twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    movie review : பூமிகா திரைவிமர்சனம் : இயற்கையை காப்பாற்றும் பேய் பூமிகா - படம் எப்படி இருக்கு ?

    |

    Rating:
    3.0/5

    சென்னை: ரதீந்திரன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விஜய் டி வியில் டைரக்ட் ரிலீஸ் செய்து விட்டு ,பின்னர் நெட்பிலிக்ஸ் மூலம் ஓ டி டி ரிலீஸ் செய்து உள்ளனர் .

    தமிழ் திகில் படத்தில் ஒரு பழைய பள்ளி பயமுறுத்துகிறது என்று இந்த படத்தின் ட்ரெய்லர் பார்த்தவர்கள் நன்கு புரிந்திருப்பார்கள் . ஏன் பயமுறுத்திக்கிறது ,யார் பயமுறுத்திக்கிறார்கள் என்பது தான் படத்தின் முழு கதை .

    இந்த படத்தின் மைய கரு இயற்க்கைக்கு எதிராக நாம் செயல் பட கூடாது , செயல்பட்டால் அந்த இயற்கை நமக்கு திரும்ப என்ன கொடுக்கும் என்பதை திகில் கலந்த ஒரு ஹாரர் சப்ஜெக்டாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரதிந்திரன்.

    ஐஸ்வர்யா ராஜேஷின் நேரடி டிவி ரிலீஸ் படம் பூமிகா எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்!ஐஸ்வர்யா ராஜேஷின் நேரடி டிவி ரிலீஸ் படம் பூமிகா எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்!

     வரவேற்பைப் பெற்ற

    வரவேற்பைப் பெற்ற

    பூமிகா ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படங்களில் மிக முக்கியமான தமிழ் திரைப்படமாகும், மேலும் இளம் நம்பிக்கைக்குரிய திரைப்படத் இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத்துடன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். மணிரத்னத்தின் நவரசத்தில் ரதீந்திரன் இயக்கிய "இன்மை" என்ற படம் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது மட்டும் அல்லாமல் ரசிகர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பைப் பெற்றது. திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியது. "அது என்னமோ தெரியல கமர்ஷியல் மாஸ் படங்கள பார்த்து அதையே எதிர்பார்க்கிற சிலருக்கு இப்பிடியான படங்கள் புடிக்கமாட்டேங்கிது" என்று பல கருத்துக்கள் நிலவி வருகிறது.

    வட்டாரவழக்கு,  உடல் மொழி

    வட்டாரவழக்கு, உடல் மொழி

    அறிமுக நடிகரான விது பேட்டை படத்தில் சிறு கதாபாத்திரம் செய்து இருந்தாலும் இந்த படத்தில் இவர் தான் கதாநாயகன் . சூர்யா மற்றும் மாதுரியின் நடிப்பு தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்கிறார்கள், அவந்திகா மன இறுக்கம் கொண்ட குழந்தையாக நடிப்பது எளிதான காரியம் அல்ல என்பதை நன்கு புரிந்து கொண்டு அவந்திகா பூமிகாவாக மாறி திரையில் நம்மை மிரள வைக்கிறார் . பாவல் நவகீதன் நிறைய காட்சிகளில் சஸ்பென்ஸ் சஸ்டையின் செய்ய மிகவும் அற்புதமாக தனது கதாபாத்திரத்தை பலப்படுத்தி கதாபாத்திரத்தின் பேச்சுவழக்கு , வட்டாரவழக்கு, உடல் மொழி கதையின் பின்னணி போன்ற அத்தனை விஷயங்களிலும் நம்பகத்தன்மையை சேர்த்து நிறையவே ஸ்கோர் செய்கிறார் .

    மனித உடலை தொடர்படுத்தி

    மனித உடலை தொடர்படுத்தி

    முதல் காட்சியில் இருந்தே, ரதீந்திரன் இயற்கையின் பல கூறுகளால் நிரப்பப்பட்ட ஒரு சவாரிக்கு நம்மை அழைத்து செல்கிறார். இயற்கை மற்றும் மனிதனின் பேராசை பற்றிய உரையாடல்கள் தனித்து நிற்கின்றன, திரைக்கதை மிகவும் சுவாரஸ்யமாக படத்தின் இன்டெர்வல் வரை நிரம்பியுள்ளது, அதன் பிறகு வேகம் கொஞ்சமாக குறைகிறது , காரணம் படத்தின் ஆழமான கருத்தை நிறுத்தி நிதானமாக புரியும்படி சொல்லியாக வேண்டும் என்ற கட்டாயம் . முதல் பாதியில் பதற்றத்திற்கு வழிவகுக்கும் காட்சிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. பீ ஜி எம் மிகவும் மிரட்டல் . ஒரு மனித உடலை பூமியின் உடலுடன் தொடர்புபடுத்துவது , பூமி பற்றிய கோட்பாடுகளை தெளிவு படுத்துவது தலைப்பை இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள வைக்கிறது. இருட்டு , காடு , ஒரு செல் போன் டெக்ஸ்ட் மெசேஜ் என்று மிக எழுமையான விஷங்களை கொண்டு பதட்டத்தையும் பயத்தையும் வரவைக்க கூடுமானவரை முயற்சி செய்து வெற்றியும் பெற்று உள்ளனர் இயக்குனர்.

     சோலோவாக நிற்கும்  மரம்

    சோலோவாக நிற்கும் மரம்

    பூமிகா தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான ஒரு டீம் என்று தான் நிச்சியம் சொல்ல வேண்டும் . ராபர்டோ காட்சிகள் அற்புதமானவை, கதாபாத்திரங்களின் சரியான மனநிலையை கேமரா கோணங்கள் அட்டகாசமாக அமைக்கிறது. மலைகளின் அழகிய அழகைப் படம்பிடித்த விதம் , அமானுஷ்ய காட்சிகளுக்கு அற்புதமான பிம்பத்தை உருவாக்கிய விதம் , ஒரு அழகான இயற்கை சார்ந்த பகுதியில் சிங்கல் சோலோவாக நிற்கும் ஒரு மரம் ,அந்த மரத்தை காட்டிய விதம் என்று ராபர்டோ ஒரு சிறந்த கேமரா மேன் என்று நிரூபித்து உள்ளார் . பிரித்வி சந்திரசேகரின் பின்னணி இசை காட்சிகளின் தீவிரத்தை நன்றாக உயர்த்துகிறது. சவுண்ட் மிக்ஸிங் மற்றும் ஸ்பெஷல் எபக்ட்ஸ் கடுமையாக உழைத்து உள்ளார்கள் . VFX மட்டும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்திருக்கலாம் என்பது தான் படத்தின் மைனஸ் . காட்டில் வந்த நரி மற்றும் பூமிகாவுடன் விளையாடும் அணில் போன்ற சீ ஜீ காட்சிகள் சுமார் ரகம் .

    சைக்காலஜி டாக்டர்

    சைக்காலஜி டாக்டர்

    மனிதன் இன்றைய கால கட்டத்தில் சந்தித்து வரும் கொரானா பிரச்சனைகளுக்கு நடுவே இப்படி ஒரு படம் கண்டிப்பாக தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை . திரைக்கதையில் விரிவாக இரண்டாம் பாதி சொல்லிய விஷங்களை திடமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக்கிறது . இருந்தாலும் நிறைய லாஜிக் மீறல்கள் இருப்பது மிகவும் அப்பட்டமாக தெரிகிறது . ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் நம் மனதில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்திகிறார்களா என்று கேட்டால் - பாவல் நவகீதன் நடித்த வாச்மேன் கதாபாத்திரம் மட்டும் தான் மனதை எதோ ஒரு வகையில் ஈர்க்கும் . சைக்காலஜி டாக்டர் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் செய்யும் பல யுக்திகள் மிகவும் காமெடியாக எதார்த்த மீறலாக தான் நம்மை நெளிய வைக்கும் . பேய்க்கு சைக்காலஜி பார்ப்பது , பேய் வந்த பிறகும் எந்த பயமும் இல்லாமல் கார் ஓட்டுவது , பெற்ற குழந்தையையே பேயுடன் விட்டுவிட்டு தப்பிக்க நினைப்பது போன்ற காட்சிகள் நம்மை மிகவும் எரிச்சல் அடைய செய்யும் .

    காப்பாற்ற  நினைக்கும்

    காப்பாற்ற நினைக்கும்

    ஒரு பேய் கதைக்குள் இயற்கை வளம் பற்றி பேசுவதும் , ஒரு ஹாரர் படத்தில் இப்படி பட்ட ஒரு நல்ல கருத்தை சமுதாயத்திற்கு சொல்ல நினைத்ததும் கண்டிப்பாக பாராட்ட பட வேண்டியவை . இந்த நல்ல முயற்சி இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் மிக பெரிய வெற்றி அடைந்திருக்கலாம் என்பது தான் உண்மை . இப்படி பட்ட ஒரு கதையை புரிந்துகொண்டு இந்த படத்தை தயாரிக்க முன் வந்த ஸ்டோன் பெஞ்ச் குழுவினர் , வெரைட்டி காட்ட நினைக்கும் தயாரிப்பாளராக கார்த்திகேயன் செலக்ட் செய்த இந்த சப்ஜெக்ட் கண்டிப்பாக சில விருதுகளை வெல்லும் .குறிப்பாக பூமிகாவாக நடித்த அவந்திகா நிறைய விருதுகளை வெல்லுவார் என்று எதிர்பார்க்க படுகிறது . விஜய் டீ வீ யில் விளம்பர இடைவெளிக்கு நடுவே படம் பார்த்தவர்கள் கண்டிப்பாக நிறைய சஸ்பென்சுகளை இழந்துருப்பார்கள் . பார்க்காதவர்கள் நெட்டபிலிக்ஸ் மூலம் கண்டிப்பாக இயற்கை பற்றி பேசும் ஒரு வித்யாசமான பேய் படத்தை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று எண்ணுவார்கள் . பூமிகா ""பூமியை" காப்பாற்ற நினைக்கும் ஆர்வலர்களுக்கும் , ஹாரர் ரசிகர்களுக்கும் பிடிக்கும் ஒரு வகையான இயற்கை பாடம் .

    English summary
    Boomika produced by stonebench is Highly anticipated Netflix release today.touching emotions with nature connecting the horror fans in mind director rathindiran has tried a different screenplay to support nature interlinking the human body and mind. aishwarya rajesh has played an important role in this film and joining with her vidhu and surya accompanied in different characters.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X