For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Gulu Gulu Movie Review: சுத்தி கோமாளியா வச்சிக்கிட்டா.. சந்தானத்தின் குலு குலு விமர்சனம்!

  |

  நடிகர்கள்: சந்தானம், அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி

  இசை: சந்தோஷ் நாராயணன்

  இயக்கம்: ரத்னகுமார்

  Rating:
  3.0/5

  சென்னை: இதுக்கு சந்தானம் பேசாம காமெடியனாகவே இருந்திருக்கலாம் என்றே குலு குலு படத்தை பார்த்த ரசிகர்கள் தியேட்டரில் புலம்புவது தெளிவாகவே கேட்கிறது.

  குலு குலு டீசரில் வரும் வசனத்தை போலவே, "சுத்தி கோமாளியா வச்சிக்கிட்டா.. முட்டாள் கூட அறிவாளியா தெரிவான்" என யாரை நினைத்து இயக்குநர் ரத்னகுமார் எழுதினார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

  சிவகார்த்திகேயனுக்கு ஒரு டாக்டர் ஹிட் அடித்ததை போலவே நாமும் ஒரு டார்க் காமெடி பண்ணுவோம் என சந்தானம் சிரிக்காமல் நடித்துள்ள குலு குலு படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்..

  என்ன கதை

  என்ன கதை

  முட்டாள் கடத்தல்க்காரர்களான ஜார்ஜ் மர்யன் மற்றும் அவரது கேங் வில்லன் கடத்தச் சொன்ன பெண்ணை விட்டு விட்டு முதலும் நீ முடிவும் நீ ஓடிடி படத்தில் சைனீஸ் ஆக நடித்து கவனத்தை ஈர்த்த ஹரீஷை கடத்தி விடுகின்றனர். அமேசான் காட்டில் இருந்து தனது இனமே அழிந்த நிலையில், அங்கிருந்து வெளியேறி 13 மொழிகள், பல தொழில்கள் கற்றுத் தேர்ந்த, யார் உதவிக் கேட்டாலும் தர்ம அடி வாங்கினாலும் பரவாயில்லை என நாடோடிகள் சசிகுமார் போல உதவி செய்யும் சந்தானத்திடம் அந்த சைனீஸை கண்டுபிடிக்க உதவி கேட்க, அவர் காப்பாற்றிக் கொடுத்தாரா? இல்லையா? நல்லது செஞ்சாலும், சிக்கல் வரத்தான் செய்யும், ஆனால், அதையும் மீறி நல்லது செய்யணும் என்கிற ஒன்லைன் தான் இந்த குலு குலு (கூகுள்) படத்தின் கதை.

  வித்தியாசமான சந்தானம்

  வித்தியாசமான சந்தானம்

  உருவகேலி மற்றவர்களை கிண்டல் செய்து காமெடி பண்ணும் சந்தானத்தை இந்த படத்தில் இயக்குநர் ரத்னகுமார் ஒட்டுமொத்தமாக ஒடுக்கி இருப்பது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், ரசிகர்களுக்கு சந்தானத்தின் நடிப்பு பெருமளவில் ஒட்டவில்லை என்று தான் சொல்ல வேண்டும். டார்க் காமெடி படம் பண்ண வேண்டும் என ஒற்றைக் காலில் சந்தானம் இருக்க, அவருக்காக சூது கவ்வும் கொஞ்சம், நானும் ரவுடி தான் கொஞ்சம் என பல படங்களை மிக்ஸ் செய்து ரத்னகுமார் எழுதிய கதை போலத்தான் தெரிகிறது.

  காமெடியை கூகுளில் தேட வேண்டும்

  காமெடியை கூகுளில் தேட வேண்டும்

  டிரைலர் கட்டிலேயே அந்த வடை கீழே விழும் இடம் மட்டுமே ரசிகர்களை சிரிக்க வைத்திருந்தது. மற்றப்படி நேரம் படத்தில் வருவதை போல மெயின் வில்லன், காமெடி வில்லன் என டிரைலரிலேயே காப்பி தான் அடித்திருந்தனர். சந்தானம் சிரிக்காமல் சிரிக்க வைக்கிறேன் என நினைத்துக் கொண்டு அதையும் பண்ணவில்லை. ஜார்ஜ் மர்யன் கொஞ்ச இடங்களில் பண்ணும் காமெடி மட்டுமே ரசிகர்களை தியேட்டரில் சிரிக்க வைத்தது.

  பிளஸ்

  பிளஸ்

  படத்திற்கு பலமே சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் தான் என்று சொல்லலாம். மாட்னா காலி மற்றும் அம்மா நானா பாடல்கள் மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளன. இதற்கு முன் பார்த்திராத நடிப்பை சந்தானம் கொடுத்து சில இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். ஜார்ஜ் மர்யன், சைனீஸ் உள்ளிட்டவர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். வயசாகிடுச்சே இனி பீரியட்ஸே வராது, எல்லாத்தையும் பொத்திக்கிட்டு இருந்தாதான் பத்தினின்னு பட்டம் கிடைக்கும்னா அந்த பட்டமே வேண்டாம் போன்ற வசனங்கள் அப்ளாஸ்களை அள்ளுகின்றன. இடைவேளையின் போது வரும் அந்த பப்ஜி காட்சியும் வித்தியசமாக உள்ளது.

  மைனஸ்

  மேயாத மான், ஆடை படங்களுக்கு பிறகு மாஸ்டர், விக்ரம் படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றிய ரத்னகுமார் சந்தானத்தை வைத்து தரமான சம்பவத்தை பண்ணுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. சொல்ல வந்த விஷயமே பெரிதாக பாதிக்கவில்லை. அதை சுற்றி சுற்றி ஏகப்பட்ட கிளைக் கதைகளை போட்டு கஜினி படத்தில் அப்படியொரு மாஸ் வில்லனாக இருந்த பிரதீப் ராவத்தை இப்படியா பாஸ் பண்ணுவீங்க என சொல்லும் அளவுக்கு ஏகப்பட்ட சொதப்பல்கள் திரைக்கதையில் உள்ளன. டார்க் காமெடி படம் ஸ்லோவாக சொல்லித்தான் சிரிப்பு வரவைக்க முடியும் என ஒவ்வொரு காட்சியும் லேக் அடிப்பதை தவிர்ந்து இருந்தாலே தப்பித்து இருக்கும்.

  English summary
  Gulu Gulu Movie Review in Tamil
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X