Just In
- 11 min ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 33 min ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 45 min ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
- 59 min ago
பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்…. அருண்பாண்டியன் சிறப்பு பேட்டி
Don't Miss!
- News
வேடசந்தூர் யாருக்கு? மல்லுக்கட்டும் காங்.- உதயசூரியன் சின்னம் வரைந்து பிரசாரத்தில் குதித்த திமுக
- Education
UPSC 2021: ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Sports
பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு
- Lifestyle
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Disco Raja Review : 35 வருஷத்துக்கு முன் உயிரிழந்த ரவுடிக்கு மீண்டும் உயிர் கொடுத்தால்..?
சென்னை: முப்பத்தைந்து வருஷத்துக்கு முன் உயிரிழந்த ரவுடிக்கு மீண்டும் உயிர் கொடுத்தால் அவர் என்ன செய்கிறார் என்பதுதான் டிஸ்கோ ராஜா.
லடாக்கில், டிரெக்கிங் செல்லும் இளைஞர்கள், 35 வருடத்துக்கு முன் உறைந்த உடல் ஒன்றை மீட்கிறார்கள். அதை லேப் ஒன்றுக்கு அனுப்ப, அதை பரிசோதனை எலியாகப் பயன்படுத்த நினைக்கிறார் மருத்துவர். 'சப்ஜெக்டான' இந்த உடலுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயற்சிக்கிறார்கள்.
ஒர்க் அவுட் ஆகிறது. உயிர் வந்துவிட்டது, ஆனால் நினைவில்லை. ஒரு கட்டத்தில், தான் யார் என்பதும் தன்னை ஒரு கும்பல் கொன்றது என்பதும் 'சப்ஜெக்ட்'டுக்கு தெரிந்துவிடுகிறது.
இதற்கிடையே, அந்த சப்ஜெக்ட்டை போல உருவம் கொண்ட வாசுவை அவரது குடும்பத்தினர் தேடிவருகின்றனர். டெல்லியில் இருக்கும் சப்ஜெக்ட்டை டிவியில் பார்த்து வாசுவென நினைத்து அங்கு வருகிறார்கள் உறவினர்கள். தான் வாசு இல்லை, டிஸ்கோ ராஜா என்கிறார் சப்ஜெக்ட்! சப்ஜெக்ட் யார்? அவரைக் கொன்றது யார்? வாசு யார்? என்பதை நீட்டி முழக்கிச் சொல்கிறது படம்.
எடுத்துக்கொண்ட கதையில் கவனம் ஈர்த்த இயக்குனர் விஐ ஆனந்த், முதல்பாதிவரை அசத்தலாகக் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் பின்பாதி?
பிளாஷ்பேக் காட்சியில், இயர்போன் மாட்டியபடி டிஸ்கோவுக்கு கை கால்களை ஆட்டி ரவிதேஜா அடிக்கும் லூட்டிகள் கலகலப்பு. பாடலைக் கேட்டவாறு அவர் ஆக்ரோஷ ஆக்ஷன் அவதாரம் எடுப்பதை அப்படி ரசிக்கிறார்கள், ரசிகர்கள். எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் அவர், வாய் பேச முடியாத பெண்ணை விரட்டி விரட்டி காதலித்து திருமணம் முடிப்பது, ஒரு கட்டத்தில் எல்லாத்தையும் விட்டுவிட்டு மனைவியுடன் வேறு வாழ்க்கைக்கு செல்வது, எதிரி பாபி சிம்ஹாவுக்கு சவால் கொடுப்பது என நிறைவான நடிப்பு.
மற்றொரு கேரக்டரில் சாதராண இளைஞன் வாசு. படுக்கையில் இருக்கும் அப்பா, உடல் ஊனமான உறவினர் குழந்தை என மெகா குடும்பம்... அவர்களுக்காக இரவு பகலாக உழைக்க வேண்டிய பொறுப்பு என அப்பாவி நடிப்பில் கவனிக்க வைக்கிறார். அவருக்கு சரிசமமாக, பர்மா சேது கேரக்டரில் பம்பரம் சுற்றுகிறார் பாபி சிம்ஹா. அடிதடி, கொலை, டூப்ளிகேட் தொழில் என அடாவடி தாதா கேரக்டர். இதுப் போன்ற கேரக்டர் எல்லாம் அல்வா சாப்பிடுவது போல ஐயாவுக்கு. அதை செவ்வனே செய்கிறார்.
டைமிங் காமெடியில், ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார் வெண்ணிலா கிஷோர். இன்னொரு காமெடியனான சுனில், வேறு அவதாரம் எடுத்திருக்கிறார் இதில். உத்தர் குமார் கேரக்டரில் மிரட்டல். படத்தின் தன்யா ஹோப், பாயல் ராஜ்புத், நபா நடேஷ் என மூன்று ஹீரோயின்கள். பாயல் ராஜ்புத்துக்குத்தான் நடிக்க வாய்ப்பு. கொஞ்ச நேரமே வந்தாலும் ஈர்க்கிறார். மற்றவர்களுக்கு அதிக வேலை இல்லை.
பின்பாதி கதை சென்னையில் நடப்பதால், அங்காங்கே தமிழ் வசனங்களையும் தூவியிருக்கிறார்கள். தமனின் பின்னணி இசை கதையோடு பயணிக்க வைக்கிறது. கார்த்திக்கின் கேமரா, 80 களையும் தற்போதைய காட்சிகளையும் அழகாக வேறுபடுத்தி காட்டுகிறது. தொடர் தோல்வியில் இருந்து மீள இந்தப் படம் கைகொடுக்கும் என்று நினைத்திருந்த ரவிதேஜாவுக்கு ஆறுதலை மட்டுமே கொடுத்திருக்கிறது டிஸ்கோ ராஜா.
இப்படித்தான் இருக்கும் என்று யூகிக்கக் கூடிய திரைக்கதை, தேவையில்லாத பாடல் காட்சி, நீளமான பிளாஷ்பேக், லாஜிக் மீறல்கள் ஆகியவை மைனஸ். 70 வயது ஆள், முப்பத்தைந்து வயது தோற்றம், மெட்ராஸ் கபே, டிஸ்கோ டான்ஸ் என செல்லும் கதையில் அங்காங்கே வரும் ஆஹா ட்விஸ்ட்கள் ரசிக்க வைக்கின்றன. ஆனால் அதுமட்டும் போதாதே!