For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Avengers Endgame Review: தானோஸின் ஆட்டம் முடிந்ததா? இல்லையா?... அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்! விமர்சனம்

  |

  Recommended Video

  AVENGERS ENDGAME படம் எப்படி இருக்கு- வீடியோ

  Rating:
  3.0/5
  Star Cast: ராபர்ட் டௌனே ஜே.ஆர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஷஒர்த், மார்க் ருப்பாலோ, ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன்
  Director: ஆன்டனி ரஸோ

  சென்னை: முந்தைய பாகத்தில் அழிந்த உலகத்தை மீட்க, சூப்பர் ஹீரோக்கள் மேற்கொள்ளும் சாகச பயணமே அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்.

  அவெஞ்சர்ஸ் படத்தின் முந்தைய மூன்று பாகங்கள், குறைந்தபட்சம் கடந்த ஆண்டு வெளிவந்த அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தையாவது பார்த்திருந்தால் மட்டுமே இந்த படத்தை புரிந்து கொள்ள முடியும். முதல் காட்சியே போன படத்தின் தொடர்ச்சியாக தான் ஆரம்பமாகிறது.

  Avengers endgame review: A final episode of the avengers

  ஜாலியாக விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு சூப்பர் ஹீரோவான ஹாக்ஐயின் குடும்பம் திடீரென மாயமாகிறது. அதைத்தொடர்ந்து, விண்வெளியில் ஒரு ஸ்பேஸ்ஷிப்பில் உயிருக்கு போராடும் நிலையில் கிடக்கிறார் அயர்ன்மேன் ராபர்ட் டோனி. முந்தைய படத்தில் இவர் வில்லன் தானோசால் கடுமையாக தாக்கப்பட்டிருப்பார். அவருடன் தானோஸின் இளைய எந்திர மகளும் இருக்கிறார்.

  Avengers endgame review: A final episode of the avengers

  அயர்ன்மேன் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கும் வேளையில், ஸ்பேஸ்ஷிப்புடன் அவரை அலேக்காக பூமிக்கு தூக்கி வந்து காப்பாற்றுகிறார் கேப்டன் மார்வெல் பிரி லார்சன்.

  பின்னர் அவெஞ்சர் டீம் ஒன்றாக சேர்ந்து, தானோஸ் பூமியை அழிக்க பயன்படுத்திய இன்பினிட்டி கற்களை தேட ஆரம்பிக்கிறது. தானோஸிடம் அந்த கற்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகு அந்த கொடூர வில்லனை போட்டு தள்ளுகிறார் சூப்பர் ஹீரோக்கள். அங்கிருந்து ஆரம்பமாகிறது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்.

  Avengers endgame review: A final episode of the avengers

  உயிர்பிழைக்கும் அயர்ன்மேன் குடும்பத்துடன் செட்டிலாகிறார். ஆனால் அழிந்த உலகை மீட்க வேண்டும் என துடியாக துடிக்கிறார்கள் கேப்டன் அமெரிக்காவும், பிளாக் விடோவும். இதற்காக ஆண்ட்மேன், தோர், ஹல்க் ஆகியோரை மீண்டும் அணி திரட்டுகிறார்கள். முதலில் மறுக்கும் அயர்ன்மேன் கடைசியாக வந்து இணைகிறார்.

  Avengers endgame review: A final episode of the avengers

  டைம்மெசின் மூலம் பின்நோக்கி சென்று தானோஸ் கைப்பற்றிய ரத்தின கற்களை கைப்பற்ற திட்டம் போடுகிறது அவெஞ்சர்ஸ் டீம். அவர்களின் இந்த திட்டம் என்னவாகிறது? தானோஸ் மீண்டும் உயிர்பிழைத்து வந்து உலகை அழிக்கிறானா? என்பதே திரில்லிங்கான மீதிப்படம்.

  முந்தைய படங்களை காட்டிலும், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் மிக மெதுவாக நகர்கிறது. சாகசம் செய்ய வேண்டிய சூப்பர் ஹீரோக்கள், சதா பேசிக்கொண்டே இருப்பது போரடிக்கிறது. அதுவும் அயர்ன்மேனுக்கு விஜய் சேதுபதியின் குரல் சுத்தமாக செட்டாகவில்லை. ராபர்ட் டோனி உருவில் விஜய் சேதுபதி தான் கண்ணுக்கு தெரிகிறார்.

  Avengers endgame review: A final episode of the avengers

  தமிழ் வசனங்கள் சூப்பர் ஹீரோக்களை காமெடி ஹீரோக்களாக மாற்றிவிடுகிறது. நடுநடுவே தங்களுக்கு தாங்களே கலாய்த்து கொள்கிறார்கள். ஸ்கார்லெட் ஜான்சனுக்கு ஆண்ட்ரியாவின் குரல் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

  AvengersEndgame- தெறி, மாஸ், வேற லெவல், சிறப்பு- ட்விட்டர் விமர்சனம் AvengersEndgame- தெறி, மாஸ், வேற லெவல், சிறப்பு- ட்விட்டர் விமர்சனம்

  கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு தான் படத்தில் சுவாரஸ்யமே ஆரம்பமாகிறது. சுமார் 20 நிமிடங்கள் ஓடும் போர் காட்சி, பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. கிராப்பிக்ஸ், ஆக்ஷன், இசை, காட்சியமைப்பு என எல்லாம் சேர்ந்து, அந்த போர் காட்சியை பிரமாண்டமாக காட்டுகிறது. அதில் அழிந்து போன சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் மீண்டும் வந்து போரிடுவது, சுவாரஸ்யத்தின் உச்சம்.

  Avengers endgame review: A final episode of the avengers

  அயர்மேன் கதாபாத்திரம் இந்த படத்துடன் முடிந்துவிட்டது. அதேபோல் தானோஸும் அழிக்கப்பட்டுவிடுகிறார். எனவே அவெஞ்சர்க்கு எண்ட்கார்டு போட்டுள்ளனர். இருப்பினும் படத்தின் முடிவில், கேப்டன் அமெரிக்கா தனது பொறுப்பை இளையதலைமுறையிடம் விட்டுச்செல்கிறார். எனவே கேப்டன் மார்வெல் உள்ளிட்ட ஒரு புது டீமை, வைத்து அவெஞ்ச்ர்ஸ் சீரிஸ் தொடரும் என்றே தெரிகிறது.

  Avengers endgame review: A final episode of the avengers

  மார்வெல் காமிக்ஸ் ரசிகர்களுக்கு அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் நிச்சயம் பிடிக்கும். எந்திரத்தனமான கிராப்பிக்ஸ் படங்களை ரசித்து பார்ப்பவர்களுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.

  தமிழில் பார்க்காமல் ஆங்கிலத்தில் பார்த்தால் படம் நிச்சயம் பிரம்மிப்பை ஏற்படுத்தும்.

  English summary
  The Hollywood super hero movie Avengers endgame, engages the audience only for 20 minutes.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X