»   »  பூப் போல பூமிகா

பூப் போல பூமிகா

Subscribe to Oneindia Tamil

நடிக்கும் கேரக்டர்களை பூ என ஊதி விட்டு உசுப்பலாக நடிப்பதில் பூமிகா கில்லாடி. சாவ்லா பெத்த இந்த சில்பான்ஸ் பாப்பாவுக்கு இப்போது தமிழை விட தெலுங்கில்தான் நிறைய வாய்ப்பு. வாயெல்லாம் பல்லாக நடித்து கலக்கி வருகிறார் பூமிகா.

வடக்கிலிருந்து வந்த வாசமான வரவுதான் பூமிகா சாவ்லா. தெலுங்கில் கொடியேற்றிக் கொண்டிருந்த பூமிகாவை, ரோஜாக் கூட்டம் தமிழுக்கும் கூட்டி வந்து ரசிகர்களின் நெஞ்சங்களை தத்தளிக்க வைத்தனர்.

ரோஜாக்கூட்டம் சிறப்பாக ஓடியும் பூமிகாவுக்கு தமிழ் ரெட் கார்பட் விரிக்கவில்லை. இதனால் மறுபடியும் தெலுங்குக்குத் தாவினார் பூமிகா. பின்னர் விஜய்யுடன் பத்ரி படத்தில் தலையைக் காட்டினார்.

விஜய்யை விட சிறப்பாக நடித்து ரசிகர் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டார் பூமிகா. அப்படியும் தொடர்ந்து வாய்ப்பு வரவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான சில்லுன்னு ஒரு காதல் படத்தில் ஜோதிகாவை விட சிறப்பான ரோல் பூமிகாவுக்கு.

அமர்க்கள நடிப்பு, அடக்கமான கிளாமர் என பட்டையைக் கிளப்பி வரும் பூமிகா, இப்போது தெலுங்கில் பிசியான நடிகை. இத்தனைக்கும் பெரிய நடிகர்களுடன் நடிப்பதில்லை பூமிகா.

ஆனாலும் சிறிய நடிகர்களுடன் அவர் நடித்த மிஸ்ஸியம்மா, சத்யபாமா, ஒக்கடு ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகி பூமிகாவின் மார்க்கெட்டில் வசந்தத்தை வாரி வழங்கியது.

பூமிகாவுக்கு ஹீரோ யார் என்பது முக்கியமில்லையாம். கதைதான் அவருக்கு ரொம்ப முக்கியமாம். கதை நன்றாக இருந்தால் போதும், யார் ஹீரோவாக இருந்தாலும் நடிப்பேன் என்கிறார் புன்னகை பூத்தபடி.

சிங்கிள் பாட்டுக்கு ஆடுவேளா என்று கேட்டபோது, நிச்சயமாக ஆட மாட்டேன். குத்துப் பாட்டில் அப்படி என்னதான் இருக்கிறதோ என்று ஆச்சரியம் காட்டும் பூமிகா, அப்படி ஒரு எண்ணம் எனக்குக் கிடையவே கிடையாது. அதற்கு அவசியமும் இல்லை என்கிறார் அழகாக.

பூமிகா பேசுவது பூ விரிவது போல, தனி அழகுதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil