twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பயத்தையும்.. சிரிப்பையும் கலந்து படையல் வைக்கும் 'டார்லிங்': பட விமர்சனம்

    By Veera Kumar
    |

    சென்னை: ஷாம் ஆண்டன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, கருணாஸ், பாலசரவணன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியுள்ள திரில் மற்றும் காமெடி கலந்த சரவெடிதான் டார்லிங்.

    கதிர் (ஜி.வி.பிரகாஷ்), நிஷா (நிக்கி கல்ராணி), குமார் (பாலசரவணன்) மற்றும் அதிசயராஜ் (கருணாஸ்) ஆகிய 4 பேரும், தற்கொலை செய்து கொள்வதற்காக கடற்கரையோர பங்களாவுக்கு செல்கிறார்கள்.

    Darling movie review

    ஆனால் அங்குதான் டிவிஸ்ட். உண்மையிலேயே நிஷாவும், குமாரும் தற்கொலை செய்துகொள்ள பங்களாவுக்கு வரவில்லை. எப்படியாவது கதிரை தற்கொலை முடிவில் இருந்து மாற்ற வேண்டும் என்பதற்காக உடன் வந்தவர்கள். எனவே கதிருடன் நெருங்கி பழகி காதலில் வீழ்த்தி தற்கொலை முடிவை கைவிட செய்ய முயலுகிறார் கிளாமர் குயின் நிஷா.

    அங்குதான் ரசிகர்களுக்கு அடுத்த டிவிஸ்ட் காத்திருக்கிறது. எப்போதெல்லாம் நிஷாவும் கதிரும் நெருங்குகிறார்களோ அப்போதெல்லாம், பெண் ஆவியொன்று நடுவில் புகுந்து காதலர்களுக்கு இடையூறு செய்கிறது. நிஷா உடம்பில் புகுந்து கொண்டு கதிரை நெருங்கவிடாமல் செய்து நண்பர்களையும் அடித்து துவம்சம் செய்கிறது. என்னடா இது... கொஞ்சம் கிளாமரா சீன் பார்க்கலாமுன்னு வந்தா இப்படி கெடுக்கிறதே பேய் என்று ரசிகர்கள் சாபம் போடும் அளவுக்கு பேய் அமர்க்களப்படுத்துகிறது.

    Darling movie review

    சரி, இந்த பேய்க்கு அப்படி என்னதான் வேணும் அப்படீன்னு கேட்டா, அப்போ ஒரு பிளாஷ் பேக். பேய்க்கெல்லாம் பிளாஷ் பேக் வைக்கிறாங்களேன்னு சலிச்சிக்காதீங்க. பிளாஷ் பேக் இல்லாத பேய் படம் என்னைக்கு வந்துருக்கு. பிளாஷ் பேக் காட்டுனாதானே ஒரு பேய் எப்படி உருவாகிறது என்ற 'அறிவியல் பூர்வ காரணம்' நமக்கு தெரியும்.

    ஓகே.. பேய் ஆராய்ச்சிய விடுவோம். விஷயத்துக்கு வருவோம். ஸ்ருதி என்ற இளம் பெண்ணும், காதலன் சிவாவும் அதே பங்களாவுக்கு சில மாதங்கள் முன்பு வரும்போது, ஐந்து வாலிபர்களால் காதலன் கண்முன்பே கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார் ஸ்ருதி. காதலன் சிவாவும் கொலை செய்யப்படுகிறார். காதலனை பிரிந்த சோகத்தில், எந்த காதலர்களையும் சேர விடக்கூடாது என்று சபதம் ஏற்று சுற்றிவருகிறது ஸ்ருதி ஆவி.

    Darling movie review

    காதலியை கரம் பிடிப்பதற்காக, ஐந்து வில்லன்களையும் தேடி பிடித்து ஆவியிடம் கதிர் ஒப்படைத்தாரா, நிஷா உடலில் இருந்து ஆவி வெளியேறியதா இல்லையா என்பதெல்லாம் மிச்ச கதை.

    கேட்பதற்கு அறுத பழசான படங்களின் பார்முலா மாதிரி இருந்தாலும், திரைக்கதை, காமெடி கொண்டு ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார் இயக்குநர் ஷாம் ஆண்டன். பேய் உருவாக்கும் அச்ச உணர்வு, நண்பர்கள் செய்யும் காமெடி ரவுசு என இருவேறு உணர்வுகளையும் ஒருசேர கலந்து கொடுத்து விருந்து படைத்துள்ளார் இயக்குநர். சபாஷ்!

    யாமிருக்க பயமே திரைப்பட பாணியிலேயே திரைக்கதை பயணித்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. மந்திரிந்த முந்திரியை சாப்பிட்டுவிட்டு பேயிடம் மாட்டிக்கொள்ளும் சாப்பாட்டு ராமன் கதாப்பாத்திரம் கருணாசுக்கு. ரொம்ப நாளைக்கு அப்புறம் கருணாஸ், பழைய கருணாசாய் திரும்பிவந்துள்ளார்.

    ஜி.வி.பிரகாஷுக்குதான் நடிப்பு வரமாட்டேன் என்று சத்தியம் செய்கிறது. முதல் படம் என்பதால் பொறுத்துக்கொள்ளலாம். ஹீரோயின் நிக்கி கல்ராணி, ரசிகர்களை ஏமாற்றாத அளவுக்கு கவர்ச்சி காண்பித்துள்ளார். ஆவி இறங்கும் வேளைகளில், தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    பொங்கல் வருகையில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி, போட்ட பணத்துக்கு மேல் பல மடங்கு லாபத்தை சம்பாதித்து கொடுக்கப்போகும் படம் டார்லிங்காகத்தான் இருக்கும் என்று 'பெட்' கட்டுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

    English summary
    Three young people decide to commit suicide and go to a beach house to die, not realizing that a ghost haunts the place.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X