»   »  பட விமர்சனம்

பட விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

படம் முழுவதும் சத்யராஜ் ஓவர் ஆக்டிங்கில் தூள் கிளப்புகிறார். படத்தில் கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லை. எதற்காக இந்தப் படத்தைஎடுத்திருக்கிறார்கள் என்றே புரியவில்லை. கிளைமாக்ஸைக் கூட சொதப்பியிருக்கிறார்கள்.

சத்யராஜ், வடிவேலு, ரமேஷ் கண்ணா. இணை பிரியா நண்பர்கள் (தூங்கும்போது கூட கால்களை ஒருவர் மீது ஒருவர் போட்டுக் கொள்ளும்அளவுக்கு நெருக்கம் ஜாஸ்தி!). சத்யராஜ் திருமணம் ஆகாத இளைஞர்!. (இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இப்படி வயசுப் பையனாகவேவருவாரோ தெரியவில்லை). பெண்களைக் கண்டால் காத தூரம் ஓடுபவர். அவருக்கு கல்யாணம் செய்து வைக்க ஆசைப்படும் தாய்மாமன்மணிவண்ணன்.

சத்யராஜுக்குத் திருமணம் நடந்து விட்டால் தங்களது கதி அம்போ என்று நாடி ஜோசியர் மூலம் தெரிந்து கொள்ளும் வடிவேலுவும், ரமேஷ்கண்ணாவும், சத்யராஜுக்கு திருமண ஆசை வந்து விடாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கின்றனர்.

இந் நிலையில், ரெளடியால் துரத்தப்படும் நிறைமாத கர்ப்பிணியான ஒரு பெண் சத்யராஜ், வடிவேலு, ரமேஷ் கண்ணா வீட்டில் தஞ்சம்அடைகிறாள். அங்கு அவளுக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தையை சத்யராஜ் அன்ட் கோவிடம் ஒப்படைத்து விட்டு அப்பெண்இறக்கிறாள்.

இந்தப் பிரச்சினையை வைத்து மாப்பிள்ளை சத்யராஜுக்குக் கல்யாணம் செய்து வைக்கத் திட்டமிடுகிறார் மாமா மணிவண்ணன். ஆனால்குழந்தைத் தனக்குப் பிறந்தது என்று கோர்ட்டில் கூறி மணிவண்ணனுக்கு கடுக்காய் கொடுக்கிறார் சத்யராஜ்.

குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக வேலைக்காரி (ரம்யா கிருஷ்ணன்), சமையல்காரி (ஸ்வாதி), பால்காரி (பாபிலோனா) என 3இளம் பெண்கள் வருகிறார்கள்.

வடிவேலு பால்காரியையும், ரமேஷ் கண்ணா சமையல்காரியையும் ஓரம் கட்டி பொழுதைக் கழிக்கிறார்கள்.

ஆனால் பாட்டி வேடம் போட்டு வந்த ரம்யா கிருஷ்ணன், குழந்தையைப் பெற்று விட்டு இறந்து போன பெண்ணின் தங்கை என்பதுஇவர்களுக்குத் தெரியவில்லை.

சத்யராஜன்தான் தனது அக்காவின் சாவுக்குக் காரணம் என நினைக்கும் ரம்யா கிருஷ்ணன் அவரைக் கொல்ல முயற்சிக்கிறார். முயற்சியில்தோல்வியடையவே அங்கிருந்து தப்பி விடுகிறார்.

பிறகு மணிவண்ணன் மூலம் உண்மையை அறிந்து மீண்டும் அங்கு வரு<கிறார்.

அதே நேரத்தில் ரம்யாகிருஷ்ணன் அக்காவின் கணவர் (அரசியல்வாதி அஜய் ரத்னம்) குழந்தையைக் கொல்ல ஆளை (துலுக்கானம்)அனுப்புகிறார். அவனிடமிருந்து எப்படி குழந்தையை மீட்கிறார் சத்யராஜ் என்பதுதான் கதை என்று நாம் நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.


Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil