twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எப்படி இருக்கிறது விஜயானந்த் திரைப்படம்?

    |

    Rating:
    3.0/5

    நடிகர்கள்: பரத் போபன்னா, ஸ்ரீ பிரகலாத, அனிஷ் குருவில்லா, ஆனந்த் நாக்

    இயக்குனர்: ரிஷிகா ஷர்மா

    பெங்களூரு: அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்ட அச்சகத் தொழிலை நம்பிக்கொண்டிருக்காமல், தானே லாரி ஒன்றை வாங்கி, அதைத் தானே ஓட்டி 'லாஜிஸ்டிக்' தொழிலில் வெற்றிபெற்ற முன்னோடித் தொழிலதிபர் கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் சங்கேஸ்வர். ஒரு லாரியோடு தொடங்கி, அதை ஐயாயிரமாக வளர்த்தது தனியொரு தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அவரது தொழில் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை மய்யமாக கொண்டு எடுக்கப்பட்டது தான் இந்த திரைப்படம். இதனை கமர்சியல் அம்சங்களோடு சேர்த்து ரசிக்கும்படியாக இயக்கிருக்கிறார் இயக்குனர் ரிஷிகா சர்மா.நடிகர்கள்: பரத் போபன்னா, ஸ்ரீ பிரகலாத,

     Has the journey of VijayAnand come out well?

    பெடல் மிதித்து அச்சிடும் இயந்திரத்தை வைத்துக்கொண்டு தொழிலை நடத்தி வருகிறார் விஜய் சங்கேஸ்வரின் அப்பா. 'விக்டோரியா' என்கிற தானியியங்கி அச்சு இயந்திரத்தை ரூ.80 ஆயிரம் கடனுக்கு வாங்கி வந்து தொழிலை லாபகரமாக மாற்றவதற்கு தனது தந்தையை சம்மதிக்க விஜய். இந்த தொடக்கக் காட்சியிலேயே பார்வையாளர்களை ஈர்க்கிறது படம்.
    அப்பாவின் எதிர்ப்பை மீறி, லாரி போக்குவரத்துத் தொழிலில் குதிக்கும் விஜய், வாடிக்கையாளர்களைப் பிடிக்க கோகாக் சந்தையில் தனது ஒற்றை லாரியுடன் பல நாட்கள் காத்திருப்பது, அங்கு இருக்கும் மார்கெட்டில் ஏற்கெனவே வெற்றிகரமாக இருக்கும் ஆட்களுடன் மோதி முதல் சவாரியைப் பிடிப்பது என்று தொழில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் எடுக்கும் துணிச்சலான முடிவுகளும் எதிர்கொள்ளும் நஷ்டங்களும் என நகரும் கதையில், தொழில் போட்டியாளர்களே எதிரிகள். பீரியட் படங்களுக்கு ஏற்ற காட்சியமைப்பு படத்திற்கு கூடுதல் சிறப்பு. அதே சமயம் பொறுமையாக நகரும் கதை, குறைவான கதை திருப்பங்கள் என இவை கதையின் சுவாரசியத்தை குறைக்கும் விதமாக அமைந்துள்ளது.

    விஜய் சங்கேஸ்வராக நடித்திருக்கும் நிஹால், அவர் அப்பா பி.ஜி.சங்கேஸ்வராக நடித்திருக்கும் ஆனந்த் நாக் ஆகியோருடன் துணைக் கதாபாத்திரங்களில் வருபவர்களும் அளவாக நடித்து ஈர்க்கிறார்கள். ஒளிப்பதிவு, இசை போன்ற தொழில்நுட்ப அம்சங்களிலும் குறையில்லை. தொழிலில் வெல்வதற்குத் துணிவு, தன்னம்பிக்கை, நேர்மை போதும் என்பதை சொல்லும் படத்தில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் விஜயானந்த் சிறந்த பயோபிக் படமாக அமைந்திருக்கும்.

    English summary
    A young Vijay Sangeswar in the 60s brings innovation to his family printing business, multiplying the profits and winning the confidence of his conservative father becoming a pioneering businessman from Karnataka. The Way Director Rishika Sharma has portrayed the story with commercial elements draws attention.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X