Atrangi Re Movie Review: ஒடிடியில் வெளியான தனுஷின் பாலிவுட் கலாட்டா கல்யாணம் எப்படி இருக்கு?

Rating:
3.0/5

நடிகர்கள் :

தனுஷ்

சாரா அலி கான்

அக்‌ஷய் குமார்

இயக்குனர் : ஆனந்த் எல் ராய்

இசை : ஏ.ஆர். ரஹ்மான்

சென்னை: இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் நடிப்பில் உருவாகி உள்ள அட்ரங்கி ரே திரைப்படம் தமிழில் கலாட்டா கல்யாணம் எனும் டைட்டிலில் வெளியாகி உள்ளது.

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த ராஞ்சனா படத்திற்கு இசையமைத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகி உள்ள தனுஷின் அட்ரங்கி ரே எனும் கலாட்டா கல்யாணம் திரைப்படம் வொர்த்தா? இல்லையா? என்பது குறித்த விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.

பாலிவுட்டில் மூன்றாவது படம்

பாலிவுட்டில் மூன்றாவது படம்

இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான முதல் பாலிவுட் படம் ராஞ்சனா. தமிழில் அம்பிகாபதி எனும் டைட்டிலில் வெளியானது. இந்தியில் சக்கைப் போடு போட்ட அந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை. இரண்டாவதாக இயக்குநர் பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன் உடன் தனுஷ் நடித்த ஷமிதாப் திரைப்படமும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில், மூன்றாவதாக மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் தான் அட்ரங்கி ரே எனும் கலாட்டா கல்யாணம்.

என்ன கதை

என்ன கதை

டாக்டர் விஷு (தனுஷ்) , ரிங்கு (சாரா அலி கான்). சஜாத் அலி கான் (அக்‌ஷய் குமார்) மூவருக்கும் இடையே நடக்கும் முக்கோண காதல் கதை தான் படத்தின் கதை என்பது போல கதை ஆரம்பித்தும் செல்லும் ஆனால், திடீரென வரும் அந்தவொரு ட்விஸ்ட் படத்தை லிஃப்ட் செய்யும் என எதிர்பார்த்தால் அதே காட்சி தான் படத்தை படுகுழியில் தள்ளியது என்றே சொல்லும் அளவுக்கு கதையை தொய்வான பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டது.

சாரா அலி கான்

சாரா அலி கான்

காதலுக்காக வீட்டை விட்டு ஓடிப் போகும் ரிங்குவை அவரது பாட்டியின் ஆட்கள் துரத்துகின்றனர். டெல்லி கல்லூரியில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் மாணவரான தனுஷ் பிஹாருக்கு கேம்புக்கு வர அங்கே சோடா பாட்டில்களை அடியாட்களை நோக்கி பறக்கவிடும் சாரா அலி கானை பார்த்ததும் ஹீரோவாக துடிக்கிறார். ஆனால், சாரா அலி கான் அந்த அடியாட்களுடன் வீட்டுக்கு செல்கிறார்.

கட்டாய கல்யாணம்

கட்டாய கல்யாணம்

வீட்டை விட்டு ஓடிப் போகும் ரிங்குவிற்கு மயக்க மருந்து கொடுத்து அவரது பாட்டி மயங்க செய்கிறார். ஆளை மாற்றி தனுஷை அடியாட்கள் கடத்தி வர அவருக்கு லாஃபிங் கேஸ் கொடுத்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து தனுஷ் உடன் டெல்லிக்கு அனுப்பி வைத்து விடுகிறார் அவரது பாட்டி. லாஜிக்கே இல்லாமல் கதை செல்கிறதே என தலை பிய்த்துக் கொண்டு பார்த்தால் அடுத்ததாக அக்‌ஷய் குமாரின் அசத்தல் என்ட்ரி வருகிறது.

மேஜிக் மேன்

மேஜிக் மேன்

கட்டாய கல்யாணம் என தெரிந்ததும் டெல்லிக்கு சென்றதும் இருவரும் அவரவர் பாதையில் செல்ல வேண்டும் என ஒப்பந்தம் போட்டுக் கொள்கின்றனர். சென்னையில் தனக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போகிறது என்று தனுஷ் சொல்ல அவரது காதல் கதையை கேட்கும் சாரா அலி கான் இதெல்லாம் ஒரு காதல் கதையா இது அரேஞ்ச்ட் மேரேஜ் தான். காதல் என்றால் எப்படி இருக்கணும் என்றால் என மேஜிக் மேனான அக்‌ஷய் குமாருக்கும் தனக்கும் இடையே நடந்த காதல் கதையை சொல்கிறார். இந்து பெண்ணான ரிங்குவுக்கும் இஸ்லாமிய நபரான சஜாத் அலி கானுக்கும் காதல் ஏற்பட்டதால் தான் எங்களை பிரிக்க பார்க்கின்றனர் அவர் ஆஸ்திரேலியாவில் மேஜிக் ஷோவுக்காக சென்றுள்ளார் எனக் கூற அக்‌ஷய் குமாரின் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

நின்று போகும் நிச்சயம்

நின்று போகும் நிச்சயம்

சாரா அலி கானை பார்த்ததில் இருந்தே ஒரு வித மயக்கத்தில் இருக்கும் தனுஷ் அவரை தனது நிச்சயத்திற்கு அழைத்துச் செல்ல அங்கே இருவருக்கும் இடையே நடைபெற்ற திருமண வீடியோவை தனுஷின் காதலி பார்த்து விட்டு நிச்சயத்தை நிறுத்துகிறார். சாரா அலி கானை மணப்பெண்ணின் அப்பா திட்ட கடுப்பாகும் தனுஷ் எங்களுக்கு நடந்தது கட்டாயக் கல்யாணம் தான்

காதல் கைகூடுகிறதா

காதல் கைகூடுகிறதா

சாரா அலி கான் அக்‌ஷய் குமாரை காதலித்து வருகிறார். தனுஷ் திருமணம் செய்து கொண்டதால் சாரா அலி கானை காதலிக்க ஆரம்பித்து விட்டார். இதில் யாருடைய காதல் ஜெயித்தது என்பதை ஒரு சூப்பரான ட்விஸ்ட் உடன் சொல்லி இருக்கும் படம் தான் கலாட்டா கல்யாணம்.

படத்தின் பிளஸ்

படத்தின் பிளஸ்

எ ஃபிலிம் பை ஏ.ஆர். ரஹ்மான் என இயக்குநர் ஆனந்த் எல். ராய் பெயருக்கு முன்னதாக ரஹ்மான் பெயர் வரும் போதே படத்தின் பலம் அவர் தான் என தெளிவாக தெரிகிறது. நடிகர் தனுஷ் தனது நடிப்பால் படம் தொய்வாகும் இடங்களில் எல்லாம் தாங்கி பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் தனுஷ் தான் படத்திற்கு பக்க பலமே.

படத்தின் மைனஸ்

படத்தின் மைனஸ்

முக்கோண காதல் கதையாக ஆரம்பிக்கும் இந்த படம் சமீபத்தில் வெளியான தீனி, ஆங்கில படமான பியூட்டிஃபுல் மைண்ட் மற்றும் அதே படத்தை காப்பி பண்ண தனுஷின் 3 படங்களில் பார்த்த கதையை உட்புகுத்தி வைத்திருப்பது நல்ல ட்விஸ்ட்டாக இருந்தாலும் அந்த ட்விஸ்ட்டே மைனஸ் ஆக மாறிவிடுவது தான் படத்தின் பலவீனமே. அக்‌ஷய் குமார் விளம்பரத்தில் வருவது போலவே வந்து செல்கிறார். பாவம் நம்ம ஊர் விஜய்சேதுபதி மாதிரி அங்கே அவர் நட்புக்காக இப்படி மாறி விட்டாரே என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X