»   »  பாகமதி விமர்சனம்

பாகமதி விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அனுஷ்கா லீட் ரோலில் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகி இருக்கும் பாகமதி. சரித்திர கதையா, ஃபேண்டஸி கதையா, ஹாரர் த்ரில்லரா என்றெல்லாம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா?

கொலைக்குற்றவாளியாக சிறையில் இருக்கிறார் அனுஷ்கா. அவரை துருப்புச் சீட்டாக்கி அவர் பெர்சனல் செகரட்டரியாக இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயராம் மீது பழியைச் சுமத்த திட்டமிடுகிறது அரசியல். எல்லா சதிகளையும் முறியடித்து எப்படி மக்களை காப்பாற்றினார் அனுஷ்கா என்பதே கதை.

Bhagmathi Review

இந்த சிம்பிள் கதைக்குள் பேய், சரித்திரம், அரசியல், சஸ்பென்ஸ் எல்லாவற்றையும் திணித்திருக்கிறார் அசோக்.

தேவசேனாவுக்கு இது ஈஸி ரோல். ஐஏஎஸ் ஆபிசராக தெளிவு, காதலியாக உன்னி முகுந்தன் முன்பு கனிவு, விசாரணையின் போது துணிவு, பாகமதியாக ஆவேசம் என்று அனுஷ்கா பின்னி எடுத்திருக்கிறார். ஆனாலும் கூட தேவசேனா அளவுக்கு இல்லை. ஒரு ஹீரோ லெவலுக்கு உயர்ந்துவிட்ட அனுஷ்கா கதைத் தேர்வு செய்வதில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

அனுஷ்காவுக்கு அடுத்ததாக நடிப்பில் ஸ்கோர் செய்வது ஜெயராம்.

ஆஷா சரத், உன்னி முகுந்தன் இருவரும் தங்களுக்கான ரோல்களைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தின் பெரிய பலம் கேமராவும் பின்னணி இசையும். த்ரில் டெம்போவை கூட்டுகின்றன.

திரைக்கதையை புத்திசாலித்தனமாக யோசித்த இயக்குநர் வசனங்களையும் ரசிக்கும்படி எழுதியிருக்கலாம். ஒரு வசனம் கூட மனதில் ஒட்டவில்லை. பாடல்களும்தான்.

அட... இதெல்லாம் அருந்ததில பார்த்தாச்சே... என்று முக்கால்வாசி படத்தைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஆளாளுக்கு ஒரு கதையைச் சொல்வதால் இதுதான் கதை என்று நாமாகவே ஒரு தெளிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

பாகமதி - பிரம்மாண்டமும் திகிலும் இருக்கிறது. அனுஷ்காவுக்காக பார்க்கலாம்.

English summary
Anushka's bilingual Bhagmathi Review

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil