Don't Miss!
- News
கர்நாடகாவில் பத்ரா மேலணை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு.. தேர்தல் தேர்தல் என எதிர்க்கட்சிகள் கூச்சல்
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: மோடி அரசின் 7 முன்னுரிமைகள் - நிர்மலா சீதாராமன்
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Maha Review: சைக்கோ கொலைகாரன் கதையா?..மஹா படம் எப்படி இருக்கு..முழு விமர்சனம் இதோ!
இயக்குநர் - யு.ஆர்.ஜமீல்
நடிகர்கள் - ஹன்சிகா மோத்வானி, சிம்பு, ஸ்ரீகாந்த்
இசை - எம். ஜிப்ரான்
சென்னை : ஹன்சிகா மோத்வானியின் 50வது படமான மஹா திரைப்படம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.
எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் என்பவர் இயக்கியுள்ளார். சிம்பு,ஸ்ரீகாந்த், தம்பிரமைய்யா, கருணாகரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சைக்கோ கொலையாளி பற்றிய திரில்லர் கதை தான் மஹா.
68வது தேசிய விருதுகள் - மண்டேலா படத்திற்காக சிறந்த வசனகர்த்தாவாக மடோனி அஷ்வின் அறிவிப்பு!

சைக்கோ கொலைகாரன்
படம் தொடங்கும் போதே ஹன்சிகா மோத்வானி மற்றும் சிம்பு காதல் மற்றும் ரொமான்சுடன் கிளுகிளுப்பாக தொடங்குகிறது. இதையடுத்து 6 மாதங்களுக்கு பிறகு என்ற கார்டுடன் படம் ஆரம்பாகிறது. அதில் ஒரு கொடூர சைக்கோ கொலைகாரன் குழந்தைகளை கடத்தி கொலை செய்கிறான். இந்த கொலைகாரன் கண்ணில் ஹன்சிகாவின் குழந்தை பட, அந்த குழந்தையையும் கடத்தி விடுகிறான். அவனிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டதா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை.

ஹன்சிகாவின் 50வது படம்
முதல் முதலாக அம்மா கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடித்து பட்டையை கிளப்பி உள்ளார். குழந்தையை தேடி அங்கும் இங்கும் அலையும் ஹன்சிகாவின் நடிப்பு முதல் பாதியில் வேறலெவலில் உள்ளது. மேலும், இடைவெளி பிளாக் ட்விஸ்ட்யும் பக்காவாக அமைந்துள்ளது. ஹன்சிகாவுக்கு சிறப்பான ஐம்பதாவது படமாக 'மஹா' திரைப்படம் அமைந்துள்ளது. அவரின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ரொமான்ஸ்
ஹன்சிகா மற்றும் சிம்பு வரும் காட்சிகள், அவர்களின் ரொமான்ஸ் படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்துள்ளது. ஹன்சிகாவும் சிம்புவும் காதலிக்கும் போது எடுக்கப்பட்ட படம் எடுக்கப்பட்டால் இருவரும் வரும் காட்சி ரசிக்கும் படி உள்ளது. அதேபோல போலீஸாக வரும் ஸ்ரீகாந்தின் நடிப்பும் பாராட்டும்படி உள்ளது.

கோட்டைவிட்டார்கள்
படத்தில் சிம்பு வரும் காட்சி குறைவாகவே உள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. சிம்பு 40 நிமிடம் வருவார் என்று கூறப்பட்ட நிலையில் சிம்பு முதல் பாதியில் 10நிமிடமும், பிளாஸ் பேக்கில் 10 நிமிடம் மட்டுமே வருகிறார். மேலும் சிம்புக்கு என்ன ஆனது அவர் என்ன ஆனார் என மேலோட்டமாக சொல்லி இருப்பது படத்திற்கு மைனசாக அமைத்துவிட்டது. இதை இன்னும் அழுத்தமாக சொல்லி இருந்தால் படத்தின் கதைக்கு ஓர் கிரிப்பாக இருந்து இருக்கும். ஆனால் அங்கு கோட்டைவிட்டுள்ளார்கள்.

இசையில்
ஜிப்ரானின் இசை படத்திற்கு கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது குறிப்பாக சிம்பு ஹன்சிகாவின் டூயட் பாடல் பாராட்டை பெற்றது. கொலையாளி வரும் காட்சிகளில் தெறிக்க விடப்படும் பின்னணி இசையில் ஜிப்ரான் ஸ்கோர் செய்துள்ளார். குழந்தைகளை பெற்றோர் எப்படி பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து படத்தில் உள்ளது. குடும்பத்தோடு அனைத்து பெற்றோர்களும் பார்க்க வேண்டிய படம்.