»   »  பாட்டு எப்படி?

பாட்டு எப்படி?

Subscribe to Oneindia Tamil

இசை: கார்த்திக் ராஜா

பாடல்கள்: முத்துக்குமார்

இயக்கம்: அழகம் பெருமாள்

நடிப்பு: மாதவன், ஜோதிகா

தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா, தஞ்சாவூரு ராணி தஞ்சாவூரு ராணி: பீரியட் பாடலுக்கு உரிய இசையுடன் கிராமஇசையையும் கலக்கி அசத்தியிருக்கிறார் கார்த்திக் ராஜா.

காதல் வயப்பட்ட ஒரு பெண். ஒரு இளைஞன். இருவரின் மனமும் அலைந்து அலைந்து திரிசங்கு சொர்க்க நிலையில் படும் இனிய அவஸ்தை தான் பாடல். நல்ல தமிழ்வார்த்தைகளால் நம்மைக் கட்டிப்போடுகிறார் பாடலாசிரியர் முத்துக்குமார்.

ஹரீஷ், ராகவேந்தர், சுஜாதா இணைந்து பாடியிருக்கின்றனர்.

ரகசியமாய்: ஹரிஹரன், சாதனா சர்க்கம், ராமநாதன் ஆகியோர் இணைந்து வித்தியாசமாகப் பாட முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.இவர்களின் குரல் வளம் பாடலுக்கு ஹைலைட்.

ரகசியமாய், ரகசியமாய் புன்னகையிட்டால் பொருள் என்னவோ...

அதியசமாய், அவசரமாய் மொழி தொலைந்தால் பொருள் என்னவோ...

இலை வடிவில் இதயம் இருக்கும்...

மலை வடிவில் அது கனக்கும்

வாவ்! ரசித்து ரசித்து எழுதியிருக்கிறார் பாடலாசிரியர்

அத்தான் வருவாக, ஒரு முத்தம் தருவாக: ஏதோ தப சுப்ரபாதம் மாதிரி ஆரம்பித்து ரொமான்ஸ்ல கொண்டுபோய் முடிக்கிறார்கள். இந்தப் பாட்டு ஒரு ஐ.எஸ்.ஐ. மார்க் கிராமத்தை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்துநிறுத்தி விடுகிறது.

இடையிடையே கொஞ்சம் மியுசிக் போரடித்தாலும், அதை மறக்கடிக்கிற மாதிரி மால்குடி சுபா, சித்ரா, சிவராமன்ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

கிருஷ்ணா கிருஷ்ணா மாய கிருஷ்ணா: இசை இரச்சல் அதிகம். பாட்டு வரிகளே வெளியே கேட்டுவிடாதஅளவுக்கு ரகுமான் ஸ்டைல் பாட்டு.

பாப் இசையா, கிராமத்து இசையா, மெலோடியஸ் இசையான்னு இனம் பிரித்துப் பாக்க முடியவில்லை. கொஞ்சம்போர்தான். ஹரீஷ், ராகவேந்திரா, டி.கே.கார்த்திக் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

உன் பேர சொன்னாலே உள்நாக்கு தித்திக்கும்: உன்னி கிருஷ்ணனுக்காக இந்த பாட்டைக் கேட்கலாம்.சுஜாதாவும் முயற்சி பண்ணியிருக்கிறார்.

இந்தப் பாடலைக் கேட்கும்போது ஏதோ பழைய பாட்டு ஒன்றும் ஞாபகம் வருகிறது. அங்கேயிங்கே உல்டாபண்ணி போட்டிருப்பார்களோ என்று தோன்றுகிறது.

சுற்றும் பூமி: இந்தப் பாடலைக் கேட்கும்போது போரடித்துவிடுகிறது, எப்படா முடியும் என்று நம்மை அடுத்தபாடலுக்கு ரெடியாகச் செய்கிறது.

மொத்தத்தில் சொன்னால் நல்ல இசை, நல்ல பாடல் வரிகள். கார்த்திக் ராஜா- முத்துக்குமார் காம்பினேஷன்இன்னும் நிறையவே சாதிக்க வாய்ப்பிருக்கிறது.

Read more about: dum dum dum, movie, music, singer, songs
Please Wait while comments are loading...