For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அஸ்ட்ரோலஜி பையன் மற்றும் அஸ்ட்ரோநமி பொண்ணு செய்யும் ஜாலியான காதல்

  |

  Rating:
  3.0/5

  நடிகர்கள்: ஹரீஸ் கல்யான் , டிகங்கனா ,ரெபா மோனிகா ஜான், ரைசா

  இசையமைப்பாளர் -ஜிப்ரான்

  இயக்குனர் : சஞ்சய் பாரதி

  சென்னை: ஹரீஸ் கல்யானின் பியார் பிரேமா காதல் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதயராணி படங்களுக்கு பிறகு வெளியாகி இருக்கும் படம் தான் 'தனுசு ராசி நேயர்களே' .பொதுவாக சினிமாவில் தொடர் வெற்றிகளை ஒரு நடிகர் கொடுத்து வரும் போது அடுத்த படத்தை மிக கவனுத்துடன் தேர்வு செய்ய வேண்டும் .ஏனெனில் ஒரு சிறிய தவறு வாழ்கையை வீனாக்கி விடும் மிக பெரிய கனவுகளை உடைத்து விடும் .அதில் மிகுந்த கவனம் செலுத்தி நல்ல சுவராஸ்யம் நிரைந்த திரைக்கதையை உள்ளடக்கிய படத்தையே தேர்வு செய்திருக்கிறார் ஹரீஸ் கல்யான்.

  சினிமாவில் சாக்லேட் நடிகர்கள் என்று ரசிகைகளாள் அதிகம் ரசிகப்படும் நடிகர்களுக்கு அந்த பட்டம் வழங்கப்படும் ,அந்த அளவுக்கு தனது கடந்த இரண்டு படத்தின் மூலம் சாக்லேட் பாய்யாக வளம் வந்து கொண்டிருக்கும் ஹரீஸ் தற்போது மூன்று கதாநாயகிகளுடன் நடித்திருக்கும் படம் தான் இந்த தனுசு ராசி நேயர்களே.

  danushu raasi neyargaley is the movie based on astrology and astronomy

  தனுசு ராசி நேயர்களே படத்தில் ஹரீஸ் கல்யான் டிகங்கனா ,ரெபா மோனிகா ஜான், பிக் பாஸ் ரைசா , யோகிபாபு, முனீஸ்காந்த் ஆகியோர் நடித்து உள்ளனர். படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான்,படத்தை கோகுலம் கோபாலன் தயாரித்து இருக்கிறார் .இந்த படத்தை இயக்கி இருக்கிறார் சஞ்சய் பாரதி . இவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான சந்தான பாரிதியின் மகன்,சஞ்சய் சில படங்களில் சிரிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார், தற்போது அவர் இயக்கி இருக்கும் முதல் படம் இதுவாகும் .

  தனுசு ராசி நேயர்களே -ஜோதிடரின் பேச்சை கேட்டு தனது ராசிக்கு ஏற்ற பெண்ணை தேடுகிறார் ஹரீஸ் .ஆனால் அவரின் வாழ்வில் அவர் எடுக்கும் முடிவுகளால் கதை தலை கீழாக மாறி வெவ்வேறு பெண்களை காதலித்து பல பிரச்சனைகளில் சிக்கி தவிக்கிறார் ஹீரோ - ஹரீஸ் கல்யான் அதன் பின் என்ன என்பதே தனுசு ராசி நேயர்களே.

  danushu raasi neyargaley is the movie based on astrology and astronomy

  ஹிந்தி பிக் பாசில் ஒரு சிறந்த கன்டெஸ்டெண்டாக வளம் வந்தவர் டிகங்கனா . நல்ல பயிற்ச்சியும் முயற்ச்சியும் செய்ததால் படத்தில் அவ்வளவு அழகாகவும் தெரிகிறார். ட்ரெண்டியான காஸ்ட்யூம்ஸ் ,கவர்ச்சியான ஆடல் பாடல் என்று அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார் டிகங்கனா . மேலும் மேலும் நல்ல கதைகளை தேர்வு செய்தால் கண்டிப்பாக தமிழ் சினிமா இவரை தொடர்ந்து தட்டி கொடுக்கும் , ஹிட்டும் கொடுக்கும்.

  முனீஸ்காந்த் மற்றும் ஹரிஷ் பேசும் பல வசனங்கள் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. ஒரு இடத்தில கூட சிரிப்பு வரவில்லை என்பது தான் வருத்தமான விஷயம் . அம்மாவாக வரும் ரேணுகா யதார்த்தமாகவும் பதார்தமாகவும் எப்போவும் போல் தன் நடிப்பை காட்டியுள்ளார். பாடல்கள் ஒன்றும் அந்த அளவுக்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு இல்லை என்பது இன்னொரு மைனஸ்.

  danushu raasi neyargaley is the movie based on astrology and astronomy

  படத்தில் முதல் பாதி முழுக்க எந்த சமந்தம்மும் இல்லாமல் ஏதோ வந்தார்கள் , சென்றார்கள் என்று தான் கதாபாத்திரங்கள் அமைந்தன. எதுவும் மிக பெரிய ரசனையை தூண்டவில்லை . இயக்குனர் முதல் பாதிக்கு மட்டுமே ரீஷூட் செய்திருக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. இருந்தாலும் படத்தின் இரண்டாம் பாதி சில உணர்வு பூர்வமான காதல் காட்சிகள் மற்றும் அம்மா செடிமென்ட் , முனீஸ்காந்தின் மாமா எமோஷன் என்று பக்காவாக பிளான் செய்து இயக்குனர் தனது டாரக்ஷன் வெற்றியை பதிவு செய்கிறார்.

  மொத்த படத்தில் யோகி பாபு வரும் காட்சிகள் வெறும் ஒன்பது மணி நேரத்தில் சூட் செய்ய பட்டு இருக்கிறது. யோகிபாபு கதை சொல்ல சொல்ல , திரையில் திரைக்கதை நகர்கிறது. ஒரு இடத்தில கூட யோகி இம்ப்ரெஸ் செய்யவில்லை என்பது தான் கொடுமையான விஷயம். யோகி இருந்தால் யோகம் என்பதை இனியாவது இயக்குனர்கள் நம்பாமல் தங்களை மாற்றி கொள்ள வேண்டும் .

  danushu raasi neyargaley is the movie based on astrology and astronomy

  ஜிப்ரான் இசை பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை என்பதை காட்சிகள் புரியவைக்கிறது . டைட் ஷெடூல்ஸ் வைத்து இனி இசை அமைத்தால் இப்படி சில படங்கள் அமைந்து விடும் என்பதை ஜிப்ரான் உணர வேண்டும் . ஜிப்ரான் இசை நிறைய வேண்டும் , டைம் மேனேஜ்மென்ட் செய்து ஒவ்வொரு படமும் செய்ய வேண்டும். அவசர அவசரமாக ட்யூன் போட்டு கொடுத்திருக்கிறார் என்பது பின்னணி இசையில் நன்கு புரிகிறது.

  danushu raasi neyargaley is the movie based on astrology and astronomy

  மயில்சாமி படத்தில் மொத்தமே ரெண்டு நிமிஷம் தான் வருகிறார் ஆனால் அத்தனை பேர்ரையும் சிரிக்க வைத்தார் என்பது தான் மகிழ்ச்சியான விஷயம்.

  அஸ்ட்ரோலஜி பையன் , அஸ்ட்ரோநமி பொண்ணு என்று திரைக்கதை அமைத்த விதம் சூப்பர் ஆனால் இன்னும் கொஞ்சம் காதலில் வழுவு சேர்த்து இருந்தால் , காட்சிகள் பல மனதில் நின்று இருக்கும் . விட்ட குரை தொட்ட குறை என்பது போல பல காட்சிகள் பட்டும் படாமல் சென்ற விதம் படத்திற்கு மைனஸ்.

  ரெபா மோனிகா ஜான், மற்றும் பிக் பாஸ் ரைசா இந்த படத்தை பொருத்த வரை கௌரவ தோற்றமே , இருந்தாலும் மிக முக்கியமான கதாபாத்திரங்களாக வருகிறார்கள். டிகங்கனா செய்யும் காதல் லீலைகள் முன் இவர்களும் தங்களது பங்குக்கு காதல் செய்கிறார்கள். இந்த மூன்று பெண்களில் ஹீரோ யார் கையை பிடிக்கிறார் கடைசியில் என்பதை பக்கா பராக்டிகளாக சொல்கிறார் இயக்குனர்

  ராசி வேண்டாம் , இனி யோசி நண்பா - என்கிறார் இயக்குனர் சஞ்சய் பாரதி

  English summary
  Director sanjay barathi who is the son of popular actor and director santhaana barathi , has successfully completed his debut film in direction and with all his new ideas and potential he has done the movie with harish kalyan as lead. digangana who has also paired with harish has done justice to her character and many glitz and glamorous elements are there to make the movie entertaining.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X