twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Naai Sekar Returns Review :வந்துட்டான்யா..வந்துட்டான்யா..நாய்சேகர் ரிட்டன்ஸ் பிளஸ்,மைனஸ் ரிப்போர்ட்!

    |

    Rating:
    2.5/5

    நடிகர்கள் : வடிவேலு, ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி

    இசை : சந்தோஷ் நாராயணன்

    இயக்கம் : சுராஜ்

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தில் வடிவேலு அப்பத்தா பாடலை பாடி உள்ளார்.

    ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் பிளஸ், மைனஸ் என்னவென்று பார்க்கலாமா?

    Naai Sekar Returns Review: மீண்டும் என்ட்ரி கொடுத்த வடிவேலு.. எப்படி இருக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்? Naai Sekar Returns Review: மீண்டும் என்ட்ரி கொடுத்த வடிவேலு.. எப்படி இருக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்?

    நாய் சேகர் ரிட்டன்ஸ்

    நாய் சேகர் ரிட்டன்ஸ்

    நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் கதை என்னவென்றால், ஒரு தம்பதிகளுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால், குடும்பத்தோடு கோவிலுக்கு செல்கிறார்கள். அப்போது, அங்கு வரும் ஒரு சித்தர் ஒரு நாய் குட்டியை தம்பதிகளின் கையில் கொடுத்து, இந்த நாய் குட்டியை வளர்ந்து வந்தால், உங்களுடைய அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்கிறார்.

    இதுதான் கதை

    இதுதான் கதை

    இந்த நாய்குட்டியை வீட்டுக்கு வந்ததும் வீட்டில் செல்வம் பெருகுகிறது. நாய்குட்டியின் ரகசியத்தை தெரிந்து கொண்ட வீட்டு வேலைக்காரன் அந்த நாயை கடத்தி சென்று பணக்காரன் ஆகினார். நாயின் ராசியால் பணம் வரும் என்பதை தெரிந்து கொண்ட நாய் சேகர் (வடிவேலு) அந்த நாயை தேடிச் செல்கிறார். கடைசியில் நாயை நாய் சேகர் மீட்டாரா? இல்லையா என்பது தான் நாய்சேகர் ரிட்டன் திரைப்படத்தின் மொத்த கதை.

    வடிவேலுதான் பிளஸ்

    வடிவேலுதான் பிளஸ்

    வடிவேலுவை கடந்த 5 வருடங்களுக்கு மேலாக திரையில் பார்க்க முடியாமல் தவித்த ரசிகர்கள் இந்த படத்தைக்காண ஆவலுடன் இருந்தனர் இந்த படத்தின் பிஸ்ஸே வடிவேலுதான், வழக்கமான தனது சிறப்பான நடிப்பினை நடிகர் வடிவேலு வெளிப்படுத்தியுள்ளார்.படத்தின் முதல் பாதியில் நகைச்சுவை காட்சிகள் மொக்கையாகத்தான் இருந்தன. இப்படத்தில் வடிவேலு கம் பேக் என்று சொல்லுவதற்கு வசதியாக, பல படங்களின் டிரண்டான வசனங்களை மீண்டும் பேசியுள்ளார்.

    மைனஸ்

    மைனஸ்

    வடிவேலுக்காக இந்த படத்தை ரசித்து பார்க்கலாம் என்றாலும், இப்படம் அவருக்கு கம்பேக் கொடுக்கும் படமாக என்று கேட்டால் அது இல்லை. வடிவேலு இண்ட்ரோவாகும் காட்சி சுவாரசியமாக இருந்தது. ஆனந்தராஜ், முனீஸ்காந்த் செய்யும் காமெடிகளை தவிர, மற்ற நடிகர்களின் காமெடிகள் சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை. கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் மற்றும் இயக்கம் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ்.

    ஆவரேஜ் படம்

    ஆவரேஜ் படம்

    நாய் சேகர் ரிட்டன்ஸ் ஒரு காமெடித் திரைப்படம் என்பதால், இந்த படத்தில் பெருசாக லாஜிக்பார்க்க முடியாது தான், இருந்தாலும், இந்த படத்தின் மையக்கருவே நகைச்சுவை தான் அது படத்தில் இல்லாததால் ரசிகர்கள் அப்செட்டாகி விட்டார்கள். மொத்தத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் ஒரு ஆவரேஜ் படம்தான்.

    English summary
    Actor Vaigai Puyal Vadivelu, the leading comedian and best character artist of Tamil cinema, has started his second innings Naai Sekar Returns Review in tamil.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X