Don't Miss!
- News
2023-24ம் ஆண்டு மத்திய பட்ஜெட்.. 5 பெரும் எதிர்பார்ப்புகள் என்னென்ன? வருமான வரி சலுகை இருக்குமா?
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Lifestyle
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Sita Ramam Twitter Review: துல்கர் சல்மானின் சீதா ராமம் தூள் கிளப்பியதா? தூசி தட்டியதா?
சென்னை: நடிகையர் திலகம் படத்தை தயாரித்த வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள சீதா ராமம் திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 5) திரைகளில் வெளியாகி உள்ளது.
வைஜெயந்தி மூவிஸ் பேனரில் அடுத்ததாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் புராஜெக்ட் கே படத்தில் நடித்து வரும் பிரபாஸ் சமீபத்தில் நடைபெற்ற சீதா ராமம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படத்தை பெரியளவில் புரமோட் செய்தார்.
தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் காதல் காவியமாக உருவாகி உள்ள சீதா ராமம் எப்படி இருக்கு என நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..
அந்த 3 ஹீரோக்களுடன் மட்டும் நடிக்க மாட்டேன்...ஏன் ஜான்வி கபூருக்கு அவங்களுடன் என்ன பிரச்சனை?

பிரம்மாண்ட காதல் கதை
இந்த ஆண்டு வெளியான பிரபாஸின் பிரம்மாண்ட காதல் காவியம் திரைப்படமான ராதே ஷ்யாம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், இன்று வெளியாகி இருக்கும் துல்கர் சல்மானின் பிரம்மாண்ட காதல் காவியத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர். காஷ்மீர், பாகிஸ்தான் என திரைக்கதை நீள்வதால் ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் நிறைந்து இருக்கின்றன. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடித்த கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், சச்சின் கடேக்கர் என சிறந்த நடிகர்களும் இருப்பது இந்த படத்திற்கு கூடுதல் பலம்.

சாலிட் ஹிட்
இந்தியாவில் வெளியாகும் முன்னதாகவே அமெரிக்காவில் வெளியான சீதா ராமம் படத்திற்கு நல்ல பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. அதிக பொருட்செலவில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஆழமான திரைக்கதையை வைத்து இயக்குநர் பாராட்டுக்களை அள்ளி இருக்கிறார். சீதாவை ராமனையும் பற்றி ராஷ்மிகா மந்தனா தேடும் கதையாக இந்த படத்தின் கதை விரிகிறது. இந்த வாரம் ரசிகர்கள் பார்க்கும் சாலிட் படமாக இந்த படம் இருக்கும் என ரமேஷ் பாலா விமர்சித்துள்ளார்.

தியேட்டரில் பாருங்க
காதல் படமாக இருந்தாலும், குடும்பத்தோடு படத்தை பார்க்கலாம். இரண்டாம் பாதி சூப்பர். பொறுமையாக ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என நினைக்காமல் தியேட்டரில் போய் பாருங்க, பிரம்மாண்ட விஷுவல்ஸை அங்கே தான் ரசிக்க முடியும் என இந்த நெட்டிசன் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

மலையாளத்தை தாண்டி
சீதா ராமம் நேரடி தெலுங்கு படம் என்றாலும் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. மலையாளத்தை தாண்டி ஒவ்வொரு முறையும் துல்கர் சல்மான் படங்களில் நடித்தாலும், அழகான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து அசத்தி விடுகிறார் என துல்கர் சல்மான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிம்பிசாரா vs சீதா ராமம்
டோலிவுட்டில் இன்று பிம்பிசாரா மற்றும் சீதா ராமம் படங்களுக்கு இடையே இன்று கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது. பிம்பிசாரா படம் தான் பெஸ்ட் என ரசிகர்கள் சண்டை போட்டு சீதா ராமம் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இரண்டு படங்களுமே நல்லா இருக்கு என்றும் ரசிகர்கள் சண்டை வேண்டாம் சமாதானமாக போகலாம் என்றும் பதிவிட்டு வருவதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.