twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையில் ஒருநாள் 2 விமர்சனம்

    By Shankar
    |

    கல்பதரு பிக்சர்ஸ் ராம்மோகன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஜேபிஆர் திரைக்கதை இயக்கத்தில் சரத்குமார், சுஹாசினி, நெப்போலியன், முனீஸ்காந்த் நடிப்பில் தீபாவளி ரேஸில் கலம் இறங்கியிருக்கும் படம் சென்னையில் ஒருநாள் 2.

    ஏதாவது ஒரு படம் எதிர்பாராமல் ஓடினால் அதே வகை படங்களாக ஆனால் மோசமாக எடுத்து, இருக்கும் ஒன்றிரண்டு தமிழ் சினிமா ரசிகர்களை இயக்குநர்கள் கதற விடுவது என்பது தமிழ் சினிமாவின் தலையெழுத்து. அந்த கோட்டாவில் க்ரைம் த்ரில்லர் கேட்டகிரியில் வெளியாகி படம் பார்த்தவர்களை கொலையாளிகளாக மாற்றும் படம்தான் சென்னையில் ஒருநாள் 2.

    Chennaiyil Oru Naal 2 Review

    பீட்சா2, ஜித்தன் 2, டார்லிங் 2 என்று ஹிட் படங்களின் டைட்டில்கள் தங்களிடம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அவற்றை மொக்கை படங்களுக்கு வைத்து எல்லோரையும் ஏமாற்றுவதாக நினைத்து தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் தயாரிப்பாளர்களே போதும்... இதோட நிறுத்திக்குவோம்.

    துருவங்கள் பதினாறு, குற்றம் 23 வரிசையில் வந்திருக்கும் இன்னொரு துப்பறியும் கதை கொண்ட படம். ஆனால் அவை தந்த திருப்தியான த்ரில்லர் மொமண்டை தந்திருக்கிறதா என்று பார்ப்போம்.

    சென்னையில் இருந்து கோயம்பத்தூருக்கு இடமாற்றலாகி வரும் சரத்குமாருக்கு கையோடு ஒரு சவால் காத்திருக்கிறது. கோவை மாநகரம் முழுக்க ஏஞ்சலின் கொலை இன்றா? நாளையா? என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இந்த கண்ணுக்கு தெரியாத ஏஞ்சலினையும் கொலையாளியையும் கண்டுபிடித்து நடக்கவிருக்கும் குற்றத்தை தடுக்கும் பொறுப்பை சரத்குமாருக்கு தருகிறார் கமிஷனர் நெப்போலியன். சரத் அதை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் கதை.

    க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் கதையை திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார் புதுமுக இயக்குநர் ஜேபிஆர். இயக்குநருக்கு ராஜேஷ் குமார் மீது என்ன கோபமோ...? நாவலில் இருக்கும் பரபரப்பை திரைக்கதையில் கொண்டு வராமல் விட்டுவிட்டார். டெட் ஸ்லோ திரைக்கதை ஒரு பக்கமும், படுதிராபையான மேக்கிங் இன்னொரு பக்கமும் நம்மை கதற வைக்கின்றன.

    ஒண்ணே முக்கால் மணி நேர படம் நான்கு மணி நேரத்துக்குமேல் ஓடுவது போல ஒரு எஃபெக்ட். போதாத குறைக்கு படம் முழுக்கவே ரிப்பீட்டட் காட்சிகள். எடிட்டருக்கு ஒரு மணி நேர படத்தை ஒண்ணே முக்கால் மணி நேரமாக்கும் டாஸ்க்கை கொடுத்திருப்பார்கள் போல... பாவம் நாம்தான்!

    இயக்குநர் ஜேபிஆர், நடிகர்கள், டெக்னிஷியன்கள் உள்ளிட்ட யாரிடமுமே சரியாக வேலை வாங்கவில்லை. தெரிந்த முகங்களான சரத்குமார், சுஹாசினி, முனீஸ்காந்த் மூவரும் கூட ஏதோ கடமைக்கு நடித்திருப்பது தெரிகிறது.

    கோவையில் நடக்கும் கதைக்கு ஏன் சென்னையில் ஒருநாள் என்று டைட்டில்?

    மொத்தத்தில் சென்னையில் ஒருநாள் 2 படம் ஒரு பாடம்... யாருக்கு? வேற யாருக்கு...? நமக்கு தான்...!

    - ஆர்ஜி

    English summary
    Chennaiyil Oru Naal 2 movie Review
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X