twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மருத்துவ உலகின் இருண்ட பக்கம் ‘’Human’’.. தமிழில் கட்டாயம் பார்க்க வேண்டிய வெப் சீரிஸ்!

    |

    சென்னை : ஷெபாலி ஷா, கீர்த்தி குல்ஹாரி ஆகியோர் நடிப்பில் வெளியான வெப் தொடர் தான் ''Human''.

    கொலை, மர்மம், திகில் என அனைத்தும் கலந்த இந்த வெப்தொடர் டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    10 எபிசோடு கொண்ட இந்த வெப் தொடரை இஷானி பானர்ஜி மற்றும் மோஸஸ் சிங் ஆகியோர் எழுதி இயக்கி உள்ளனர்.

    முன்னணி நடிகர்கள்... இயக்குநர்கள்... அடுத்தடுத்த வெப் தொடர்கள்... களத்தில் அமேசான் ப்ரைம் முன்னணி நடிகர்கள்... இயக்குநர்கள்... அடுத்தடுத்த வெப் தொடர்கள்... களத்தில் அமேசான் ப்ரைம்

    Human வெப்தொடர்

    Human வெப்தொடர்

    ''Human'' வெப் தொடரின் ஆரம்பமே சற்று திகில் லூட்டும் வகையில் , ஓர் ஆராய்ச்சி மையத்திற்குள் இருந்து தொடங்குகிறது. மருத்துவ உலகத்தின் இருண்ட பக்கத்தை இத்தொடரில் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் மோஸஸ் சிங். பூனைக்கும்,எலிக்கும் போட்டு சோதனை செய்ய வேண்டிய மருந்தை, பண ஆசையால், நேரடியாக அப்பாவி பொதுமக்கள் மீது அவர்களுக்கே தெரியாமல் சோதனை செய்யப்படுகிறது. இந்த விபரீத சோதனையால், பக்கவிளைவுகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்து விடுகிறார். எதற்காக இந்த சோதனை? இது என்ன மருந்து? இந்த குற்றத்திற்கு பின்னால் இருப்பது யார் ? என பல சஸ்பென்சுடன் முதல் எபிசோடு முடிகிறது.

    போபால் விஷவாயு

    போபால் விஷவாயு

    இரண்டாவது எபிசோடில், 1984ம் ஆண்டு போபாலில் நடைபெற்ற விஷவாயு தாக்குதலில் தனது குடும்பத்தை இழந்து அனாதையான கௌரி நாத் என்ற பெண், கடுமையாக படித்து அதே போபாலில் மக்களின் நலனுக்காக "மந்தன்" என்ற மருத்துவமனையை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனைக்கு சைரா சபர்வால் என்ற பெண், புது மருத்துவராக வருகிறார்.

    மர்ம மரணம்

    மர்ம மரணம்

    நேர்மையான மருத்துவரான சைரா சபர்வாலிடம் கணவனை இழந்த பெண் ஒருவர், சாதாரண காய்ச்சலுக்காக மருத்துவமனைக்கு வந்த என் கணவர் உயிரிழந்து விட்டதாகவும், இதேபோன்று பலர் காரணமே இல்லாமல் உயிரிழந்து வருவதாகவும், என் கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மருத்துவர் சைரா சபர்வாலிடம் முறையிடுகிறார்.

    சுவாரஸ்யமான  கதை

    சுவாரஸ்யமான கதை

    இதனால், சந்தேகம் அடைந்த சைரா, மர்ம மரணம் குறித்தும், இதில் தொடர்புடையவர்கள் குறித்து ரகசியமாக உளவுபார்க்கிறார். இதில் பல திகிடும் பல உண்மைகளை தெரிந்து கொள்கிறார் சைரா. மருத்துவ சட்டத்திற்கு புறம்பாக ஒரு மருந்தை தயாரித்ததும், பல உயிர்களை காவு வாங்க காரணமாக இருந்தவர் 'மந்தன்' மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர் கௌரி நாத் என்பதை தெரிந்து கொள்கிறார். இறுதியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்வீஸ்ட்டை கொடுத்து Human தொடரை முடித்துள்ளார் இயக்குநர்.

    சுவாரசியமான கதை

    சுவாரசியமான கதை

    மிகவும் த்ரில்லிங்காக காட்சிக்கு காட்சி சுவாரசியங்களுடன் கதை மிகவும் சுவாரசியமாக நகர்கிறது. மருத்துவமனையில் நடக்கும் ஆவலம், அலட்சியம், முறைகேடு, மக்களின் அறியாமை, என எபிசோடுக்கு எபிசோடு திகைப்பு துளியும் குறையாமல் Human வெப் தொடர் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறார். சைரா பவர்வால் கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி குல்ஹாரி மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார். அதே போல கௌரி நாத் ரோலில் நடித்துள்ள ஷெபாலி ஷா காட்சிக்கு காட்சி விறுவிறுப்பை கூட்டி உள்ளார்.

    போபால் விஷவாயு

    போபால் விஷவாயு

    போபால் விஷவாயுவின் தாக்கம் குறித்தும், இந்த விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி தொலைத்துள்ளார்கள் என்பதை இந்த தொடரில் அழுத்தமாக கூறப்பட்டுள்ளது. 10 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் இந்தி மற்றும் தமிழ் என இரு மொழியிலும் உள்ளது.

    English summary
    Human webseries Review : ஷெபாலி ஷா, கீர்த்தி குல்ஹாரி ஆகியோர் நடிப்பில் வெளியான வெப் தொடர் தான் ‘’Human’’.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X