»   »  முத்தின கத்திரிக்கா எப்படி?: சரவெடி, நம்பி தியேட்டருக்கு போகலாம்

முத்தின கத்திரிக்கா எப்படி?: சரவெடி, நம்பி தியேட்டருக்கு போகலாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுந்தர் சி. ஹீரோவாக நடித்துள்ள முத்தின கத்திரிக்கா படம் நம்பி தியேட்டருக்கு சென்று பார்க்கும்படி உள்ளது என்று என எமது சினிமா ஆசிரியர் ஷங்கர் தியேட்டரில் இருந்து தெரிவித்துள்ளார்.

சுந்தர் சி.யிடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கட் ராகவன் முத்தின கத்திரிக்கா படத்தை இயக்கியுள்ளார். படத்தை சுந்தர் சி.யுடன் சேர்ந்து அவரது மனைவி குஷ்பு தயாரித்துள்ளார்.


How is Muthina Kathirikai, first half?

வெள்ளிமூங்கா மலையாள படத்தின் ரீமேக்கான முத்தின கத்திரிக்காவில் பூனம் பஜ்வா, விடிவி கணேஷ், சதீஷ், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


* முத்தின கத்திரிக்கா இன்று ரிலீஸாகியுள்ளது. முதல்முறையாக சுந்தர் சி. சந்தானம், சூரி போன்ற காமெடியன்கள் இல்லாமல் நடித்துள்ளார்.


* படம் துவங்கி முதல் பத்து நிமிடங்கள் சாதாரணமாக இருந்துள்ளது. அதன் பிறகு படம் விறுவிறுப்பாக சென்றுள்ளது.


* முத்தின கத்திரிக்கா சுந்தர் சி.யின் பக்கா காமெடி மசாலா படமாக உள்ளது.


* படத்தின் முதல் பாதியில் காமெடி சீன்கள் அசத்தலாக உள்ளன. தியேட்டர்களில் ரசிகர்கள் குலுங்கு குலுங்கி சிரிக்கும் சப்தமாக இருந்துள்ளது.


* எம்.ஜி.ஆர். 40 வயசுல சினிமாவில ஹீரோ ஆனார் என்று சுந்தர் சி. சொல்ல அதற்கு யோகி பாபு சச்சின் 40 வயசுல ரிட்டையர் ஆகிட்டார்னு சொல்ல தியேட்டரில் சிரிப்பு சரவெடி.


* படத்தில் சுந்தர் சி. காமெடியில் பின்னி பெடலெடுத்துள்ளார்.


* படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக இருந்துள்ளது. படம் முழுக்க ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளனர்.


* ஹீரோ என்ற பில்டப்பு எல்லாம் இல்லாமல் அவரை காமெடியன் கலாய்க்கும் காட்சிகள் அருமை.


* சிரிப்பு கேரண்ட்டி என்பதால் நம்பி தியேட்டருக்கு சென்று படம் பார்க்கலாம். சுந்தர் சி., பூனம் பஜ்வா ஜோடி ரசிக்கும்படி உள்ளது.

English summary
Sundar. C's Muthina Kathirikai has hit the screens today. First half of the movie is said to be really entertaining.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil