Don't Miss!
- Sports
"இவ்வளவு நாளா இது தெரியலையே.. இஷான் கிஷானுக்கு நிறைய விஷயம் தெரியல".. கவுதம் கம்பீர் கடும் விளாசல்!
- Lifestyle
உங்க குடலில் இந்த பிரச்சினைகள் இருந்தால் உங்களால் உடலுறவில் சரியாக செயல்பட முடியாதாம்...பார்த்து நடந்துக்கோங்க
- News
பாகிஸ்தானில் இடைத்தேர்தல்.. 33 தொகுதியிலும் நானே போட்டி.. இம்ரான் கான் தடாலடி முடிவு
- Technology
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
- Finance
ஹிண்டர்ன்பர்க் சரியான ஆய்வு செய்யவே இல்ல.. எல்லாம் தவறு.. அதானி குழுமம் ஒரே போடு..!
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
Gold Review: இப்படி ஏமாற்றிவிட்டாரே அல்போன்ஸ் புத்திரன்.. பாவம் நயன்தாரா.. கோல்டு எப்படி இருக்கு?
சென்னை: நேரம், பிரேமம் படங்களை இயக்கிய இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் இன்று வெளியான கோல்டு திரைப்படம் ரசிகர்களை ரொம்பவே சோதித்து விட்டதாக சோஷியல் மீடியாவில் கதறல்கள் கேட்டு வருகின்றன.
பிரேமம் படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், இன்று மலையாளத்தில் கோல்டு திரைப்படம் வெளியானது.
தமிழில் கோல்டு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தமிழில் நாளை தான் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, டிக்கெட் வாங்கிய ரசிகர்களை பெரிதும் ஏமாற்றினர். ஆனால், டிக்கெட் வாங்கி கேரளாவில் படத்தை ஆவலுடன் பார்க்க சென்ற ரசிகர்களையும் அல்போன்ஸ் புத்திரன் வச்சி செய்து விட்டார் என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
நயன்தாரா நடிப்பில் தமிழிலும் வெளியாகும் கோல்டு… ஒருவழியாக முடிவுக்கு வந்த ரிலீஸ் பஞ்சாயத்து

கோல்டு ரிலீஸ்
மலையாளத்தில் திட்டமிட்டப்படி கோல்டு திரைப்படம் இன்று வெளியானது. தமிழ்நாட்டில் டிசம்பர் 2ம் தேதியான நாளை கோல்டு வெளியாகும் என கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை நேரம் மற்றும் பிரேமம் படங்களை இயக்கிய இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கி உள்ளார்.

ரசிகர்கள் விமர்சனம்
இன்று வெளியான கோல்டு படத்தை மலையாளத்தில் பார்த்து விட்டு ரசிகர்கள் பதிவிட்டுள்ள ட்வீட்கள் டிரெண்டாகி வருகின்றன. நேரம் படத்தை பிரேமம் பாணியில் எடுத்து வைத்திருக்கிறார் அல்போன்ஸ் புத்திரன். புதிதாக ஒன்றுமே இல்லை ரொம்பவே ஏமாற்றி விட்டார் என நெகட்டிவ் விமர்சனங்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

பெஸ்ட் என்டர்டெயினர்
கோல்டு திரைப்படம் ரொம்பவே சூப்பரா இருக்கு, பெஸ்ட் என்டர்டெயினர். பிஜிஎம் மற்றும் எடிட்டிங்கில் மிரட்டியிருக்காங்க.. 4/5 ரேட்டிங் கொடுக்கலாம். எனக்கு ரொம்பவே இந்த படம் பிடிச்சிருக்கு கலக்கிட்டீங்க அல்போன்ஸ் புத்திரன் என இந்த ரசிகர் தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

தங்கம் இல்லை பித்தளை
நல்ல படத்துக்கு எந்தவொரு ப்ரமோஷனும் பண்ண வேண்டாம்னு சொன்னாரேன்னு நம்பி போனா கடைசி வரை என்ன ஜானர்னே தெரியாம படத்தை பார்க்க வேண்டியதா இருக்கு.. இது கோல்ட் இல்லை வெண்கலம் கூட இல்லை பித்தளை என இன்னொரு ரசிகர் விளாசித் தள்ளி உள்ளார்.

ரொம்ப சுமார்
GOLD மூவிக்கு அல்போன்ஸ் புத்திரன் எந்தவித எதிர்பார்ப்பும் உருவாக்காமல் இருந்தார், அதுவே அவருக்கு பெயிலியர் ஆயிடுச்சு. படம் சுமார் தான் என ரசிகர்கள் கோல்டு படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர்.

நயன்தாரா பாவம்
கோலிவுட்டில் இந்த ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் மட்டுமே ஹிட் ஆனது என்றும் ஓடிடியில் வெளியான ஓ2, தெலுங்கில் வெளியான சிரஞ்சீவ், சல்மான் கான் நடித்த காட்ஃபாதர் மற்றும் தற்போது மலையாளத்தில் வெளியாகி உள்ள கோல்டு என அத்தனை படங்களும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளன. பாவம் நயன்தாரா என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படம் ரிலீஸுக்கு முன்பே ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், அந்த படம் வெளியாகி ஹிட் அடித்தால் மட்டுமே நயன்தாரா கம்பேக் கொடுப்பார் என கமெண்ட்டுகள் பறக்கின்றன.