»   »  பட விமர்சனம்

பட விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

விக்ரம் மறக்க வேண்டிய படங்களில் இந்தப் படமும் ஒன்று

கோவையையே நடுங்க வைக்கும் ரெளடி எம்.எல்.ஏவாக பசுபதி. அவரது அண்ணன் ஆளுங்கட்சி தலைவர்.சாதாரண மில் தொழிலாளியான விக்ரம் பசுபதியின் ஆட்களை ஒரு சந்தர்ப்பத்தில் அடித்து விடுகிறார்.அதனையடுத்து அந்த அரசியல் சகோதரர்களுக்கும் விக்ரமுக்கும் இடையே ஏற்படும் மோதலில் விக்ரம் எப்படிவெற்றி பெறுகிறார் என்பதுதான் கதை.

ஆக்ஷன் வேடத்தில் தூள் கிளப்பும் விக்ரமும், வில்லத்தனத்தில் அமர்களப்படுத்தும் பசுபதியும் இருக்கும்போதுஅதற்கேற்றவாறு திரைக்கதையில் ஒரு ராக்கெட் வேகம் இருக்க வேண்டாமா? ஆனால் பல இடங்களில் திருவாரூர்தேர் ஊர்வலத்தை டி.வியில் பார்க்கும் உணர்வு தான் வருகிறது.

அநியாயமா பேசினா ஆண்டவனுக்கு பிடிக்காது; அசிங்கமா பேசினா அருளுக்கு பிடிக்காது என்று பஞ்ச்டயலாக்குடன் அருட்குமரன் என்ற மில் தொழிலாளி வேடத்தில் விக்ரம். காசி, சித்தன் போன்ற அசாத்தியவேடங்களைக் கையாளும் திறமையுள்ள விக்ரமுக்கு இந்தப் படத்தில் தீனி குறைச்சல்தான்.

விக்ரம் அநியாயத்துக்கு இளைத்திருக்கிறார். இருப்பினும், திரைக்கதையில் இல்லாத வேகத்தை தனது நடிப்பின்மூலம் ஈடுகட்ட முயற்சித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் பொறி பறக்க வில்லன்களைப் பந்தாடுகிறார். வீதியில்வைத்து அப்பா வினுச்சக்கரவர்த்தி திட்டும் போது, அந்த அவமானத்தை அற்புதமாக தனது முகத்தில் கொண்டுவருகிறார்.

விக்ரமுக்கு எதிர் வீட்டுப் பெண்ணாக வந்து விக்ரமைக் காதலிக்கும் வேடம் ஜோதிகாவுக்கு. கடும் டயட்டில்இருக்கிறார் போலும். சிக்கென்று அழகாக இருக்கிறார். கொடுத்த வேலையை பாந்தமாக செய்திருக்கிறார்.

கொஞ்சமாய் வந்தாலும், கே.எஸ்.ரவிக்குமார் கலக்குகிறார். ரொம்ப நாளைக்கப்புறம் வடிவேலுவின் காமெடிஎடுபடாமல் போனது இந்தப் படத்தில்தான்.

ஹாரீஸ் ஜெயராஜின் இசையில், ஒட்டியாணம் செஞ்சுத் தறேன் வரியா பாடலும், அந்தப் பாடலைப் படமாக்கியவிதமும் அழகு. ஒரு பாடலுக்கு சாயாசிங் ஆடியுள்ளார். விக்ரம் முன்பு அவரது ஆட்டம் எடுபடவில்லை.

ஆட்சி நடப்பதே பசுபதியின் ரெளடித்தனத்தில்தான் எனும்போது, அவரை இடைவேளைக்கு முன்பே விக்ரம்கொன்று விடுவது எதிர்பார்ப்பைக் குறைத்து விடுகிறது. தளபதியைக் கொன்ற பின்பு, வயதான மன்னனைக்கொல்வதில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்? ஆனால் அதைத் தான் மீதிப் படத்தில் சொல்கிறார்கள்.

பொதுவாக மசாலா பட இயக்குனர்களுக்கு 6,7 படங்களுக்குப் பிறகுதான் மசாலா தீர்ந்து போகும். ஆனால்ஹரிக்கு 4 வது படத்திலேயே தீர்ந்து போயிருப்பதுதான் பரிதாபம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil