For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Coffee with Kadhal Review: யாரோ.. யாரோடி.. உன்னோட புருஷன்.. காபி வித் காதல் விமர்சனம் இதோ!

  |

  நடிகர்கள்: ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், ரைசா வில்சன், மாளவிகா, அம்ரிதா, டிடி நீலகண்டன், யோகி பாபு

  இசை: யுவன் சங்கர் ராஜா

  இயக்கம்: சுந்தர். சி

  Rating:
  3.5/5

  சென்னை: அண்ணன் காதலியை தம்பியும், தம்பி காதலியை அண்ணனும் மாறி மாறி.. திருமணம் செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட அவர்கள் ஜோடிகளை மாற்றி திருமணம் செய்து கொண்டார்களா? இல்லை கடைசியில் என்ன ஆனது என்கிற செம ட்விஸ்ட் உடன் பாலிவுட் ஸ்டைல் கவர்ச்சி படமாக இந்த காபி வித் காதலை இயக்குநர் சுந்தர். சி கொடுத்திருக்கிறார்.

  மறைந்த நடிகர் பிரதாப் போத்தன் நல்ல வேளையாக எல்லா டப்பிங்கையும் முடித்து கொடுத்த நிலையில், அவரது குரலுக்கு எந்தவொரு பங்கமும் வரவில்லை.

  பிரதாப் போத்தனின் மகன்களாக ஸ்ரீகாந்த், ஜீவா மற்றும் ஜெய் நடித்துள்ளனர். மகளாக டிடி நீலகண்டனும் போனிலேயே அவர் குடும்பம் நடத்த கிளைமேக்ஸில் ஒரு சாக்லேட் பாய் ஹீரோ சிறப்பு கேமியோ கொடுக்கிறார்.

  கமலுக்கு பிரபுதேவா, பிரபுவிற்கு ராஜு சுந்தரம்... பிரதாப் போத்தன் படத்தில் நடந்த சுவாராஸ்யம்கமலுக்கு பிரபுதேவா, பிரபுவிற்கு ராஜு சுந்தரம்... பிரதாப் போத்தன் படத்தில் நடந்த சுவாராஸ்யம்

  காபி வித் காதல் கதை

  காபி வித் காதல் கதை

  கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலையில், கொஞ்சம் தாண்டினாலும், (சில இடங்களில் தாண்டுது) கள்ளக் காதல் சீரியல் போலவே படம் மாறியிருக்கும். ஆனால், யார் யாரை காதலிக்கிறார். யாருக்கு யார் ஜோடி. அண்ணன் காதலி தம்பிக்கு மனைவியாகும் சூழல், அந்த பெண்ணுடன் எல்லாம் முடிந்து விட்டது என தம்பியை காப்பாற்ற போராடும் அண்ணன் என இடியாப்ப சிக்கல் கதையை கருகாமல் கொடுத்திருக்கிறார் சுந்தர். சி.

  கல்யாண கலாட்டா

  கல்யாண கலாட்டா

  ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், அம்ரிதா அய்யர், மாளவிகா, ரைசா வில்சன், டிடி நீலகண்டன், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன் நட்புக்காக ஆர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள படமாக செம கலர்ஃபுல்லாக காபி வித் காதல் ஏகப்பட்ட கசமுசா காட்சிகளுடன் சுந்தர்.சி படமாகவே வந்திருக்கிறது. கொஞ்சம் இந்த முறை பாலிவுட் நெடி தூக்கலாகவே உள்ளது.

  இடியாப்ப சிக்கல்

  இடியாப்ப சிக்கல்

  பிரதாப் போத்தனின் இளைய மகனனான ஜெய்யை நம்ம 'பிகில்' தென்றல் நடிகை அம்ரிதா காதலிக்கிறார். ஆனால், ஹோட்டல் பிசினஸில் ஈடுபடும் முயற்சியில் பெரிய இடத்து பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஜெய் தள்ளப்படுகிறார். ஜெய் திருமணம் செய்யப் போகும் பெண்ணை பிக்கப் செய்யப் போகும் ஜீவா, அந்த பெண்ணை (மாளவிகா) காதலிக்கத் தொடங்கி விடுகிறார். ஆனால், தம்பியின் கனவுக்காக அந்த பெண்ணை விட்டு விட்டு அப்பா பார்க்கும் இன்னொரு பெண்ணான ரைசா வில்சனை திருமணம் செய்ய ஓகே சொல்கிறார்.

  ஸ்ரீகாந்த் லீலைகள்

  ஸ்ரீகாந்த் லீலைகள்

  ஆனால், அதற்கு வேட்டு வைக்கிறார் ஜீவாவின் அண்ணன் ஸ்ரீகாந்த். அவருக்கும் ரைசா வில்சனுக்கும் ஏற்கனவே கசமுசா நடந்து விடுகிறது. இப்படியொரு இடியாப்ப சிக்கல் கதையை கையில் எடுத்துக் கொண்டு அதை எப்படி நீட்டாக கொடுக்க முடியுமோ கொடுக்க முயற்சித்து இருக்கிறார் சுந்தர். சி.

  பாசிட்டிவ்

  பாசிட்டிவ்

  சுந்தர். சி இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே பொன்னியின் செல்வன் படத்தை பார்த்தது போல யார் எந்த கேரக்டர் என மனதில் நிறுத்துவதே பெரிய பஞ்சாயத்தாக முடிகிறது. ஆனால், அத்தனை கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த பணியை அழகாக செய்துள்ளனர். டிடி நீலகண்டன் இந்த படத்தில் ஒரு நடிகையாக ஸ்கோர் செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரிய பிளஸ்.

  நெகட்டிவ்

  நெகட்டிவ்

  இப்படியொரு கலாட்டாவான படத்தில் வழக்கம் போல சுந்தர். சி காமெடியிலும் புகுந்து விளையாடி இருந்தால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கும். யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி மேரேஜ் அசெம்பிளர்களாக வந்தாலும், அவர்களின் காமெடி டிராக் பெரிதாக ஒட்டவில்லை. முதல் பாதியில் இருந்த அளவுக்கு இரண்டாம் பாதியில் எந்தவொரு ட்விஸ்ட்டும் இல்லாமல் படம் ரொம்பவே சோதிக்கிறது. அடல்ட் கன்டென்ட் சில இடங்களில் பெண் பார்வையாளர்களை கடுப்பாக்கி விடும். காபி வித் காதல் - ஒரு கப் குடிக்கலாம்!

  English summary
  Coffee with Kadhal Review in Tamil(காபி வித் காதல் விமர்சனம்): Sundar C done a triangle love story with several twists for this film. Jiiva, Jai, Srikanth, DD Neelakandan, Amritha, Malavika, Raiza Wilson, Yogi Babu and Reddin Kingsley fun filled romantic show will rule the youngsters world.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X