twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Brahmastra Twitter Review: பாலிவுட்டின் பிரம்மாண்ட பட்ஜெட் படம்.. பிரம்மாஸ்திரம் எப்படி இருக்கு?

    |

    சென்னை: அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் உருவாகி உள்ள பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

    அமிதாப் பச்சன், ஷாருக்கான், நாகார்ஜுனா மற்றும் மெளனி ராய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

    சுமார் 410 கோடி பட்ஜெட்டில் 5 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் எப்படி இருக்குன்னு ட்விட்டர் வாசிகள் என்ன என்ன சொல்லியிருக்காங்கன்னு இங்கே பார்ப்போம்..

    410 கோடியா.. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுத்த படம் இதுதானாம்.. பிரம்மாஸ்திரம் தப்பிக்குமா? 410 கோடியா.. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுத்த படம் இதுதானாம்.. பிரம்மாஸ்திரம் தப்பிக்குமா?

    ஸ்டாண்டிங் ஒவேஷன்

    ஸ்டாண்டிங் ஒவேஷன்

    பிரம்மாஸ்திரா படம் முடிந்ததும் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கைதட்டும் காட்சிகளை பதிவிட்டு இந்த நெட்டிசன் படம் அட்டகாசமாக இருக்கிறது என பாராட்டி உள்ளார். அயன் முகர்ஜியின் உழைப்புக்கு கிடைத்த மரியாதை இது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஷாருக்கான் சீன் சூப்பர்

    ஷாருக்கான் சீன் சூப்பர்

    பிரம்மாஸ்திரம் படத்தில் கேமியோ ரோலில் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ளார். அவர் வானர அஸ்திரமாக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், மெளனி ராய் ஷாருக்கானை போட்டுத் தள்ளும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் ஸ்பாய்லராக வலம் வருகின்றன. மொத்த படத்திலேயே அவரது நடிப்பு தான் சூப்பர். ஒரு 20 நிமிஷம் படத்தை ட்ரிம் பண்ணால் சிறப்பாக இருக்கும் இப்போதைக்கு ஆவரேஜ் படம் தான் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

    பிளாக்பஸ்டர்

    பிளாக்பஸ்டர்

    பாய்காட் பாலிவுட் கேங் பிரம்மாஸ்திரம் படத்துக்கு காலை முதலே படத்தை பார்க்காமல் நெகட்டிவ் விமர்சனங்களை போட்டுத் தாக்கி வருகிறது. மார்வெல் படங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்திய சினிமாவில் இருந்து உருவாகி உள்ள அஸ்திரா வெர்ஸ் படம் தான் பிரம்மாஸ்திரம் விஷுவல் எஃபெக்ட்ஸ் மிரட்டுது. தியேட்டரில் போய் பாருங்க என இந்த ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார்.

    ஹெவி பேமண்ட்

    ஹெவி பேமண்ட்

    கரண் ஜோஹர் இந்த படத்தை வெற்றி படமாக மாற்ற ஹெவி பேமண்ட் கொடுத்து பலரையும் 4.5 ரிவ்யூ போட சொல்லியிருக்கிறார். ஆனால், தியேட்டர்கள் காலியாகத்தான் இருக்கு. பாய்காட் கேங்காகிய நாம் இந்த படத்தை முற்றிலும் டிசாஸ்டர் படமாக மாற்ற வேண்டும் என ஒரு குரூப் நெகட்டிவ் விமர்சனங்களை போட்டு வருகிறது.

    மேஜிக் கதை

    மேஜிக் கதை

    இந்து மதத்தை பேஸ் செய்து பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம், அக்னி அஸ்திரம், வாயு அஸ்திரம், வானர அஸ்திரம் என பல அஸ்திரங்களின் கதையாக உருவாகி உள்ள படத்தின் கதையும் சிஜி வொர்க்கும் வேறலெவலில் இருக்கு.. மார்வெல் படங்களை பார்க்கும் ரசிகர்கள் இந்த படத்தையும் கொண்டாடுவார்கள் என இந்த நெட்டிசன் 4.5 ரேட்டிங் கொடுத்துள்ளார். ரசிகர்களை குழப்பும் விதமாகவே ட்விட்டர் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. படத்தின் ரியல் விமர்சனம் சீக்கிரமே வந்து விடும்!

    English summary
    Brahmastra Twitter Review and Reactions are here. Ranbir Kapoor, Alia Bhatt, Amitabh Bachchan, Shah Rukh Khan, Nagarjuna and Mouni Roy starrer Astra verse movie first part getting mixed reviews.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X