For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  movie review :கேர் ஆஃப் காதல் சொல்லும் நான்கு காதல் கதைகள்

  |

  இயக்குனர் : ஹமெம்பெர் ஜஸ்டி

  நடிகர்கள் : வெற்றி , ஆய்ரா மும்தாஜ் சர்க்கார் , தீபன் சோனியா கிரி

  படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாத்

  movie review : அழகான நான்கு காதல் கதைகள்

  c/o காதல் - திரை விமர்சனம்

  சென்னை: தெலுங்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் C/O Kancharapalem. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

  அதை தமிழில் ரீமேக் செய்ய போவதாக அறிவித்து ரசிகர்களை மெருகேற்றி பின்னர் c/o காதல் என டைட்டில் வைத்தனர்.

  ஹேமம்பார் ஜஸ்டி இயக்க, Shri Shirdi Sai movies & Big print pictures ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை இணைந்து தயாரித்திருக்கின்றன.

  எவர்க்ரீன் சப்ஜெக்ட்

  எவர்க்ரீன் சப்ஜெக்ட்

  எப்போதும் சினிமாவில் காதல் கதை என்பது எவர்க்ரீன் சப்ஜெக்ட் தான். கதையை சிறப்பாக அமைத்து வெளிப்படுத்தும் விதம் தான் காதல் கதைக்கு சிறப்பம்சம். அதை c/o காதல் படக்குழு சிறப்பாக செய்திருக்கின்றனர். சுருக்கமாக நால்வரின் அழகான காதல் கதை தான் c/o காதல்.

  முக்கிய கதாபாத்திரம்

  முக்கிய கதாபாத்திரம்

  இந்த படத்தில் நடிகர் தீபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தான் இயக்குனர் பாரதி ராஜாவின் முதல் மரியாதை படத்தில் நடிகர் திலகம் சிவாஜிக்கு மருமகனாக நடித்தவர்."அந்த நிலாவ தான் கைல புடிச்சேன் " பாடல் இன்று வரை பிரபலம் தான் . அந்த பாடலில் நடித்த பிறகு இத்தனை ஆண்டுகள் கடந்து ஒரு முக்கிய கதாபாத்திரமாக , 49 வயது தாங்கிய கதாபாத்திரத்தில் தீபன் நடித்து படத்தை சிறப்பித்துள்ளார்.

  தேசிய விருது

  தேசிய விருது

  ஒரு எளிமையான கதையை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் போது அதனை ஈர்க்கும் வகையில் அமைக்க படத்தொகுப்பு முக்கியமான ஒன்று. அதனை சரிவர செய்துள்ளார் ஸ்ரீகர் பிரசாத். கன்னத்தில் முத்தமிட்டாள், குட்டி, தங்க மீன்கள், கடல் என பல படங்களுக்கு படத்தொகுப்பாளர் இவரே. கன்னத்தில் முத்தமிட்டாள் படம் ஸ்ரீகர் பிரசாத்துக்கு தேசிய விருதை பெற்று தந்தது. கேர் ஆஃப் காதல் படத்தை மிகவும் கேர் எடுத்து ஒவ்வொரு காட்சியையும் அழகாக செதுக்கி இருக்கிறார் .

  நெருடல்

  நெருடல்

  எளிய மனிதர்களின் வாழ்வில் மதம் எவ்வாறாக அவர்களை ஒதுக்குகிறது என்பதை சரிவர காட்டி உள்ளனர். மதங்களை கடந்த காதல் கதையாக சிறப்பாக அமைந்துள்ளது இந்த படம். நல்ல கதையில் அவ்வப்போது இடம் பெறும் பொட்டை என்ற வார்த்தை சிறிது நெருடலை உருவாக்குகிறது. இன்னொரு பக்கம் அடிக்கடி ஏற்படும் டயலாக் ம்யூட் , வசனத்தின் வார்த்தை புரியாவிட்டாலும் வாய் அசைவு பலவற்றை சிந்திக்க தூண்டூகிறது. சென்சார் அதிகாரிகளின் கட்ஸ் நன்கு புரிகிறது .

  பீ சீ சர்க்கார்

  பீ சீ சர்க்கார்

  படத்தில் பல விதமாக காதல் , பல வயதினர் காட்டும் அன்பு ,அந்த உண்மையான அன்பு காதலாக மாறுவதும் மாறியபின் ஏற்படும் அதன் முடிவு என மிகவும் ஸ்வாரஸ்யம் கூடுகிறது. குறிப்பாக வெற்றி நடித்த டாஸ்மாக் காட்சிகள் மற்றும் மும்தாஜ் சர்க்காரிடம் அவர் காட்டும் அன்கண்டிஷனல் லவ் மிகவும் ஆச்சிரிய பட வைக்கும்.புகழ் பெற்ற பீ சீ சர்க்காரின் வாரிசு தான் இந்த மும்தாஜ் சர்க்கார் .விலை மாதுவாக நடிப்பில் மிகவும் கவனம் ஈர்க்கிறார் . தாடியுடன் தோன்றும் வெற்றி தாடி இல்லாமல் வந்த பின் முகத்தில் காட்டும் சோகம் , கண்களில் காட்டும் வெறுமை என்று கதையின் அழுத்தம் புரிந்து அசத்தி இருக்கிறார்

  ரீவைண்ட்

  ரீவைண்ட்

  இந்தியா சினிமாவில் பல விதமான காதல் படங்கள் வந்து உள்ளது . குறிப்பாக காதலை உருகி உருகி சொன்ன சேரன் நடித்த ஆட்டோகிராப் , மலையாளத்தில் ப்ரேமம் என்று கடந்த கால காதலை காவியமாக படைத்தது நாம் அனைவரும் அறிந்ததே . எத்தனையோ பெண்களும் ஆண்களும் இன்னமும் கடந்த கால காதலை சுமந்து கொண்டு தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் காதலை வித்யாசமாக ரீவைண்ட் செய்து திரைக்கதையில் எதார்த்தங்களை கலந்து அற்புதமாக படைத்து உள்ளார் இயக்குனர் ஹமெம்பெர் ஜஸ்டி . கேர் ஆஃப் காதல் இயக்குனர் என்று பெருமை படும் விதமாக பலரும் இவரை பாராட்டுவர் .

  சமூகத்தின் சாடல்

  சமூகத்தின் சாடல்

  திக்கு வாயாக நடித்து படத்தில் மிகவும் கவனும் ஈர்க்கும் அப்பா , படம் முடிந்த பின்னும் மனதில் நிற்கிறார். அவர் திக்கு வாய் வசனங்களுக்கு டப்பிங் பேசியது மிகவும் பாராட்டத்தக்கது . சிலை செய்யும் செயலை அதன் வியாபாரத்தை மிகவும் நேர்த்தியாக செய்து பாரத்தை இறக்கி வைக்கிறார் நம் மனதில் .

  சரியான ரீமேக்

  சரியான ரீமேக்

  C/O Kancharapalem படத்தின் ரீமேக்கான இந்த படம் அதைப்போலவே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்துள்ளது. ரீமேக்கான படமாக இருந்தாலும் சில மாற்றங்கள் செய்து படைத்து உள்ளார் ஹமெம்பெர்.
  குறைகள் சில இருந்தாலும் நேர்மறையான விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு ரசித்து பார்க்க ஒரு அழகான காதல் கதை c/o காதல்.

  Read more about: vetri review வெற்றி
  English summary
  care of kaadhal is a movie specially released for valentines day special. Different artist from different categories have performed their best and made the film emotional and engaging love entertainment. Hemember jasti has done justice to his script and added commercial elements with human emotions . all age group audience will enjoy this movie with their childhood memories along with teen age love stories.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X