நடிக்கிறது. இதற்கான வேலையை அரசு ரகசியப்பணியில் இயங்கும் கதாநாயகன் ஆயுஷ்மான் செய்கிறார். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு கிளர்ச்சிக்குழு தலைவர் டைகர் சங்கா சம்மதிக்கிறார். ஜான்சன் பற்றி பயப்படுகிறார், ஜான்சன் குருப்பை பிடிக்கும் பொறுப்பு கதாநாயகனிடம் ஒப்படைக்கப்படுகிறது.

   உண்மையை உணரும் ஆயுஷ்மான்

  உண்மையை உணரும் ஆயுஷ்மான்


  ஆனால் அவர் நடைமுறையில் பார்க்கும்போது ஜான்சன் குரூப் மக்களின் ஆதரவைப்பெற்றதாகவும், அவர்களையும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தினால் தான் சரியாக இருக்கும் என பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் சொல்கிறார். ஆனால் அவர் இவரை சந்தேகிக்கிறார், புரட்சிக்குழு தலைவர் ஜான்சனின் மகளுக்கும் இவருக்கும் காதல் என நினைக்கிறார். ஆனால் முழு இந்தியனாக தனக்கிடப்பட்ட பணியை தான் எப்போதும் செய்வேன் என்கிறார் நாயகன்.

   உண்மை பேசினால் அவரையும் கண்காணிக்கும் உளவுப்பிரிவு

  உண்மை பேசினால் அவரையும் கண்காணிக்கும் உளவுப்பிரிவு

  ஆயுஷ்மானை கண்காணிக்கு ஐபிஎஸ் ஆஃபீசர் ஜெ.டி.சக்ரவர்த்தி வருகிறார். இருவருக்கும் இடையே நடக்கும் வாதம் அருமையாக இருக்கும். வட இந்தியர் தென் இந்தியர் குறித்த வாதம் அது. ஆயுஷ்மான் கடைசியில் எல்லோரும் இந்தியர் என்பதை எப்போது சொல்லப்போகிறோம் என்பார். இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பெயர்களை அழித்துவிட்டால் நீங்கள் என்னன்னு சொல்வீர்கள் என்று கேட்பார்.

   கிளர்ச்சி தொடர்வதுதான் முடிவா?

  கிளர்ச்சி தொடர்வதுதான் முடிவா?

  கிளர்ச்சித்தலைவர் சமாதான உடன்படிக்கையில் கையிழுத்திடும் நேரம் ஜான்சனை கைது செய்வார்கள். இந்த களத்தில் பல அப்பாவி சிறுவர்கள் துப்பாக்கி தூக்கும் சூழ்நிலையில் கொல்லப்படுவார்கள், இவை அனைத்தும் ஆயுஷ்மானை பாதிக்கும். கடைசியில் பேச்சு வார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டதா? ஆயுஷ்மான் எண்ணம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

  பிளஸ்

  பிளஸ்

  வடகிழக்கு மாநில மக்களின் வாழ்க்கை, அதில் கிளர்ச்சிக்காரர்கள், இந்திய அரசு, வடமாநில மக்கள் அவர்களை இந்தியர்களாக ஏற்றுக்கொள்ளாத போக்கு, கிளர்ச்சிக்காரர்களிடம் சேரும் சிறுவர்கள் என பல விஷயங்களை அங்குள்ள மக்கள் மூலம் சொல்ல வைத்துள்ளனர். "இந்தியா எந்த தனிநபர் அப்பன் வீட்டு சொத்து அல்ல அது அனைவருக்குமானது" என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குநர். அதேபோல் நீங்கள் எங்களை ஒதுக்கினாலும் இந்தியாவுக்கான பங்களிப்பு இருக்கும் என்பதை கிளர்ச்சிக்காரரின் மகளே இந்தியா மீது நம்பிக்கை வைத்து இந்தியாவுக்கு பாக்சிங்கில் தங்கப்பதக்கம் வாங்குவதாக காட்டியிருப்பார்கள்.

  மைனஸ்

  மைனஸ்

  அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்பதாலும், ஆழமான பிரச்சினை என்பதாலும் படத்தில் பெரிய அளவில் இழுவை உள்ளது. படத்தின் கதை சில நேரம் சுற்றி வருகிறது. ஹீரோ தனி நபர் சாகசத்தில் ஈடுபடும் காட்சிகள் இந்தப்படத்திலும் உண்டு என்பது மைனஸ். இடையிடையே சம்பந்தமில்லாமல் காட்சிகள் வருவதால் படத்தின் கோர்வைத்தன்மை குறைவாக உள்ளது படத்தின் மைனஸ் ஆகும்.

   வடகிழக்கு மாநிலங்களின் இயற்கையான காட்சிகள்

  வடகிழக்கு மாநிலங்களின் இயற்கையான காட்சிகள்

  படத்தில் கேமரா வடகிழக்கு மாநிலங்களின் கொள்ளை அழகை அழகாக பல இடங்களில் காட்சிப்படுத்தியுள்ளனர். வடகிழக்கு பகுதியில் அம்மாநில மக்களை நடிக்க வைத்து, அம்மாநில உணவு கலாச்சாரங்களை படத்தில் காட்டுவது அருமை. படத்தில் உள்துறை அமைச்சராக வரும் குமுவா, பாதுகாப்புத்துறை உயர் அதிகாரியாக வரும் மனோஜ் பவா, டைகர் சங்காவாக வரும் டொரேந்திரா, சில காட்சிகளிலேயே வந்தாலும் ஆழமான வசனம் பேசும் ஜே.டி.சக்ரவர்த்தி, குத்துச்சண்டை வீராங்கனை ஆண்ட்ரியா கெவிசூசா, ஜான்சனாக வருபவர் உள்ளிட்ட பலரும் நிறைவாக தங்கள் பணியை செய்துள்ளனர்.

   வலுவான திரைக்கதை, வசனம்

  வலுவான திரைக்கதை, வசனம்

  தாங்கள் தொட்டுள்ள கதை சிக்கலானது, சிறிது பிசகினாலும் இந்திய மக்களுக்கு எதிராக பிரிவினை பேசுவதுபோல் படம் அமைந்துவிடும், ஆனாலும் வடகிழக்கு மக்களின் 75 ஆண்டு மன வேதனையை பதிவு செய்யவேண்டும் என்பதில் காட்சி அமைப்பு குறிப்பாக வசனம் அற்புதமாக பல இடங்களில் சுளீர் என உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை விவகாரத்தை அருமையாக தொட்டுள்ளனர். திரைக்கதை எழுதிய சீமா அகர்வால், வசனம் எழுதிய அனுபவ் சின்ஹாவின் அனுபவத்தை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

   அனெக் போன்ற படங்கள் ஏன் வேண்டும்

  அனெக் போன்ற படங்கள் ஏன் வேண்டும்

  சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல, அது வரலாற்றை பல்வேறு காலக்கட்டங்களில் அப்போதைய சூழ்நிலைக்கேற்றாற்போல் பதிவு செய்கிறது. மணிப்பூரில் பாதிக்கப்படுகிற மக்களின் உள்ளக்குமுறல்களை சென்னையில் எங்கோ ஒரு மூலையில் உள்ளவர் புரிந்துக்கொள்ள சினிமா சிறந்த வழி என்பதை அழகாக இப்படத்தில் உணர்த்தியுள்ளனர். துப்பாக்கி, ரவுடியிசம், ஹீரோஹிசம் பின்னால் செல்லும் பான் இந்தியா மயக்கத்தில் உள்ள தமிழ், தென்னக சினிமாவினர் எப்போது உணருவார்களோ என்கிற ஏக்கமும் எழுகிறது.

  English summary
  ‘Anek’ Review in Tamil (’அனெக்’ திரை விமர்சனம்): Ayushmann Khurrana's movie 'Anek' talks about the problems of the people of the North-Eastern states of India, focusing on the idea that they are not always respected as Indians.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X