»   »  பட விமர்சனம்

பட விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

மிக கனமான கதை. ஆனால், அதை சுமக்கத் தெரியாமல் தடுமாறியிருக்கிறார்கள்.

நாட்டில் தாண்டவமாடும் ஊழல், முறைகேடுகளுக்கு அரசியல்வாதிகளை விட, மிக முக்கியமான காரணம்அதிகாரிகள் தான் என்பது தான் கரு.

அரசியல்வாதிகளை மக்கள் 5 வருடத்துக்கு ஒரு முறை தண்டித்து விடுகிறார்கள். ஆனால், தப்பிவிடுவது இந்தகருப்பு ஆடுகள் தான். இவர்களை குடும்பத்தோடு வதைத்தால் தான் நாடு உருப்படும் என்கிறார் சிட்டிசன்.

அஜித்தின் மிக வித்தியாசமான கெட்-அப்கள், சாபு சிரிலின் செட்டிங், ரவி கே. சந்திரனின் கேமரா, தேவாவின் தூள்கிளப்பும் ரீ-ரெக்கார்டிங் எல்லாம் ஒன்று சேர்ந்து படத்தை ஹேலலோ...ஹைலசா... என தட்டுத்தடுமாறிநகர்த்துகின்றன.

டைரக்டர் இங்கிலீஷ் பட பிரியர் போலும். பேட்மேன், மேட்ரிக்ஸ், அமிஸ்டாட், வேம்பையர் என பல ஆங்கிலபடங்களை காட்சியமைப்புக்காக குண்டக்க மண்டக்க காப்பி அடித்திருக்கிறார்.

சீரியஸ் படம் என்பதால் காமெடி மிஸ்ஸிங். ஆனால், அதை சண்டைக் காட்சிகள் மூலம் நிவர்த்தி செய்யமுயற்சித்திருக்கிறார்கள்! சண்டைக் காட்சிகளில் மேட்ரிக்ஸ் ஹீரோ கீனு ரீவ்ஸ் மாதிரி நீளமான கருப்பு அங்கியைப்போட்டுக் கொண்டு திடீரென தரையிலிருந்து 15 அடி தூரம் எழும்புகிறார் அஜித். பறந்து பறந்து அடிக்கிறார்;உதைக்கிறார்.

சண்டை முடிந்தவுடன் வானிலிருந்து கைக்கு ஒரு கூலிங் கிளாஸ் வருகிறது. வேம்பையர் மாதிரி 2 ஊசிப் பற்கள்வேறு. காமெடி நடிகர்கள் இல்லாத குறையை போக்கி வைப்பது இந்த சண்டைக் காட்சிகள் தான். நன்றாகவேசிரிப்பு வருகிறது.

ஷக்கலக்க பேபியாக இருந்த வசுந்தரா தாஸ் இதில் வளர்ந்து கவர்ச்சியை அள்ளிக் காட்டுகிறார். தமிழை பாடும்அளவுக்கு இவருக்குப் பேசத் தெரியவில்லை. நிறுத்தி நிதானமாக இவர் பேசி முடிப்பதற்குள் ஒரு தம்போட்டுவிட்டு வந்துவிடலாம் போலத் தோன்றுகிறது.

இவ்வளவு சறுக்கல்கள் இருந்தாலும், கதையையும் அஜித்தின் முயற்சிகளையும் பாராட்டத்தான் வேண்டும். அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்கள் நினைத்தால் நாட்டிலிருந்து ஒரு பகுதியையே காணாமல் போகச் செய்துவிட முடியும்என்று சொல்லி அதிர வைக்கிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடற்கரைப் பகுதியில் அத்திபட்டி என்ற கிராமத்தில் வாழும் அனைவரையும் குளோஸ்செய்து அந்தப் பகுதி இருந்ததற்கான தஸ்தாவேஜூகளை காணாமல் போகச் செய்கிறார்கள் ஒரு கலெக்டர், ஒருவக்கீல் மற்றும் ஒரு இன்ஸ்பெக்டர். அவர்கள் பதவி உயர்வுகள் பெற்று சென்னை கலெக்டர், உயர் நீதிமன்ற நீதிபதி,டி.ஜி.பி. என வளர்ந்துவிட, அவர்களைக் கடத்துகிறார் சிட்டிசன்.

அவர்களைக் கடத்துவதற்காகத்தான் பல கெட்-அப்களைப் போடுகிறார் அஜித். ஆனால், சட்டக் கல்லூரியில்படிப்பை முடித்துவிட்டு வரும்போது கூட ஒரு கெட்-அப் தேவையா. ஒட்டு தாடி.. நீள முடி... பட்டம் பெறும்போது அணியும்கோட் போட்டுக் கொண்டு புயல் மாதிரி வருவது பார்க்க நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால், சும்மானாச்சுக்கும்ஒரு கெட்-அப்பா? என்னப்பா!.

அத்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 690 பேரைக் கடலில் தள்ளி கொல்வதாகக் காட்டுகிறார்கள் (காட்சியமைப்புகாப்பி அமிஸ்டாட் ஆங்கில படம்: நன்றி ஸ்பீல்ஸ்பெர்க்). பின்னர் சி.பி.ஐ. அதிகாரி நக்மா தலைமையில் பெரியகுழு அத்திப்பட்டி இருந்த இடத்தில் குழி தோண்டுகிறது. அங்கே உடல்கள் புதைக்கப்பட்டு மேலே பெரிய கல்லில்இறந்தவர்களின் பெயர்கள் செதுக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறார்கள். எப்பப்பா புதைச்சீங்க? யாருப்பா கல்லைவச்சது? படம் பார்ப்பவர்கள் குழம்புகிறார்கள்.

அஜித்தின் அப்பாவாக வரும் சீனியர் அஜித்துக்கு போடப்பட்ட மீனவர் வேடம் கன கச்சிதம். ஆனால், சுமார் அரைமணி நேரம் அவர் மட்டுமே பேசிக் (கத்திக்) கொண்டிருக்கிறார். ஒரே இரைச்சல்.

வினுச்சக்கரவர்த்தி வழக்கம்போல் எழவு கொட்டுகிறார். நக்மாவை நடிக்க வைத்திருக்கும் முதல் படம் இது தான்.மீனாவும் இருக்கிறார்.

வைரமுத்துவின் பாடல்கள் ஓ.கே. ரகம் தான். ஆனால், பின்னணி இசையில் தேவா அசத்தியிருக்கிறார். குறிப்பாகஓலங்கள்... மழைச் சத்தம் என பல நுண்ணிய விஷயங்களைச் சொல்லாம்.

ஆனால், குடுத்த காசுக்கு வஞ்சகம் செய்யாமல் 3 மணி நேரம் படம் ஓட்டுகிறார்கள். தூக்கமே வந்துவிடுகிறது.

அப்புறம் அஜித்தின் வசன உச்சரிப்பில் கம்பீரம் இல்லை. தீ மாதிரியான பாலகுமாரனின் வசனத்தைக் கூடசொதப்புகிறார், விசு படத்தில் வரும் திலீப் மாதிரி.

படத்தை பார்க்கலாம்.... ஆனால், லாஜிக் பார்க்கக் கூடாது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil