twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Wonder Women movie review : ஆறு அழகான தேவதைகளின் கதை..இதயத்தோடு ஒன்றிய வொண்டர் வுமன்!

    |

    Rating:
    3.0/5

    படம்: வொண்டர் வுமன்

    இயக்குநர் : அஞ்சலி மேனன்

    நடிகர்கள்: பார்வதி, நித்யா மேனன், பத்மப்ரியா, நதியா

    Wonder Women movie review : அஞ்சலி மேனன் இயக்கத்தில் நதியா, பத்மப்ரியா, நித்யா மேனன், சயனோரா பிலிப், அம்ருதா சுபாஷ், பார்வதி திருவோடு, அர்ச்சனா பத்மினி ஆகியோர் நடித்துள்ளனர்.

    சோனி லைவில் இத்திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

    Kalaga Thalaivan Review: உதயநிதி ஸ்டாலினுக்கு வில்லனான பிக் பாஸ் ஆரவ்.. கலகத் தலைவன் விமர்சனம்! Kalaga Thalaivan Review: உதயநிதி ஸ்டாலினுக்கு வில்லனான பிக் பாஸ் ஆரவ்.. கலகத் தலைவன் விமர்சனம்!

    வொண்டர் வுமன்

    வொண்டர் வுமன்

    மலையாள திரைப்படமான வொண்டர் வுமன் தாய்மைக்கு தயாராகும் ஆறு தேவதைகளை பற்றிய கதையாகும். இதில், நடிகை நதியா சுமனா என்ற மகப்பேறு பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறார். இந்த வகுப்பில் மகப்பேறு காலத்தை எப்படி எதிர்கொள்வது, மகப்பேறு காலத்தில் நடந்து கொள்ளும் முறை, இந்த காலகட்டத்தில் கணவர்கள் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அழகாக சொல்லிக் கொடுக்கிறாள்.

    ஆறு கர்ப்பிணிகள்

    ஆறு கர்ப்பிணிகள்

    இந்த பயிற்சி வகுப்பிற்கு பத்மப்ரியா, நித்யா மேனன், சயனோரா பிலிப், அம்ருதா சுபாஷ், பார்வதி திருவோடு, அர்ச்சனா பத்மினி என்ற ஆறு கர்ப்பிணிப் பெண்கள் வருகிறார். இந்த பயிற்சி வகுப்பில் தாய்மைக்காக தன்னைத் தயார்படுத்திக் கொள்வது மட்டும் இல்லாமல், ஆணாதிக்கம், இந்தி திணிப்பு, பச்சாதாபம், பெண்ணியம் போன்ற சமூக பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் விவாதிக்கிறார்கள்.

    உணர்வு பூர்வமான கதை

    உணர்வு பூர்வமான கதை

    இந்த படத்தின் கதை சொல்லும்படியாக எதுவும் இல்லை என்றாலும், கர்ப்பிணியாக இருக்கும் கணவன் மனைவியே நடக்கும் ஒரு எமோஷனலை இயக்குநர் அஞ்சலி மேனன் அழகாக சொல்லி இருக்கிறார். கர்ப்பம், தாய்மை, சகோதரிகள், நட்பு என அனைத்தையும் ஒரு கலவையாக இயக்குநர் கொடுத்து இருக்கிறார்.

    பிளஸ்

    பிளஸ்

    இந்த படத்தின் பிளஸ் என்று பார்த்தால் இது போன்ற ஒரு கதையை படமாக எடுத்ததே மிகப்பெரிய பிளஸ் தான். இதற்கு முன் இது போன்று கர்ப்பிணிகளை வைத்து எந்த படமும் வந்தது இல்லை. இந்த படத்தின் பல காட்சிகள் உணர்வு பூர்வமாகவும் ரசிக்கும்படியும் இருந்தது . அதுமட்டும் இல்லாமல் ஸ்க்ரீன் பிளே, மற்றும் இசையும் மனதை வருடியது.

    மைனஸ்

    மைனஸ்

    படம் ஆமை வேகத்தில் நகர்ந்து டாக்குமெண்டரி படம் போல இருந்தது. இதுதான் படத்தின் கதை என்று சொல்லும் அளவுக்கு அழுத்தமாக எந்த கதாபாத்திரத்தின் கதையும் சுவாரசியமாக இல்லாமல் மேலோட்டமாக சொல்லப்பட்டுள்ளது. இருந்தாலும் அஞ்சலி மேனனின் இந்த முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.

    அழகான நடிப்பு

    அழகான நடிப்பு

    நடிகை பார்வதி விவாகரத்து செய்ய காத்திருக்கும் மினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் அழுத்தமானதாக உள்ளது. மேலும் பத்மப்ரியா வேணியாகவும், நித்யா மேனன் நோராவாக நடிக்கிறார். ஒவ்வொரு உறவுக்கும், குறிப்பாக கர்ப்ப காலத்தில் அன்பும் அரவணைப்பும் முக்கியமானது என்பதை படம் உணர்த்துகிறது.

    English summary
    Anjali Menon’s Wonder Women about six pregnant women from different walks of life is more than just an awareness story about how to be prepared for motherhood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X