For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அன்பான வாக்காள பெருமக்களே... அண்ணன் 'மட்ட சேகருக்கு' ஒரு ஜே சொல்வோமா! விமர்சனம்

  |

  Rating:
  2.5/5
  Star Cast: தினேஷ், மகிமா நம்பியார், ராதா ரவி, ஆர் ஜே பாலாஜி, மயில்சாமி
  Director: ராஜ்குமார்

  சென்னை: அரசியலில் கெத்து காட்ட நினைத்து களமிறங்கும் அண்ணன் மட்ட சேகர், சறுக்கினாரா இல்லை சாதித்தாரா என்பதை காமெடியாக சொல்கிறது அண்ணணுக்கு ஜே திரைப்படம்!

  Annakku jai movie review

  அப்பா முருகேசனுடன் (மயில்சாமி) சேர்ந்து கள் இறக்கும் தொழில் செய்து வருகிறார் மட்ட சேகர் (தினேஷ்). கட்டிங் சரக்குக்கு மேல் நடித்தாலே மட்டையாகிவிடுவார் என்பதால் தான் சேருக்கு இந்த அடைமொழி. மட்ட சேகரின் காதலியாக சுந்தரி (மஹிமா). இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வரும் நிலையில், உள்ளூர் அரசியல் பிரமுகரான செல்வா (ஸ்டன்ட் தீனா) மட்ட சேகருக்கு வில்லான வருகிறார். முருகேசனின் கள்ளுக்கு அதிக மவுசு இருப்பதால், செல்வாவின் டாஸ்மாக் பார் கல்லாகட்டாமல் திணறுகிறது. இதனால் கடுப்பாகும் செல்வா, முருகேசனை போலீசில் போட்டுக்கொடுக்கிறார். முருகேசனை போலீஸ் அடிவெளுக்க, செல்வாவின் எதிர்கோஷ்டியை சேர்ந்த அரசியல்வாதி பரசுராமன் (ராதாரவி) மூலம் அப்பாவுக்கு கட்சிப் போஸ்டிங் வாங்க அரசியல் களம் காண்கிறார் மட்ட சேகர். அரசியலில் அவர் சாதித்தாரா இல்லை மட்டையானாரா என்பதை நக்கலும் நையாண்டியுமாக சொல்கிறது அண்ணனுக்கு ஜே.

  Annakku jai movie review

  மட்ட சேகர் பாத்திரத்தை நிதானம் தவறாமல் செய்திருக்கிறார் தினேஷ். அட்டக்கத்தி ரூட்டு தல இப்போ நாட்டுக்கே தல என்று கெத்து காட்டியிருக்கிறார். சீரியசாக அவர் செய்யும் காமெடிகள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன. சவுண்டு கொடுத்தே எதிரிகளை ஓடவிடுவது, நெஞ்சை நிமிர்த்தி பார்வையிலேயே அசால்ட் செய்வது என கலக்கியிருக்கிறார். குறிப்பாக 'குக்கூ' பாதிப்பில் இருந்து பெருமளவுக்கு வெளியே வந்துவிட்டார்.

  Annakku jai movie review

  அடாவடி காதலி சுந்தரியா ரசிக்க வைக்கிறார் மஹிமா. டல் மேக்கப்பிலும் அழகாகவே தெரிகிறார். பெரிதாக வேலை ஏதும் இல்லை என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை கச்சிதமாக செய்திருக்கிறார்.

  Annakku jai movie review

  அப்பாவி அப்பா மயில்சாமி, தந்திரகார அரசியல்வாதி ராதாரவி, முரட்டு பீஸ் ஸ்டன்ட் தீனா என ஒவ்வொருவருமே தங்கள் கடைமையை நிறைவாக செய்திருக்கிறார்கள். தினேஷின் நண்பர்களாக வரும் 'ஜானி' ஹரி, பழைய ஜோக் தங்கதுரை என அனைவரது நடிப்பும் சிறப்பு.

  நமது அரசியல் அமைப்பை நச்சென கலாய்க்கும் விதத்தில் பர்ஸ்ட் கிளாஸில் பாசாகியிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். அடிமட்ட தொண்டர்களை அரசியல் தலைவர்கள் எப்படி தங்கள் சுயநலனுக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை நன்றாகவே நையாண்டி செய்திருக்கிறார். 'டாஸ்மாக்கை மூடி கள்ளுக்கடைகளை திறங்க' எனும் பிரச்சாரத்தை, பிரச்சாரமாக இல்லாமல் காட்சிகளின் மூலம் கடத்துகிறார் இயக்குனர். பாராட்டுக்கள் ராஜ்குமார்.

  Annakku jai movie review

  ஆனால் வலுவான கதையை, எளிதான திரைக்கதை தான் பலவீனமாக்கிவிடுகிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடிந்துவிடுவதால் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது. அதேபோல, வில்லன்கள் சுத்துப்போடும் போதும், தினேஷ் சவுண்ட் பார்டியாகவே கத்திக்கொண்டிருப்பது கொஞ்சம் ஓவர் பாஸ். அட்டக்கத்தி, மெட்ராஸ் உள்ளிட்ட சில படங்களை நினைவுப்படுத்தும் காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம்.

  அரோல் குரேலியின் இசையில் மட்ட சேகரு பிஜிம் மட்டும் அதிர வைக்கிறது. மற்றபடி பாடல் எல்லாம் சுமார் ரகம். ஒரு ஊரை சுற்றியே வட்டமடித்துக்கொண்டிருக்கிறது ஒளிப்பதிவாளர் விஷ்ணு ரங்கசாமியின் கேமரா. எடிட்டர் ஜி.பி.வெங்கடேஷ் தனது பணியை செம்மையாக செய்திருக்கிறார்.

  ஒரு அரசியல் படத்தை இவ்வளவு ஜனரஞ்சகமாகவும், ஜாலியாகவும் சொன்ன விதத்தில் சவுண்டாக சொல்லலாம் 'அண்ணணுக்கு ஜே'.

  English summary
  The tamil movie Annanukku Jai is a political satire film, starring Dinesh, Mahima in the lead roles.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X