Just In
- 12 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 12 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 14 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 15 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- News
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொத்துக்கொத்தாக மரணம்.. பீதியை கிளப்பும் கொரோனா
- Automobiles
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Dhadha 87 Review: காதல்... 'அதை'யும் தாண்டி புனிதமானது... மிரட்டி சொல்லும் தாதா 87! விமர்சனம்
சென்னை : திருமண உறவு என்பது வெறும் காமத்தை மட்டுமே உள்ளடக்கியதா என்ற கேள்வியை முன்வைக்கிறது தாதா 87.
வடசென்னையின் ஒரு ஹவுசிங்போர்டு குடியிருப்பு பகுதியில் ரோட் சைட் ரோமியோவாக சுற்றி திரிபவர் ஜொள்ளு பாண்டி (ஆனந்த் ரவி). அதனால் இவரை கண்டாலே தெறித்து ஓடுகிறார்கள் பெண்கள். அப்போது அந்த குடியிருப்புக்கு புதிதாக குடி வருகிறார் ஜனகராஜின் மகள் ஜெனி (ஸ்ரீ பல்லவி). ஜெனியை கண்டதும் காதலில் விழுகிறார் பாண்டி. அவரை சுற்றிச் சுற்றி வந்து தொந்தரவு கொடுக்கும் பாண்டியை, போலீசில் மாட்டிவிடுகிறார் ஜனகராஜ்.
அண்ணா அபிநந்தன் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் ஜூலி
இது ஒருபுறம் இருக்க, அந்த ஹவுசிங்போர்டு குடியிருப்பு பகுதியில் போட்டி போட்டு சட்டவிரோத தொழில்களை செய்து வருகிறார்கள் எதிர்கோஷ்டியான பாலாசிங்கும், மணிமாறனும். இவர்களை எப்படியாவது காலி செய்ய வேண்டும் என துடிக்கிறார் எம்எல்ஏ மனோஜ்குமார். ஆனால் இவர்கள் எல்லோரும் பயப்படுவது ஒரேயொருவருக்குதான். 87 வயதான ஏரியா தாதா சத்யா (சாருஹாசன்). 'பொண்ணுங்கள தொட்டா கொளுத்துவேன்' என டெரர் எண்ட்ரி கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஜொள்ளு பாண்டியை போட்டு தள்ளப்பார்க்கிறார்கள். அவர் தப்பி பிழைத்தாரா? ஜெனியுடனான காதல் என்னானது என்பது தான் படம்.
யாரும் சொல்லத் துணியாத ஒரு கதையை கையில் எடுத்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீ. அதற்கு அவர் தேர்ந்தெடுத்த நடிகர்களும் சிறப்பு. காவல் உதவி ஆய்வாளர் காட்டானாக இயக்குனரே நடித்திருக்கிறார். காதல், திருமணம் என்பது காமத்துடன் முடிந்துவிடுவதில்லை என்பதை, வெவ்வேறு வயதினரை கொண்டு உணர்த்த முயன்றிருக்கிறார். 'வெறும் ஐஞ்சு நிமிஷ சுகத்துடன் உன் காதல் முடிஞ்சிருதில்ல' என பாண்டியை பார்த்து ஜெனி கேட்கும் போது, படத்தின் சாராம்சத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
இடைவேளை வரைக்குமான முதல் பாதி படத்தின் காட்சிகள் ஏனோ தானோவென நகர்கிறது. இடைவேளைக்கு பிறகு ஜெனி யார் என்பது தெரிந்தவுடன் தான் சுவாரஸ்யம் பற்றிக்கொள்கிறது. அதன் பிறகான காட்சிகள் மிகச் சிறப்பு. அதேநேரம் சைட்கேப்பில், கமலின் சத்யா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை படத்தில் சேர்த்திருக்கிறார். வயசான கமலாக சாருஹாசனும், வயசான அமலாவாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா. எப்டி பாஸ் இப்டி எல்லாம் யோசிக்கிறீங்க.
இதுவரை நாம் பார்க்காத சாருஹாசனை இந்த படத்தில் பார்க்கலாம். பல படங்களில் சாமியாராகவும், சாதுவாகவும், அன்பை போதிப்பவராகவும் நாம் பார்த்த சாருஹாசன், இதில் தவறை தட்டிக்கேட்கும் ஏரியா தாதா சத்யா. இந்த வயதிலும் உடல் பிரச்சினைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் கெத்தாக நடித்திருக்கிறார். அதற்காகவே தனிபாராட்டுகள் சாரு சார்.
வயசான அமலாவாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா, கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிக்க வைக்கிறார். சாருஹாசன் - சரோஜா வயோதிக காதல் காட்சிகள் ரசிக்கும்படியாகவே இருக்கின்றன. ஓய்வு பெற்ற ராணுவ வீரராக, நாயகியின் தந்தையாக வரும் ஜனகராஜ் வழக்கம் போல் எமோஷனல் விருந்து படைத்திருக்கிறார். ஆனால் உடல் மிகவும் பலவீனப்பட்டுள்ளது திரையில் தெரிகிறது. பழைய சத்யா படத்துடன் ஒப்பிட்டு பார்த்தால், ஜனகராஜ், சாருஹாசனை எல்லாம் இயக்குனர் ஏன் வம்படியாக இழுத்து வந்து நடிக்க வைத்திருக்கிறார் என்பது புரியும்.
நாயகனாக வரும் ஆனந்த ரவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பொண்ணுங்க பின்னாடி ஜொள்ளுவிட்டு அலைவது, ஏரியா பசங்களுடன் சண்டைக்கு போவது, ஜெனி யார் என்று தெரிந்த உடன், கெஞ்சி கூத்தாடி ஓடுவது என சிறப்பாக செய்திருக்கிறார். அதேபோல், நாயகி ஸ்ரீபல்லவி தமிழுக்கு நல்ல வரவு. யாரும் ஏற்க துணியாத கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததுடன், அந்த கேரக்டராகவே மாறியிருக்கிறார். படம் முடிந்து வெளியே வரும் போது நிச்சயம் ஸ்ரீபல்லவியின் முகம் தான் அனைவரது மனதிலும் நிற்கும்.
அதேபோல் இப்படத்தின் மூலம் காமெடியான அறிமுகமாகியிருக்கும் கதிருக்கும் வாழ்த்துகள். கிடைத்த கேப்பில் எல்லாம் கிடா வெட்டுகிறார். கொஞ்சம் சிரிக்கவும் வைக்கிறார். ராகுல் தாத்தா, பாலாசிங், மணிமாறன், மாரிமுத்து, மனோஜ்குமார் என படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்கள் கடமையை சரியாக செய்திருக்கிறார்கள்.
லீயான்டர் லீ மார்ட்டி, அல் ரூபன், தீபன் சக்ரவர்த்தி என மூன்று பேர் சேர்ந்து இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக வந்துள்ளன.
ராஜபாண்டியின் ஒளிப்பதிவு, ஹவுசிங்போர்டு பகுதியை அச்சு அசலாக காட்டுகிறது. ஜெனி சம்மந்தப்பட்ட காட்சிகளை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் ராஜபாண்டி. இரண்டாம் பாதியை போல் முதல் பாதியையும் கொஞ்சம் நேர்த்தியாக எடிட் செய்திருக்கலாம்.
படத்தின் ஆரம்பதில், சிகரெட், மதுவுக்கு போடப்படும் எச்சரிக்கை பலகையுடன், "அனுமதி இல்லாமல் ஒரு பெண்ணை தொடுவது சட்டப்படி குற்றமாகும்" எனவும் எச்சரிக்கை செய்கிறார்கள். அதற்காக படத்தில் நிறைய காட்சிகளையும் வைத்து அட்வைஸ் செய்கிறார்கள். ஆனால் அவை செயற்கையாக தெரிவது தான் குறை.
படத்தின் கதையில் காட்டிய அக்கறையில் கொஞ்சமாவது திரைக்கதையிலும் காட்டியிருக்கலாம். அப்படி காட்டியிருந்தால், 'தாதா 87' சிறப்பான, தரமான சம்பவமாக அமைந்திருக்கும்.
(குறிப்பு: படக்குழு கேட்டுக்கொண்டதற்கு இணைங்க, படத்தை பற்றிய ஒரு சில விஷயங்களை இங்கு குறிப்பிடவில்லை)