»   »  அதிபர் - விமர்சனம்

அதிபர் - விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
2.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: ஜீவன், வித்யா, ரஞ்சித், சமுத்திரக்கனி, தம்பி ராமய்யா, சிங்கமுத்து, நந்தா

ஒளிப்பதிவு: பிலிப்ஸ் விஜயகுமார்

இசை: விக்ரம் செல்வா

தயாரிப்பு: டி சிவகுமார்

இயக்கம்: சூர்யபிரகாஷ்

வெளிநாட்டில் செட்டிலான தமிழன், தாயகம் திரும்பி மீண்டும் சுயமாய் தொழில் செய்யும்போது சொந்த நாட்டுக்காரர்களே எப்படியெல்லாம் காலை வாருகிறார்கள், துரோகம் செய்கிறார்கள் என்பதை சொதப்பலாகச் சொல்லியிருக்கிறார்கள் அதிபர் படத்தில்.

Athibar Review

கனடா வாழ் தமிழரான ஜீவன், சொந்த நாடான இந்தியாவுக்கு வருகிறார் (கதைப்படி இவர் ஈழத் தமிழர். அப்படிக் காண்பித்தால் ஈழத்தில் படமாக்கும் சிக்கல் இருப்பதால், எதற்கு தொல்லை என்று இந்தியாவாகக் காட்டிவிட்டார்களாம்.. இதுக்கு வெங்கட்பிரபு பரவால்லயே!) தான் சம்பாதித்ததையெல்லாம் வைத்து ஒரு கட்டுமான நிறுவனத்துக்கு அதிபராகிறார். வக்கீல் ரஞ்சித்தை நம்பி தனது சட்ட ஆலோசகராக்குகிறார். அவரோ கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு, ஜீவனுக்கும் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாகப் போட்டுக் கொடுத்து உள்ளே தள்ளுகிறார்.

Athibar Review

இந்த சிக்கலிலிருந்து ஜீவன் எப்படி மீண்டு வந்து அதிபராகிறார் என்பது மீதிக் கதை.

நான்கைந்து ஆண்டுகள் காணாமல் போயிருந்த ஜீவன், அதே முடி, வறட்சியான நடிப்போடு திரைக்குத் திரும்பியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் மட்டும் வெளுத்தெடுக்கிறார். வேறொன்றும் சொல்வதற்கில்லை.

அவருக்கு ஜோடியாக வரும் வித்யாவுக்கு பெரிதாக வேலையில்லை. சம்பிரதாய ஹீரோயின்.

Athibar Review

நந்தா, சமுத்திரக்கனி இருவரும் ஜீவனின் நண்பர்களாக வருகிறார்கள். தங்கள் பங்கை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.

தம்பி ராமய்யாவின் செய்வது 'அவ்ளோ பெரிய காமெடி இல்லை' ரகம். இதனை கவுண்டமணியும் செந்திலும் நாட்டாமையிலேயே செய்துவிட்டார்கள். தாதாவாக இருந்த நந்தா திடீரென திருந்துவதெல்லாம் நம்பக்கூடியதா...

இசை, ஒளிப்பதிவு இரண்டுமே சுமார் ரகம்தான். படத்தை எந்த வகையிலும் தூக்கி நிறுத்த உதவவில்லை.

வெளிநாட்டிலிருந்து தாய் நாடு திரும்பும் ஒருவன் சந்திக்கும் நெருக்கடிகள் என்ற எதார்த்தமான விஷயத்தை கதையாக்கிய இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டாமா? அதில் தவறியதால் இந்த 'அதிபர்', தன் நாற்காலியைக் கோட்டை விட்டிருக்கிறார்!

English summary
Athibar is Jeevan's comeback movie but the weak script and execution made this movie just an average fair.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil