Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தனுஷின் அசுரன் பட தெலுங்கு ரீமேக்.. எப்படி இருக்கு வெங்கி மாமாவின் நரப்பா? ட்விட்டர் விமர்சனம்!
ஹைதராபாத்: கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் ஸ்ரீகாந்த் அடலா இயக்கத்தில் வெங்கடேஷ், பிரியாமணி நடிப்பில் உருவாகி உள்ள நரப்பா படம் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக் தான் இந்த படம்.
ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர்கள் வெளியான போது ட்ரோல் பண்ண அளவுக்கு படம் இல்லை என்றும் வெங்கடேஷ் அபாரமாக நடித்துள்ளார் என்றும் நெட்டிசன்கள் கூறும் விமர்சனங்களை இங்கே காண்போம்.
அல்லு அர்ஜுன் படத்தை தயாரிக்கும் கலைப்புலி எஸ்.தாணு...அப்போ டைரக்டர் யாரு ?

நரப்பா நல்லா இருக்கு
வெங்கி மாமா நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ள நரப்பா படம் நல்லா இருக்கு. நடிகை பிரியாமணியின் நடிப்பும் அபாரம். படம் சூப்பர் டூப்பர் ஹிட் என அசுரன் தெலுங்கு ரீமேக்கான நரப்பாவுக்கு ஏகப்பட்ட தெலுங்கு ரசிகர்கள் நல்ல மார்க் போட்டு வருகின்றனர்.

அசுரன் பார்க்காதவங்களுக்கு
தமிழில் வெளியான தனுஷின் அசுரன் படத்தை பார்க்காத தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு நரப்பா ஃபுல் மீல்ஸ் விருந்தாக இருக்கும் என்றும், விக்டரி வெங்கடேஷுக்கு இப்படியொரு மாஸ் படத்தை கொடுத்த அசுரன் படக்குழுவுக்கு நன்றி என்றும் ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர்.

ஹை வோல்டேஜ்
விக்டரி வெங்கடேஷ் இஸ் பேக்.. ஹை வோல்டேஜ் பேங்.. நரப்பாவிடம் வச்சுக்காதீங்க அப்புறம் அவ்வளவு தான் படம் வேற லெவலில் சும்மா நச்சுன்னு இருக்கு. பிரியாமணி அந்த கதாபாத்திரமாவே வாழ்ந்து இருக்காங்க.. அம்மு அபிராமி சின்ன ரோல் என்றாலும் சூப்பரா நடிச்சிருக்காங்க.. அசுரனிலும் அம்மு அபிராமி தான் ஃபிளாஷ்பேக்கில் நடித்திருப்பார்.

நடித்ததிலே சிறந்தது
தெலுங்கு சினிமா துறையில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் வெங்கடேஷின் வாழ்நாளிலேயே சிறந்த கதாபாத்திரம் இந்த நரப்பா கதாபாத்திரம் தான் என்று டோலிவுட் ரசிகர்கள் வெங்கி மாமாவை உச்சிமுகர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

ஹானஸ்ட் ரீமேக்
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் ஹானஸ்ட் ரீமேக்காக நரப்பா உருவாகி இருப்பதே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்றும், நல்ல திரைக்கதை அமைந்து விட்டால் நடிகர்கள் சும்மா வெளுத்து வாங்குவது இயல்பு தானே என்றும் டோலிவுட் ரசிகர்கள் ட்ரோல் பண்ணாமல் நரப்பாவையும் ரசித்து வருகின்றனர்.

கண்டிப்பா பார்க்கலாம்
வெங்கிமாமாவின் வெறித்தனத்தை பார்க்க வேண்டிய நேரம் வந்துடுச்சு என அமேசான் பிரைமில் டோலிவுட் ரசிகர்கள் ஆஜராகி நள்ளிரவு முதல் இருந்தே நரப்பாவை கண்டு மெய் சிலிர்ந்து வருகின்றனர். இளம் வயது மற்றும் வயதான தோற்றங்களில் வெங்கி மாமா வெரைட்டி காட்டி நடித்துள்ளார்.

அடுத்த ரீமேக்
அசுரன் படத்தின் ரீமேக்கான நரப்பா வெளியான நிலையில், வெங்கடேஷ் நடிப்பில் அடுத்ததாக த்ரிஷ்யம் 2 ரீமேக்கும் ரெடியாகி வருகிறது. அந்த படத்தின் ஷூட்டிங்கும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தீபாவளிக்கு ஒடிடி அல்லது தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.