For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Gangs of Madras Review: ரத்தம் தெறிக்க தெறிக்க..ஆண்களை வேட்டையாடும் பெண் புலி.. கேங்ஸ் ஆப் மெட்ராஸ்

  |

  Rating:
  2.5/5
  Star Cast: ஆடுகளம் நரேன், டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், கலையரசன், பிரியங்கா ரூத்
  Director: சி வி குமார்

  சென்னை: கணவனை கொலை செய்தவர்களை மனைவி பழிவாங்கும் கதை தான் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் திரைப்படம்.

  தன்னையோ, தனக்கு பிடித்தவர்களையோ யாராவது அடித்தால், அது யாராக இருந்தாலும் அவர்களை திருப்பி அடிக்கும் குணம் படைத்தவர் ஜெயா (பிரியங்கா ருத்). வீட்டின் கடைக்குட்டியான ஜெயா, கல்லூரியில் தன்னுடன் படிக்கும் இப்ராஹிம் (அசோக் குமார்) மீது காதல் கொள்கிறார். இந்த காதலுக்கு ஜெயா வீட்டில் எதிர்ப்பு வருகிறது.

  Gangs of Madras review: Revenge of a girl for her husbands murder

  வீட்டைவிட்டு வெளியேறி ரஸ்யா சுல்தானாவாக மாறி இப்ராஹிமை மணக்கிறார். போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ராவுத்தரிடம் வேலைக்கு சேர்கிறார் இப்ராஹிம். ராவுத்தரின் இரண்டாவது மகன் ஹுசேனின் பார்வை ரஸ்யா மீது விழுகிறது. இதனை முதலில் கண்டிக்கும் ராவுத்தர், பின்னர் மகனின் ஆசைக்காக போலீசை வைத்து இப்ராஹிமை என்கவுண்டரில் போட்டுத் தள்ளுகிறார்.

  ராவுத்தருக்கு மிகவும் நெருக்கமான நண்பர் அப்துல்லா (ராமதாஸ்) மூலம் ரஸ்யாவுக்கு இந்த உண்மை தெரிய வருகிறது. ராவுத்தரையும், அவருடைய இரண்டு மகன்களையும் பழிவாங்க புறப்படுகிறார் ரஸ்யா. இதற்காக ராவுத்தரின் எதிரி பாக்சியின் (டேனியல் பாலாஜி) உதவியை நாடுகிறார் ரஸ்யா. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் ரஸ்யாவுக்கு உதவுகிறார் பாக்சி. முழு கேங்ஸ்டராக மாறி, ராவுத்தர் அண்ட் கோவை ரஸ்யா எப்படி பழிவாங்குகிறார் என்பது தான் மீதிப்படம்.

  Gangs of Madras review: Revenge of a girl for her husbands murder

  ஒரு பெண் தனது கணவனின் மரணத்திற்காக கேங்ஸ்டராக மாறி, கொலைகாரர்களை பழிவாங்கும் கதை தமிழுக்கு புதிது. அந்த வகையில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் சி.வி.குமார். படத்தின் மேக்கிங் ஸ்டைலும், ராவான காட்சிகளும் ரசிக்கும்படியாக இருக்கிறது. ஹீரோயின் கதாபாத்திரத்தை மிக வலிமையானதாக படைத்திருக்கிறார் சி.வி.குமார்.

  முதல் அரை மணி நேரக்காட்சிகள் மிக யதார்த்தமாக நகர்கிறது. அதற்கு அடுத்து, வழக்கமான கமர்சியல் சினிமா பாணியில் பயணிக்க தொடங்கிவிடுகிறது படம். இறுதி காட்சி வரை அந்த சினிமாத்தனம் தொடர்கிறது. திரைக்கதையில் நிறைய லாஜிக் ஓட்டைகள் வெளிப்படையாக தெரிகின்றன.

  Gangs of Madras review: Revenge of a girl for her husbands murder

  படத்தின் மிகப்பெரிய பலம் பிரியங்கா ருத்தின் நடிப்பும், ஷ்யாமலங்கனின் பின்னணி இசையும் தான். முதல் காட்சியில் ஒத்தஜடை ஜெயாவாக பக்கத்து வீட்டு பெண்கள் போல் தோற்றமளிக்கிறார் பிரியங்கா. ரஸ்யாவாக மாறிய பிறகு அப்படியே முஸ்லீம் பெண்ணாக தெரிகிறார். பேண்ட் சட்டை போட்டு, டாம் பாய் லுக்கில், ரவுடிப் பெண்ணாகவே மாறிவிடுகிறார். காதல், அழுகை, இழப்பின் வலி, பழிவாங்கும் உறுதி, ஆக்ஷன் காட்சிகள் என பன்முக நடிப்பில் மிரட்டி இருக்கிறார் பிரியங்கா.

  ஷ்யாமலங்கனின் பின்னணி இசை தான் படத்தின் உயிர் நாடி. ஒவ்வொரு காட்சியையும் தனது இசையால் தூக்கி நிறுத்துகிறார். கொஞ்சம் சந்தோஷ் நாராயணன் சாயல் தெரிந்தாலும், இந்த படத்திற்கு மிகப் பெரிய பலம் பின்னணி இசை தான்.

  Gangs of Madras review: Revenge of a girl for her husbands murder

  ராவுத்தராக வரும் வேலு பிரபாகரன், அச்சு அசலாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறார். இனி நிறைய படங்களில் வில்லனாக அவரை பார்க்கலாம். ஏற்கனவே பார்த்து பழகிய அதே ரோலில் டேனியல் பாலாஜி. அதனால் புதிதாக குறிப்பிடுவதற்கு ஒன்றுமில்லை. ராமதாஸ், அசோக் குமார் என படத்தில் நடித்துள்ள அனைவருமே தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

  கதிர் குமாரின் ஒளிப்பதிவு பேசும்படியாக இருந்தாலும், நல்ல குவாலிட்டியான கேரமாவில் படம் பிடிக்காததால், விழுலுக்கு இறைத்த நீராகிவிட்டது. முதல் பாதி படத்தை விறுவிறுப்பாக எடிட் செய்த ராதாகிருஷ்ணன் தனபால், இரண்டாம் பாதியையும் அப்படியே தொகுத்திருக்கலாம். படத்தின் காஸ்டியூம் டிசைனருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். குறிப்பாக ரஸ்யாவின் ஆடைகள் தான், அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு நம்பக தன்மையை ஏற்படுத்துகிறது.

  Gangs of Madras review: Revenge of a girl for her husbands murder

  ஒரு வித்தியாசமான கதையை சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குனர் சி.வி.குமார். ஆனால் அதனை சினிமா தனமாக சொன்னதில் தான் கதையின் மீதான நம்பக தன்மை குறைந்துவிடுகிறது. குறிப்பாக ரஸ்யாவிற்கு டேனியல் பாலாஜி, பயிற்சி கொடுக்கும் காட்சியும், இரண்டு போலீஸ்காரர்களை அசால்டாக போட்டுத்தள்ளிவிட்டு ரஸ்யா ஊருக்குள் சுற்றிக்கொண்டிருப்பதெல்லாம் க்ளீஷேவை தவிர வேறொன்றும் இல்லை. அதேபோல் படத்தில் அநாவசியமாக நடக்கும் கொலைகளும், ராவான வன்முறை காட்சிகளும், முத்தக் காட்சிகளும் தேவையில்லாத திணிப்பு.

  சர்ச்சை நடிகையை பரிந்துரைத்த ஹீரோ: போச்சே போச்சேன்னு புலம்பிய வாரிசு நடிகை

  காட்சிகளில் நீளத்தை குறைத்து, இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால், 'கேங்ஸ் ஆப் மெட்ராஸ்' ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கும்.

  English summary
  The tamil movie Gangs of Madras is a female centric gangster film, inwhich a girl takes revenge for her husband's murder.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X