For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Fall Web Series Review: தற்கொலையா? தள்ளி விட்டாங்களா?.. அஞ்சலியின் Fall வெப்சீரிஸ் விமர்சனம் இதோ!

  |

  Rating:
  3.5/5

  நடிகர்கள்: அஞ்சலி, சோனியா அகர்வால், எஸ்.பி. சரண், சந்தோஷ் பிரதாப்
  இயக்கம்: சித்தார்த் ராமசாமி
  ஓடிடி: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்

  சென்னை: அஞ்சலி நடிப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ள Fall வெப்சீரிஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

  இதுவரை 3 எபிசோடுகள் வெளியாகி உள்ளன. அடுத்தடுத்த எபிசோடுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  கனடாவில் வெளியாகி ஏகப்பட்ட விருதுகளை குவித்த Vertige வெப்சீரிஸின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த வெப்சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

  என்ன கதை

  என்ன கதை

  Fall எனும் தலைப்புக்கு ஏற்றவாறு முதல் காட்சியிலேயே நடிகை அஞ்சலி மாடியில் இருந்து கீழே விழுகிறார். அவர் இறந்து விட்டாரா என்றால் இல்லை மாறாக கோமாவிற்கு சென்று விட்டார். 6 மாதங்களாக அவர் கோமாவில் இருக்கிறார் என்றும் அவரை கருணை கொலை செய்து விடலாம் என அண்னனான எஸ்.பி. சரண் அப்பா, அம்மா மற்றும் தங்கையை சமாதானம் செய்து சம்மதிக்க வைக்க திடீரென கண் விழித்து விடுகிறார் அஞ்சலி. அவராகவே தற்கொலை முயற்சி மேற்கொண்டாரா? அல்லது அவரை யாராவது தள்ளி விட்டார்களா என்கிற விறுவிறுப்புடன் நகர்கிறது இந்த வெப்சீரிஸ்.

  யாருக்கு என்ன ரோல்

  யாருக்கு என்ன ரோல்

  அஞ்சலி திவ்யா எனும் கதாபாத்திரத்தில் இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளார். அவரது அப்பாவாக தலைவாசல் விஜய் செல்வகுமார் எனும் கதாபாத்திரத்திலும் அம்மாவாக பூர்ணிமா பாக்கியராஜ் லக்‌ஷ்மி கதாபாத்திரத்திலும் அண்ணனாக எஸ்பி சரண் ரோகித் கதாபாத்திரத்திலும் ரோகித்தின் மனைவியாக சோனியா அகர்வால் மலர் கதாபாத்திரத்திலும் முன்னாள் காதலனாக சந்தோஷ் பிரதாப் டேனியல் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், மாயா, பூமிகா மற்றும் க்ரித்திகா உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இந்த வெப்சீரிஸில் முக்கிய ரோல்களை செய்து வருகின்றன.

  சோனியா அகர்வால் எழுப்பும் சந்தேகம்

  சோனியா அகர்வால் எழுப்பும் சந்தேகம்

  அஞ்சலியின் தோழியும் அஞ்சலி அண்ணன் எஸ்பி சரணின் மனைவியுமாக நடித்துள்ள சோனியா அகர்வால், கடைசியாக அஞ்சலி தனக்கு மெசேஜ் செய்து நாளை முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறியிருந்தாள். ஆனால், அதன் பிறகு அவள் எப்படி தற்கொலை செய்து கொள்வாள் என தனது போலீஸ் நண்பர் ராஜ்மோகனிடம் சந்தேகத்தை கிளப்பி மீண்டும் மறைமுக விசாரணையை ஆரம்பிக்கிறார்.

  யாரை பார்த்தாலும் டவுட்டு வருது

  யாரை பார்த்தாலும் டவுட்டு வருது

  இதுபோன்ற த்ரில்லர் தொடருக்கான சுவாரஸ்யமே யாரை பார்த்தாலும் சந்தேகம் கடைசி வரை நிலவுவதும் கடைசியில் என்ன ஆனது என்பதை ரிவீல் செய்வதும் தான். இதுவரை வெளியாகி உள்ள 3 எபிசோடுகளிலும் ஏகப்பட்ட கேரக்டர்கள் மீது சந்தேகம் கிளம்புகிறது. அஞ்சலியின் அண்ணன் எஸ்பி சரண், தங்கை மாயாவாக நடித்துள்ள பெண், காதலனாக வரும் சந்தோஷ் பிரதாப் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் அஞ்சலி குளிப்பதை எட்டிப் பார்த்த அந்த சின்ன பையன் என பலர் மீது டவுட்டை கிளப்பி கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்கின்றனர். ஆரம்பத்தில் இருந்தே நாம் சந்தேகிக்க முடியாத ஆளாக இருக்கும் சோனியா அகர்வால் மீது தான் ஹெவியான டவுட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான வதந்தி சீரிஸில் லைலா அப்படியொரு சம்பவத்தை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  பிளஸ்

  பிளஸ்

  மெட்ரோ ரயில் திட்டத்துக்காக அஞ்சலி நடத்தி வரும் ஸ்போர்ட்ஸ் அகாடமி இடத்தை அபகரிக்க சந்தோஷ் பிரதாப் முயற்சி செய்வதும், கோமாவில் இருக்கும் தங்கையை கொன்று விட்டு அந்த இடத்தை விற்று கமிஷன் பார்க்கலாம் என நினைக்கும் எஸ்பி சரணின் நடிப்பு இந்த வெப்சீரிஸுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இயக்கம், பின்னணி இசை, ஸ்லோவாக நகரும் திரைக்கதை என அனைத்துமே பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

  மைனஸ்

  மைனஸ்

  ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே வைத்துக் கொண்டு மற்ற வெப்சீரிஸ்கள் போல இந்த வெப்சீரிஸும் கடைசி வரை இழுத்து விடுவார்களோ என்கிற அச்சம் மட்டுமே மைனஸ் ஆக உள்ளது. மணிரத்னம் படத்தில் வருவது போல பலரும் அளந்து அளந்து பேசுவது மற்றும் நடிப்பது அந்த கனடா வெப்சீரிஸ் டச்சை கொடுக்க முயற்சித்து இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. ஆனால், அதையெல்லாம் கடந்து ஓடிடி பிரியர்கள் தாராளமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த வெப்சீரிஸை பார்க்கலாம். 4வது எபிசோடில் என்னவெல்லாம் ட்விஸ்ட் இருக்கு என்பதை வரும் வெள்ளிக்கிழமை பார்த்து விடலாம்.

  English summary
  Anjali's Fall Web Series Review in Tamil ( அஞ்சலியின் ஃபால் வெப்சீரிஸ் விமர்சனம்): Fall web series streaming on Disney plus Hotstar with a twist and turn seat edge thriller story grabs audience.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X