»   »  இப்படை வெல்லும் விமர்சனம்

இப்படை வெல்லும் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
எப்படி இருக்கு இப்படை வெல்லும்- வீடியோ

எஸ் ஷங்கர்

Rating:
2.0/5

நடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, டேனியல் பாலாஜி

ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன்

இசை: டி இமான்

தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ்

இயக்கம்: கௌரவ் நாராயணன்

Ippadai Vellum movie review

உதயநிதியை வைத்து ஒரு முழுமையான ஆக்ஷன் த்ரில்லர் தர முயன்றிருக்கிறார் இயக்குநர்

கௌரவ் நாராயணன்.

கதை உத்திரபிரதேச சிறையில் தொடங்குகிறது. தீவிரவாதி டேனியல் பாலாஜி சிறையிலிருந்து

தப்பித்து சென்னையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்த வருகிறான். வழியில் தற்செயலாக

உதயநிதியையும் அவரது நண்பன் சூரியையும் சந்திக்க நேர்கிறது. அந்த சந்திப்பு அவர்கள்

வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடுகிறது.

தனது நீண்ட நாள் காதலி மஞ்சிமாவை திருமணம் செய்ய உதயநிதி முயற்சிக்கும்போது, தீவிரவாதி

டேனியலுடன் அவருக்கு தொடர்பிருப்பதாகக் கூறி என்கவுன்டரில் போட்டுத் தள்ளப் பார்க்கிறார்

மஞ்சிமாவின் போலீஸ் அண்ணன் ஆர்கே சுரேஷ். இதிலிருந்து எப்படித் தப்பிக்கிறார் உதயநிதி?

மஞ்சிமாவைக் கைப்பிடித்தாரா? டேனியல் பாலாஜி என்ன ஆனார்? இதுதான் மீதி.

முதல் பாதி விறுவிறுப்பாகப் போகிறது. இரண்டாம் பாதிதான் இழுக்கிறது. வழக்கமான தமிழ்

சினிமா காட்சிகள். மஞ்சிமா - உதயநிதி காதலை அத்தனை தீவிரமாக எதிர்க்க எந்த முகாந்திரமும் காட்டப்படவில்லை.

உதயநிதியின் நடிப்பில் இன்னும் ஒருபடி முன்னேற்றம். மஞ்சிமாவுடனான காதல், சூரியுடன்

காமெடி என இரண்டிலுமே ஸ்கோர் செய்திருக்கிறார் உதயநிதி. படம் முழுக்க ஓடிக் கொண்டே

இருக்கிறார்.

சூரியின் காமெடி இந்த முறை படத்துக்கு பெரிதாகக் கைகொடுத்திருக்கிறது. காமெடியையும் தாண்டி ஒரு முக்கியமான வேடம். அதைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

மஞ்சிமா மோகனுக்கு நடிக்கவும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. காதல் காட்சிகளில் அழகு. காதலனுக்கு உதவும் காட்சிகளில் ஈர்க்கிறார்.

பஸ் டிரைவராகத் தோன்றும் ராதிகா, மஞ்சிமாவின் அண்ணனாக வரும் சுரேஷ், டேனியல்

அனைவருமே மிகையில்லாத நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு படத்துக்கு ப்ளஸ். சேஸிங் காட்சிகளில் பரபரக்கிறது கேமிரா.

இமானின் பின்னணி இசை படத்தின் வேகத்துக்குக் கைகொடுத்துள்ளது.

காட்சிகளை கதைக்குரிய போக்கில் அமைக்காமல், இயக்குநர் தன் வசதிக்கேற்ப அமைத்திருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய குறை. உதாரணம் உதயநிதியும் சூரியும் போலீஸ் கஸ்டடிக்கு வந்த பிறகு நடக்கும் சம்பவங்கள். அது பார்வையாளர்களைச் சோர்வடைய வைக்கிறது. இதிலெல்லாம் இயக்குநர் கவனம் செலுத்தியிருந்தால், இப்படை வெல்லும் விறுவிறு த்ரில்லராக இருந்திருக்கும்.

English summary
Review of Udhayanidhi Stalin - Manjima Mohan starring Ippadai Vellum movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil