For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  movie review : சில நாட்களாக அப்பாக்களுக்கு திடீர் மரியாதை... #ஹோம் திரைவிமர்சனம்

  |

  Rating:
  3.5/5

  நடிகர்கள் :

  இண்திரன்ஸ்
  மஞ்சு பிள்ளை
  ஸ்ரீநாத் பாசி
  நஸ்லென்
  ஜானி அந்தோணி
  லலிதா

  இயக்கம் : ரோஜின் தாமஸ்

  கொச்சின் : மலையாளப்படங்கள், பெரும்பாலும் படம் பார்க்கிறோம் என்பதை மறக்கச்செய்து, வீட்டிலோ, காட்டிலோ அந்த சூழலில் நாம் இருப்பதாக உணர்த்திக்கொண்டிருக்கும். அரை மணி நேரத்திற்கு பிறகு ஏதோ ஒரு இடத்தில்தான் அவர்கள் நடிகர்கள்.. நடிக்கிறார்கள் என்பதே தோன்றும்.

  அப்படிப்பட்ட ஒரு நெருக்கத்தை தந்திருக்கும் படம்தான் சமீபத்தில் ஓடிடியில் வெளியான ஹோம் என்ற மலையாளத்திரைப்படம். 2மணி 40நிமிடங்களில் மனித உணர்வுகள், குடும்ப உறவுகளை ஸ்வாரஸ்யமாக, நெகிழ்ச்சியாக, மனதைத் தொடும்படியாக எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ரோஜின் தாமஸ்.

  தேன் படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது...குவியும் பாராட்டுக்கள் தேன் படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது...குவியும் பாராட்டுக்கள்

  புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் பல குடும்ப உறவுகளில், தினந்தோறும் நடக்கும் குழப்பம்களை பற்றிப் பேசும் படமே 'ஹோம்'. ஹிட் படம் ஒன்று தந்த பின்பு அடுத்த படத்தின் கதையை முடிக்க முடியாமல் கஷ்ட படுகிறார் ஆண்டனி (ஸ்ரீநாத் பாஸி).

  இவர்கள்தான் வீட்டி(Home)ன் தூண்கள்

  இவர்கள்தான் வீட்டி(Home)ன் தூண்கள்

  ஒரு வீட்டில் மொத்தம் 5 பேர். அதிலும் தாத்தா எப்பொழுதும் தன் ரூமிலேயே இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரே வீட்டில் நடக்கும் கதை. ஆலிவர் ட்விஸ்ட், அவர் தந்தை அச்சப்பன். ஆலிவரின் மனைவி குட்டியம்மா இவர்களுக்கு இரு மகன்கள். மூத்தவன் அந்தோனி, இளையவன் சார்லஸ். இந்த கதாப்பாத்திரங்களோடு அந்தோனியின் காதலி பிரியாவும், அவளின் அப்பா ஜோசப்பும் நிறைகிறார்கள் ஹோம் திரைப்படத்தில்.

  படத்திற்குள் படம்

  ஆலிவரின் பெரிய மகன் அந்தோணி இயக்குனர். இளைய மகன் யூ ட்யூப் சேனல் நடத்துபவர்.இருவருமே தந்தையை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை. அந்தோனிக்கு முதல் படமே வெற்றிப்படம் . இரண்டாவது படத்தில் க்ளைமேக்ஸ் எழுத தன் ஊருக்கு வருகிறான். அங்கு வந்தும் கதையை முடிக்க முடியாத வெறுப்பில் கோபத்தில் வீட்டில் இருப்பவர்களை காயப்படுத்துகிறான். காதலியோடு சண்டை வேறு.

  நண்பனிடம் புலம்பி

  நண்பனிடம் புலம்பி

  தானும் அப்டேட் ஆகிக்கொள்வதற்காக, மகனிடம் செல்போன் கேட்க, அவனும் ஆடர் செய்கிறான். கடைசியில் அது தன் வருங்கால மாமனாருக்கு என தெரிய வருகிறது. நண்பனிடம் புலம்பி லோக்கல் ஸ்மார்ட் போன் வாங்கிவிட, அதை சமாளிக்க அவர் படும் பாடு, அதன் பிறகான காட்சிகள் எல்லாம் இது நடிப்பா, நிஜமா என்றுதான் நினைக்க வைக்கிறது.

  அப்பாவே வைக்கும் ஆப்பு

  அப்பாவே வைக்கும் ஆப்பு

  மகன்களின் அவமதிப்பை கண்டு கலங்கும் தந்தை தானும் அவர்களுக்கு பிடித்தது போல் அப்டேட் ஆக முயல்கிறார். ஆலிவர் தன்னுடைய மொபைலை சரியாக பயன்படுத்த தெரியாமல் பாக்கெட்டில் வைத்திருக்க, ஏடாகூடமாக ஒரு சம்பவம் நிகழ்ந்துவிடுகிறது. அதனால் மகனின் சினிமா எதிர்காலத்திற்கே கேள்விக்குறியாகிவிடுகிறது. அந்தோனி தன் தந்தையிடம் "உன் கிட்டல்லாம் கதை இருக்கா? உன் கதையவே ஒரு நிமிஷத்துல சொல்லி முடிச்சிடலாம் " என அவமானப்படுத்துகிறார்.

  ப்ளாஷ்பேக் கதை

  ப்ளாஷ்பேக் கதை

  பிறகு ஆலிவர் ஒரு கட்டத்தில் மகனை இம்ப்ரெஸ் செய்ய தன் சிறு வயதில் ஒரு தாய்க்கும் மகனுக்கும் மருத்துவ உதவி செய்த ஒரு கதையை மகனிடம் சொல்கிறார். அதை அந்தோணி நம்ப மறுக்கிறார். ஆலிவரின் அவமானம், அவர் சொன்ன அந்த ப்ளாஷ்பேக் கதை, மகனுக்கு திரும்ப இயக்குனர் வாய்ப்பு கிடைத்ததா? காதலித்த பெண்ணை கைப்பிடிக்க மேலும் என்ன செய்கிறார் என்பது மீதி கதை .

  சினிமாத்தனம் இல்லாமல்

  சினிமாத்தனம் இல்லாமல்

  மனஅழுத்தத்தில் இருந்து மீண்டு வருகிறாரா ? மகன்கள், அப்பாவின் உணர்வுக்ளை புரிந்து கொண்டார்களா? என்பதுதான் ஹோம் படத்தின் ஒட்டு மொத்த கதை . இறுதியில் தந்தையின் பெருமையை மகன் அறிந்து என்ன செய்கிறார் என்பதை நெகிழ்வுடன் கூறியிருக்கிறது ஹோம். எந்த சினிமாத்தனமும் இல்லாமல் யதார்த்தமாய் நகர்கிறது.

  காமெடி நடிகருக்கு தேசிய விருது

  காமெடி நடிகருக்கு தேசிய விருது

  ஆலிவர் ட்விஸ்ட்-ஆக வாழ்ந்திருக்கிறார் மலையாள குணச்சித்திர நடிகர் இந்திரன். 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். நிஜ வாழ்வில் ஆடை வடிவமைப்பாளராக தொடங்கியது இவரது பயணம். 2018-ல் சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் பெற்றார். மகனிடம் படும் அவமானம், ஏமாற்றம், வலி, எதிர்பார்ப்பு, வெகுளித்தனம், ஆர்வம் என ஒரு காமெடி நடிகராக இத்தனையும் கொடுத்திருக்கிறார் என பிரம்மிக்க வைக்கிறது. நெட்டிசன்கள் இவருக்கு இப்படத்தில் தேசிய விருதுதான் என்றும் பாராட்டியுளார்கள். இயக்குனர் வசந்தபாலனும் பாராட்டியுளார். பல இடங்களில் வசனங்களும், காட்சிகளும் நம் வீட்டில் நடப்பதைப் பிரதிபலிக்கிறது.

  ஹோம்-ன் டச் பாய்ண்ட்ஸ்

  ஹோம்-ன் டச் பாய்ண்ட்ஸ்

  வீடும்,ஒளிப்பதிவும் நம்மை அங்கு வாழவைக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். தந்தை போன் உபயோகிக்க கற்றுக்கொள்வதும் தாய் எஸ்கலேட்டரில் பயத்துடன் பயணப்பது போன்றவை மறக்கமுடியாத டச்.எழுத்தாளராக இருந்து டைரக்டராக ஒரு படம் செய்யும் போது என்னவெல்லாம் தேவையென்பது மிக நன்றாக தெரியும் என்பதற்கு இந்தப்படம் ஒரு சான்று. பாட்டு, ஃபைட் எல்லாம் இருந்தால்தான் படம் என்பதை உடைத்த படத்தில், ஹோம் முக்கியமான படம் ஆகும்

  மைனஸ், ப்ளஸ்

  மைனஸ், ப்ளஸ்

  பொறுமை இல்லாதவர்கள் நிச்சயமாக இந்த படத்தை பார்க்கமுடியாது. 2 மணி நேரம் 40 நிமிடங்கள் வரை இத்தனை நீளம் தேவையா என்றே சிலரின் கருத்து. அது மட்டும் இல்லாமல் படத்தின் முதல் பகுதி டேக் ஆஃப் ஆக கொஞ்சம் நேரம் பிடிக்கிறது. நிறைய ரியாக்‌ஷன்களால் நிறைந்திருக்கிறது ஹோம்.பொறுமை இல்லாதவர்களுக்கு தான் இது மைனஸ் .பொறுமையுடன் பார்த்தால் அதுவும் ப்ளஸ் தான் .

  ஆனால், இது மட்டும் நிச்சயம்

  ஆனால், இது மட்டும் நிச்சயம்

  நிழல் உலகில், மொபைல் உள்ளேயே மூழ்கி இருக்கும் மனிதர்களை கொஞ்சம் விடுவித்து, பெற்றோருடனும், பிள்ளைகளுடனும் நிஜ உலகில் நிச்சயம் வாழ வைக்கும் இந்த "ஹோம்" என்பது மட்டும் உறுதி. சில நாட்களாக யாராவது, அப்பாக்களுக்கு திடீர் மரியாதையும் குடும்பத்தோடு நேரம் செலவிட்டுக்கொண்டு இருந்தால், அவர்களை சந்தேகப்பட வேண்டாம். அவர்கள் ஹோம் திரைப்படம் பார்த்திருப்பார்கள். இதை படித்துவிட்டு உங்கள் அப்பாவோடு, மனைவியோடு ஒரு கோப்பை காபி அருந்த செல்லும் அனைவருக்கும் உணர்வுபூர்வமான நன்றிகள் சொல்ல தான் வேண்டும் .

  அப்பா அம்மாவின் ஸ்பரிசம்

  அப்பா அம்மாவின் ஸ்பரிசம்

  மகன் அப்பாவை அவமானப்படுத்தும் போது, அந்த அப்பா தன் மனைவிக்கு தெரியாமல் வீட்டுக்கு வெளியே சென்று அழும்போதும், தன்னுடைய வெகுளித்தனத்தால் கலங்கும் காட்சிகளில் நம்மையும் அறியாமல் நம் கண்களும் கலங்கி விடுகின்றன. படம் முடிந்தாலும் ஆலிவர் பாத்திரம் நம் மனதை விட்டு அகல மறுக்கிறது.அப்பாக்களை மதிக்காமல் பல பிள்ளைகள் - அது ஆணோ பெண்ணோ பலரும் பல தவறுகள் இன்றைய சமுதாயத்தில் செய்கின்றனர் . இந்த டிஜிட்டல் யுகத்தில் வீடியோ கால் ,கான்பிரென்ஸ் கால் , ஜூம் மீட்டிங் என்று எது வந்து விட்டாலும் அப்பா அம்மாவின் ஸ்பரிசம் தொடும் பொழுது கிடைக்கும் ஆனந்தம் வேறு எதிலும் இல்லை .உண்மையான தூய்மையான அன்பு என்பது இந்த டிஜிட்டல் உலகத்திற்கு அப்பாற்பட்டு தனித்துவமாக நம்மை நெகிழ வைக்கும் என்பதை எதார்த்தமான கதை கொண்டு விளக்கிய படம் ஹோம் . கண்டிப்பாக குடும்பத்துடன் பொறுமையாக ரசித்து பார்க்க வேண்டிய நல்ல படம் என்பது தான் நிதர்சனமான உண்மை .

  English summary
  one of the sensational hit in recent times of malayalam cinema is the movie " HOME ". Family emotions with feel good screenplay makes the audience very engaging and which has touched many families close to heart. Home ïs such a beautiful place where every human loves to take a deep breath and do more errors to rectify it . It's a noteworthy film and must watch movie for family audience.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X