Just In
- 2 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 3 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 3 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 3 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
பிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன
- Automobiles
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜாக்சன் துரை விமர்சனம்
-எஸ் ஷங்கர்
நடிகர்கள்: சத்யராஜ், சிபிராஜ், ராஜேந்திரன், பிந்து மாதவி, கருணாகரன், யோகி பாபு
இசை: சித்தார்த் விபின்
தயாரிப்பு: ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ்
இயக்கம்: தரணிதரன்
'சேலத்துக்குப் பக்கத்துல இருக்கிற ஒரு கிராமத்துல ஜாக்சன்-னு ஒரு பேய் அட்டகாசம் பண்ணுது. அதை என்னன்னு விசாரிச்சிட்டு வாங்க'ன்னு சென்னையிலிருந்து எஸ்ஐ சிபிராஜை அனுப்புகிறார்கள். பந்தாவாக புல்லட்டிலேயே கிளம்பும் சிபிராஜ், அந்த கிராமத்துக்குள் நுழைகிறார். பிந்து மாதவியைச் சந்திக்கிறார். காதல் கொள்கிறார்.
பேயைக் கண்டுபிடிக்கும் வேலையில் இறங்குகிறார் சிபிராஜ். பேயைக் கண்டுபிடித்தாரா? கொடுத்த அசைன்மென்டில் வெற்றிப் பெற்றாரா என்பது மீதிக் கதை.
சிபிராஜின் அறிமுகக் காட்சியிலிருக்கும் எள்ளல், நகைச்சுவை படம் முழுக்கத் தொடர்ந்திருந்தால் இது ஒரு வித்தியாசமான பேய்ப் படமாகத்தான் இருந்திருக்கும். ஆனால் ஒரு சில காட்சிகளைத் தவிர வேறு எங்கும் அப்படி ஒரு வாடையே இல்லாதது துரதிருஷ்டம்.
அந்த கிராமத்தைப் பற்றி இன்னும் விவரமாகச் சொல்லியிருக்கலாம். அந்த ப்ளாஷ்பேக், குறிப்பாக சுதந்திர காலத்து காட்சிகளெல்லாம் படத்தை இழுவையாக்கிவிடுகின்றன. இந்த மாதிரி பேய்ப் படங்களில் கண்டிப்பாக டூயட்டுக்கு தடை விதிக்க ஏதாவது ஒரு சினிமா சங்கம் முன்வந்தால் தேவலை!
சிபிராஜின் நடிப்பு ஓகே. இன்னும் முயன்றால் அவருக்கு காமெடி நன்றாகவே கைவரும். ஆனால் இந்த நடிப்பை சரியான கதைக்குத் தந்தால்தான் அவரால் நிலைக்க முடியும்.
இருட்டும், மாவு பூசிய மூஞ்சிகளையுமே பார்த்துக் கொண்டிருக்கும் கண்களுக்கு பிந்து மாதவி சற்றே ஆறுதல். அவரும் நடிப்பில் குறை வைக்கவில்லை.
பேய்க்கே பேப்பர் போட்டவன் நான் என்று அறிமுகமாகும் யோகி பாபு முதல் பாதியில் ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டுகிறார். அவரை இரண்டாம் பாதியிலும் தொடர வைத்திருக்கலாம்.
சத்யராஜை இயல்பாகப் பேசவிடாமல், சங்க காலத் தமிழ் வசனங்களைத் தந்து நம்மிடமிருந்து கொட்டாவிகளை வரவழைக்கிறார்கள்.
அந்த ஜாக்சன் பங்களாவுக்குள் சிபியும் கருணாகரனும் சரக்குப் போட்டுவிட்டு பண்ணும் ரகளை, அது பேய்ப் படம் என்பதையே மறக்கடித்துவிடுகிறது. இத்தனைக்கும் அந்தக் காட்சியில் பேயே இருந்தாலும்!
பேய் இருக்கிற ஊர் என்பதற்காக அந்த இடத்தைக் காட்டும்போதே இருட்டாகக் காட்டினால் எப்படி? சித்தார்த் விபினின் பின்னணி இசை சில இடங்களில் மிரட்டுகிறது.
இதே கதையை நல்ல திரைக்கதையுடன் சுவாரஸ்யமாகத் தந்திருக்க முடியும். அதில்தான் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர் தரணிதரன்.