»   »  பட விமர்சனம்

பட விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

படம்: பத்ரி

தயாரிப்பு: ஆஸ்கார் பிலிம்ஸ்

இயக்கம்: அருண் பிரசாத்

நடிப்பு: இளைய தளபதி விஜய், பூமிகா, மோனல், விவேக், தாமு, கராத்தே ஹூசைனி


விஜய்யின் பயங்கர ஆக்ஷன் படம் பத்ரி. படம் பூராவும் ஒரே கும்மாங் குத்து தான். நமக்கும் ரெண்டு அடி விழுமோ என பயம் வரும்அளவுக்கு அடி-உதை.

தன்னால் பாக்ஸிங் சாம்பியன் ஆக முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் துடிக்கும் தந்தை. அவரது இளைய மகன் பத்ரி (விஜய்).தந்தையால் வெறுத்து ஒதுக்கப்படும் பத்ரி தறுதலையாக சுற்றுகிறார். பஸ் ஸ்டாண்டில் பிகர்களுக்கு மார்க் போடுவது, சகாக்களுடன்லூட்டி அடிப்பது தான் அவரது அன்றாடப் பணி.

விஜய்யும் அவரது அண்ணனும் கவர்மென்ட் காலேஜில் படிக்க, இவர்களது எதிர்கோஷ்டி மாடல் காலேஜில் படிக்கிறார்கள்.

இரண்டு கோஷ்டிகளுக்கும் நடக்கும் அக்னி நட்சத்திர முறைப்பு, அடிதடி, உறுமல், கலாட்டாதான் படம். பாக்ஸிங் போட்டியில்பங்கேற்கும் பத்ரியின் அண்ணன் வெற்றியை கோட்டை விடுகிறார். அடுத்த முறை போட்டி வரும்போது மாடல் காலேஜ்ஹீரோ-கம்- படத்தில் எதிரி ரோஹித்தின் ஆட்கள் விஜய்யின் அண்ணனை அடித்து துவம்சம் பண்ணி விடுகிறார்கள். அவர் போட்டியிலேயேகலந்து கொள்ள முடியாத நிலை உருவாகிறது.

இதையடுத்து பத்ரி, பாக்ஸிங் வீரனாக அவதாரம் எடுக்கிறான். ஆக்ரோஷமாக ரோஹித்துடன் மோதி வெல்கிறான். துண்டு பீடிகதைதான். ஆனால், அடி அடியாய் கதை நகர்கிறது.

அடிதடி தவிர முக்கோணக் காதலும் உண்டு.

விஜய்யை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறார் பூமிகா (என்ன பிகர் பா!). ஆனால் விஜய்யோ கல்லூரி மாணவியான மோனலைகாதலிக்கிறார்.

மோனலின் காதல் தனக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக நீண்டடடடடட ரீல்களை விடும் விஜய் ஒரு கட்டத்தில்எக்கச்சக்கமாக மாட்டிக் கொள்கிறார்.

என்னடா ஸ்கவுண்டரல், யூ சீட்டுன்னு மோனல் விஜய்யின் காலரைப் பிடித்து கேட்க, சரிதான் நிறுத்துடி, காதல் மனசு சம்பந்தப்பட்டது.பணம் சம்பந்தப்பட்டது இல்லை. நான் பணக்காரன்னு நினைச்சு என் கூட இருந்த. இன்னொரு பணக்காரன் கிடைச்சவுடன் அவனோடபோற என்ற டயலாக் பேசும் இடத்தில் விஜய் அப்ளாஸ் வாங்குகிறார்.

விஜய்க்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் கார் மெக்கானிக்கின் மகள் பூமிகா. விஜய் ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக் கொண்டுபூமிகாவுடன் பழகுவது விஜய் பூமிகாவைத்தான் காதலிக்கிறார் என்று தோன்றுகிறது.

ஆனால் விஜய்யோ, பூமிகாவிடம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரை வாங்கிக்கொண்டு மோனலின் காதில் பூ சுற்றுவது நல்லநகைச்சுவை.

அப்பாவி பூமிகாவோ தன்னைத்தான் விஜய் காதலிக்கிறார் என்று அவர் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்து, விஜய்யைப் பற்றிமனதில் காதல் கோட்டை கட்டிக் கொண்டு டைரி எழுதுகிறார்.

லாடு லபக்குதாஸ் என்ற பெயரில் வரும் விவேக் அன் கோவினர் நல்ல கலகல. மோனலிடம் காலேஜ் பசங்க பேசுவதை அப்படியேடிரான்ஸ்லேட் பண்ணும் இடத்தில் தாமு ஜொலிக்கிறார்.

பூமிகா தோன்றும் இடமெல்லாம் மோனல் டெபாசிட் காலியாகி விடுகிறார். பூமிகா பக்கத்து வீட்டுல இருக்கற பிரெண்ட்மாதிரி இருக்கிறார். நடிப்பில் ஜொலிக்கிறார். நல்ல ரவுண்ட் வருவார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அருண் பிரசாத். இசை ரமண கோகுலா. இசை என்ற பெயரில் சுத்தமானஇரைச்சல். பாடல்கள் புரியவேயில்லை. பழனி பாரதி ஏமாற்றி விட்டார்.

அரை மணி நேரம் வந்து கலக்குகிறார் காரத்தே ஹூசைனி. படம் முடிவில் நடக்கும் பாக்ஸிங் அதிர வைக்கிறது. மார்பின் மீதுபாறாங்கல்லை வைத்து உடைப்பது, கையில் லாரியை ஏற்றுவது, கார் ஏறுவது போன்ற பெரிய ரிஸ்க்களை எடுத்துள்ளார் விஜய்.

லவ் ஸ்டோரிகளிலேயே வந்து போன விஜய் வித்தியாசமாக ஆக்ஷன் படம் செய்திருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil