For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'எங்க வீட்டு மாப்பிள்ளைக்கு மறதி வந்தா பொண்ணு தருவாங்களா'... கஜினிகாந்த் விமர்சனம்!

  |

  Rating:
  3.0/5
  Star Cast: ஆர்யா, சாயீஷா, ராஜேந்திரன், சதீஷ்
  Director: சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார்
  சென்னை: ஞாபகமறதி குறைபாடோடு இருக்கும் நாயகன், அதனால் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதை காமெடியாக சொல்லும் படம் 'கஜினிகாந்த்'.

  கதை இது தான்

  தீவிர ரஜினி ரசிகரான நரேன் தனது மகனுக்கு (ஆர்யா) ரஜினிகாந்த் என பெயர் வைத்து பில்லா, ரங்கா, பாட்ஷா ரேஞ்சுக்கு மகன் மாசாக வரணும்னு ஆசைப்படுறார். ஆனால் மகனோ தர்மத்தின் தலைவன் ரஜினிகாந்த்தின் மறுபிறவியாக வளர்கிறார். ஆமாங்க படத்துல ஆர்யாவுக்கு ஞாபகமறதி குறைபாடு. ஆதனால அவர எல்லாரும் கஜினிகாந்துனு கலாய்க்கிறாங்க.

  ஏதாவது ஒரு விஷயத்த செய்யும் போது, நடுவுலா ஏதாவது நடந்துட்டா, முன்னாடி செஞ்ச வேலைய சுத்தமாக மறந்துவிடும் ஆர்யாவுக்கு யாருமே பொண்ணு தர மாட்டேங்குறாங்க. அதுல ஒருத்தர் ஹீரோயின் சாயிஷாவோட அப்பா சம்பத். ஆனா ஆர்யாவுக்கு சாயிஷா மேல காதல் மலர, அவர துரத்தி துரத்தி டாவடிக்கிறாரு. வழக்கம் போல ஒரு கட்டத்துல சாயிஷாவும் ஓ.கே. சொல்ல, 'நான் நோ சென்னா பையன நீ எப்படி காதலிக்காமன்னு' வில்லனா மாறுகிறார் சம்பத். இதை எப்படி சமாளிச்சு நம்மாளு காதலியை கரம் பிடித்தார் என்பது காமெடி சரவெடியான மீதிக்கதை.

  தெலுங்கு ரீமேக்

  தெலுங்கு ரீமேக்

  தெலுங்குல வெற்றி பெற்ற ‘பலே பலே மகாடிவோய்' படத்தோட தமிழ் ரீமேக் தான் இந்த கஜினிகாந்த். தர்மத்தின் தலைவன் படத்துல ஞாபகமறதி நோய் உள்ள பேராசிரியா ரஜினி நடித்த அந்த சின்ன போர்ஷன மட்டும் எடுத்து டெவலப் செய்த படம் தான் இது. தமிழில் ரீமேக் செய்திருந்தாலும், நம்ம ஆடியன்சுக்கு தகுந்த மாதிரி கொடுத்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.

  முயற்சி திருவிணையாக்கும்

  முயற்சி திருவிணையாக்கும்

  ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுகுத்துனு தன்னோட முந்தைய இரண்டு படங்களையும் அடல்ட் காமெடி படமா கொடுத்து கெட்ட பேர சம்பாதிச்ச சந்தோஷ், தன்னாலயும் பேமிலி என்டர்டெயினர் படம் எடுக்க முடியும்னு நிரூபிக்கிறத்துக்காகவே இந்த படத்த இயக்கி இருக்கார். அவரோட முயற்சி வீண் போலக. கஜினிகாந்த் ஒரு முழுமையான பேமிலி என்டர்டெயினர் படம் தான்.

  காமெடி சரவெடி

  காமெடி சரவெடி

  படம் ஆரம்பிக்கிறதுல இருந்து முடியுற வரைக்கும் காமெடி சரவெடி தான். பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி படங்களுக்கு பிறகு ஆர்யாவுக்கு முக்கியமான படமான கஜினிகாந்த் இருக்கும். நடுவுல கொஞ்சம் டல்லடிச்ச ஆர்யாவோட மார்கெட்ட பிசியாக்க கஜினிகாந்த் உதவியிருக்கு. எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில கிடைச்ச உற்சாகம் திரையில் தெரியுது பிரதர்.

  சந்தானம் இல்லைனா என்ன

  சந்தானம் இல்லைனா என்ன

  சந்தானம் இல்லைன்னா என்ன, சதீஷ், கருணாகரன்னு கூட்டணிய மாத்தி காமெடி பண்ண முடியும்னு நரூபிச்சிருக்காரு ஆர்யா. உண்மையிலேயே ஆடியன்ஸ சிரிக்க வைக்க முயற்சி செய்து வெற்றி பெற்றிருக்காரு.

  சதீஷின் காமெடி பஞ்ச்

  சதீஷின் காமெடி பஞ்ச்

  படத்துல சதீஷோட காமெடி பஞ்ச் எல்லாமே அப்ளாஸ் அள்ளுது. ஆர்யாவ கலாய்க்கிறதுல சந்தானத்துக்கு நான் சலைத்தவன் இல்லன்னு காட்டியிருக்கார். கருணாகரன், மொட்ட ராஜேந்திரன், நரேன், உமா பத்மாநாபன், சம்பத், சாயிஷா, மதுமிதானு எல்லோரையுமே காமெடி பண்ண வெச்சிருக்கார் இயக்குனர்.

  அந்த பாத்ரூம் சீன்

  அந்த பாத்ரூம் சீன்

  சம்பத்துக்கு பயந்து ஆர்யாவும், நரேனும் பாத்ரூம் உள்ள மறைஞ்சிக்கிற சீன் காமெடி அணுகுண்டு. தியேட்டரே குளுங்கி, குளுங்கி சிரிக்குது. அதேபோல கணவனும், மனைவியும் அண்ணன், தங்கச்சி போல பேசிக்கிற அந்த சீனும் கிச்சிகிச்சு மூட்டி சிரிக்க வைக்குது.

  கலக்கல் சாயிஷா

  கலக்கல் சாயிஷா

  அழகு பொம்மை சாயிஷா இந்த படத்துலயும் டான்ஸ்ல கலக்கியிருக்காங்க. ஹோலா ஹோல பாட்டுலா தெறிக்கவிட்டிருக்காங்க. ஆனா நம்ம பிரதர் தான் டப் கொடுக்க முடியாம சான்சிங்குல 'அஹம் பிரம்மாஸ்மினு' எஸ் ஆகுறார்.

  பாட்டு புது ரூட்டு

  பாட்டு புது ரூட்டு

  ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுகுத்து, கஜினிகாந்த்னு, இயக்குனர் சந்தோஷோட ஃபேவரைட் இசையமைப்பாளரா இருக்கிறவர் பாலமுரளி பாலு. வெரைட்டியான நம்பர்ஸ்ல தாளம் போட வெச்சிருக்காரு. ஹோலா ஹோலா பாட்டும், பார் சாங்கும் ஒரு கொண்டாட்டமான ஃபீல் கொடுக்குது. அதே நேரத்துல ஆரியனே பாட்டு செம மெலடி. அங்கங்க சின்ன சின்ன பிட்ஸ்சா ஒலிக்கிற கருகரு விழிகள் காதுக்குள்ள இனிமையா ரீங்காரமிடுது. பின்னணி இசைக்கு பெரிய ஸ்கோப் இல்லைனாலும் நிறைய டீடெயிலிங் செஞ்சிருக்காரு. சபாஷ் பாலமுரளி பாலு.

  எல்லாம் அழகு

  எல்லாம் அழகு

  பல்லுவோட கேரமா படத்துல வர்ற எல்லாரையுமே அழகா காட்டியிருக்கு. அதேபோல பிரசன்னா ஜி.கே.வின் கத்திரி தேவையானத மட்டுமே வைத்து, மத்ததை எல்லாம் பக்காவா வெட்டியிருக்கு.

  டபுள் மீனிங் வசனங்கள்

  டபுள் மீனிங் வசனங்கள்

  படத்தோட மைனஸ்னு குறிப்பிடனும்னா ஒரு சில இடங்கள்ல வர்ற டபுள் மீனிங் வசனங்கள் தான். கருணாகரனுக்கு படத்துல பெரிய வேலை ஏதும் இல்ல. உள்ளேன் ஐயானு அட்டன்டென்ஸ் மட்டும் கொடுக்கிறார். மொட்ட ராஜேந்திரனோட ஆரம்ப காட்சிகள் சிரிப்ப வர வெச்சாலும், தொடர்ந்து அவர் செய்யும் வழக்கமான மேனரிசங்கள் 'கடுப்பேத்துறாங்க மைலார்டுனு' புலம்ப வைக்குது. ஆனா இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களை ஒப்பிடும் போது, இது எவ்வளவோ பரவாயில்லை. அதனால இந்த மாதிரி படங்களயே தொடர்ந்து கொடுங்க முயற்சி செய்யுங்க சந்தோஷ்.

  டைவர்ட் ஆகாத காமெடி

  டைவர்ட் ஆகாத காமெடி

  படத்தில் ஆர்யா பலமுறை டைவர்ட் ஆனாலும், காமெடியில் இருந்து டைவர்ட் ஆகாமல் பயணிக்குது கதை. அதனால நீங்களும் தியேட்டருக்கு போய் கஜினிகாந்த் பார்த்து, மன அழுத்தத்தில் இருந்து 'டேக் டைவர்ஷன்' ஆகலாம். சிரிக்க மறந்துடாதீங்க.

  English summary
  Actor Arya starring Gajinikanth, directed by Santhosh P.Jayakumar is a full length family entertainer comedy movie, which assures stress relief for two and half hours.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X