For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மக்கள் மனதில் பாய்ந்துள்ள குண்டு... சத்தம் கேட்டுகொண்டே இருக்கும்

  |

  Rating:
  4.0/5
  Star Cast: தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த் ராமதாஸ், ரமேஷ் திலக், ரித்விகா
  Director: அதியன் ஆதிரை

  சென்னை : இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தில் தினேஷ்,ஆனந்தி,ரித்விகா,முனீஸ்காந்த்,லிஜீஸ்,ஜான் விஜய்,ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் .படத்தை அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கியுள்ளார்.படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் தென்மா இசையமைத்து இருக்கிறார்.படத்தை பரியேறும் பெருமாள் எனும் மாபெரும் வெற்றி படத்திற்கு பிறகு பா.இரஞ்சித் தயாரித்துள்ளார்.

  irandaam ulaga porin kadaisi kundu is not the final bomb

  'உயிர் வாழ உழைப்பு உண்டு அந்த உயிருக்கு உத்தரவாதமில்லாத உழைப்பு தான் எங்களுக்கு உண்டு ' .இந்த வரிகள் அனைத்தும் உழைக்கும் மக்களின் வலிகளை கிட்டதட்ட சரியான முறையில் பிரதிபலிக்கும் நோக்கில் படத்தின் விளம்பரத்திற்காக பயன்படுத்த பட்டது .படம் பார்த்த பின்பு தான் புரிகிறது இது வரிகள் மட்டுமல்ல பல மக்களின் உண்மை வாழ்க்கை என்று .

  irandaam ulaga porin kadaisi kundu is not the final bomb

  இந்த படத்தின் கதை இரும்பு கடையில் வேலை செய்பவர்களையும் மற்றும் ஓட்டுனர்களின் வாழ்க்கையையும் மையமாக கொண்டது .இயக்குனர் அதியன் ஆதிரையே ஆரம்ப கட்டத்தில் இரும்புகடையில் தான் வேலை பார்த்தவர் என்று இசை வெளியீட்டின் போது கூறினார் .உயிருக்கு கொஞ்சம் கூட உத்தரவாதம் இல்லாத வாழ்க்கையை தான் இரும்பு கடையில் வேலை பார்பவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் அதனாலேயே அவர்கள் வாழ்க்கையை நான் படமாக எடுத்திருக்கின்றேன் என இயக்குனர் அதியன் ஆதிரை அழுத்தமாக கூறினார் .
  irandaam ulaga porin kadaisi kundu is not the final bomb

  படத்தில் நடிகர் நடிகையர் என அனைவரும் மிக சிறப்பாக நடித்துள்ளனர் .முக்கியமாக லாரி ஓட்டுனராக நடிகர் தினேஷ் தனது முழு நடிப்பை காட்டியுள்ளார்.பரியேறும் பெருமாள் படத்தில் நடித்தது போல மாரிமுத்து இந்த படத்திலும் தனது வில்லதனம் நிறைந்த நடிப்பை மிக நேர்த்தியான முறையில் நடித்து விட்டு சென்றுள்ளார். மேலும் தென்மாவின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.

  irandaam ulaga porin kadaisi kundu is not the final bomb
  மிக அழுத்தமான கதையில் சுவாரஸ்யம் குறையாத வகையில் திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அதியன் ஆதிரை .இவருக்கு இது முதல் படம் தான் ஆனால் எந்த ஒரு தவறும் மிக எளிதில் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு மிக நேர்த்தியான முறையில் படத்தை இயக்கியுள்ளார்.

  மாவொளி பாடல் கதையோடு பார்க்கும் போது தான் ,அதன் வழியும் வார்த்தைகளின் அழுத்தமும் நன்கு புரியும். பாடல்கள் இந்த படத்திற்கு கொஞ்சம் நீளமாக தெரிந்தாலும் சரியான நேரத்தில் வருவதால் ரசிக்கும் படி இருக்கிறது .

  irandaam ulaga porin kadaisi kundu is not the final bomb

  மென்மையான சிரிப்பு, குறு குறு பார்வை என்று எப்போதும் போல கயல் ஆனந்தி ஸ்கோர் செய்கிறார். ஆனந்திக்கு கொடுக்க பட்ட காஸ்ட்யூம்ஸ் அவ்வளவு எளிமையுடன் கூடிய அழகு. சாதி பிரச்சனை , முரட்டு தனமான , மூர்க தனமான அண்ணன் அண்ணி டார்ச்சர் என்று பல இடங்களின் கதையை இருப்பின் பாரம் போல் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். அண்ணி கன்னத்தில் பளார் என்று அறையும் பொழுது தியேட்டரில் கைதட்டல்கள் . இவை எல்லாம் சாமான்ய மனிதர்களுக்கு நடக்கும் தினசரி பிரச்சனைகள் , அதை சொல்லிய விதம் அற்புதம்.

  irandaam ulaga porin kadaisi kundu is not the final bomb

  முனீஸ்காந்த் இந்த படத்தில் சரியாக பயன்படுத்த பட்டு இருக்கிறார். மிக அதிகமான படங்கள் நடித்தாலும் இந்த படம் முனீஷுக்கு ஒரு அவார்டு வாங்கி தரும் . ஹோட்டலில் சாப்பிடும் பொழுதும் , தன் பெயர் சுப்பையா தான் பஞ்சர் கிடையாது என்று சொல்லும் பொழுதும் ஏக பட்ட சிரிப்பு வெடி. கதையோடு ஒவ்வொரு காட்சியிலும் ஒன்றி நடித்து இருக்கிறார். தன் உடல் வாகை சரியாக காமெடிக்கு பயன் படுத்தி சிரிக்கவும் சில இடங்களில் உணர்ச்சிகரமாக சிந்திக்கவும் வைக்கிறார்.

  அஸ்ட்ரோலஜி பையன் மற்றும் அஸ்ட்ரோநமி பொண்ணு செய்யும் ஜாலியான காதல்அஸ்ட்ரோலஜி பையன் மற்றும் அஸ்ட்ரோநமி பொண்ணு செய்யும் ஜாலியான காதல்

  ஜான் விஜய் மிரட்டலாக வந்து , தன் கதாபாத்திரத்தை முட்டை கண்களுடன் பயமுறுத்துகிறார்.
  கேமரா மற்றும் ஆர்ட் டிபார்ட்மென்ட் வேலைகளை மிக சரியாக செய்து இந்த படத்துக்கு மிக பெரிய வெற்றியை தேடி கொடுத்து இருக்கிறார்கள். தோழர் என்ற வார்த்தையை ரித்விகா பயன்படுத்திய இடங்கள் , தோழர் என்ற வார்த்தையை மிக சீராக பயன் படுத்திய தெளிவு என்று படத்தில் நிறைய ப்ளஸுக்கள் இருக்கின்றன.

  2019 ஆம் ஆண்டின் மிக சிறந்த படங்களில் கண்டிப்பாக இந்த படம் பல விருதுகளை வெல்லும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்த ஜப்பான் நாட்டு நடிகர் , படத்தின் கதையை புரிந்து தனக்கு கொடுத்த 25 ஆயிரம் சம்பளத்தை திருப்பி கொடுத்து விட்டு , எந்த காசும் வாங்காமல் நடித்து இருக்கிறார் என்பது இந்த கதைக்கும் , இயக்குனருக்கும் கிடைத்த பெருமை.

  irandaam ulaga porin kadaisi kundu is not the final bomb

  அதியன் ஆதிரை இந்த படத்திற்காக செய்த மெனக்கெடல் , ஆர் அண்ட் டி ஒர்க் மிக பிரமாண்டம் . ஒட்டு மொத்த டீம் ஒர்க் என்று சொன்னாலும் அதியன் ஆதிரை தான் இந்த கதையை தன் தோளில் இருந்து சரியான நேரத்தில் இறக்கி வைத்து இருக்கிறார்.

  கடைசி குண்டு என்று இந்த படத்தின் டைட்டில் சொல்வதற்கு காரணம் இனி எங்கும் எந்த நேரத்திலும் குண்டு வெடிக்க கூடாது என்பதற்காக தான் . நம் மனதில் வெடிக்கவைத்த இந்த குண்டை நீண்ட நேரம் சுமக்க செய்திருக்கிறார் இயக்குனர். நிறைய புத்தககங்கள் படிக்காவிட்டாலும் இப்படி பட்ட நல்ல படங்கள் பார்ப்பது இன்றைய இளைஞர்களுக்கு மிக தேவை.

  குண்டு திரைப்படம் எந்த சத்தமும் இல்லாமல் , வசூல் வேட்டை செய்யும்.

  English summary
  pa. ranjith is producing various good scripts with new talents and now he has given a remarkable script once again from a new debut director athiyan athirai. "irandaam ulaga porin kadaisi kundu" is such a film with lots of information's evolving with common man and social issues. its going to be 2019 noteworthy film and many appreciations are given to this movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X