»   »  பட விமர்சனம்

பட விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

பாட்ஷா படத்தின் கதையை ரீ மிக்ஸ் செய்து தந்திருக்கிறார்கள்

அஜீத் சூப்பர் ஸ்டார் ஆக ஆசைப்படுவது சரிதான். அதற்காக ரஜினியின் பழைய படங்களையே திரும்பவும்எடுப்பது நியாயமில்லை.

ஒரு கிராமமே கொண்டாடும் இளைஞராக அஜீத். எந்தப் பிரச்சனை என்றாலும் அஜீத்தான் தீர்த்து வைக்கிறார்.அவருக்கு எதிரியாக ஊர்ப் பெரிய மனுஷர் ராதாரவி. ராதாரவியின் ஆட்கள் தப்பு பண்ணும்போது, அடித்துதுவைக்க நினைக்கிறார் அஜீத். ஆனால் அவர் கூடவே இருக்கும் டெல்லி கணேஷ் தடுத்து விடுகிறார்.

அப்போதெல்லாம் அஜீத் மும்பையில் ரெளடிகளை புரட்டி எடுப்பதும், சுட்டுக் கொல்வதும் சில நொடிக்காட்சிகளாக காட்டப்படுகிறது. பின்பு ராதாரவியின் மகளாக வரும் ஸ்னேகா அஜீத்தை விரட்டி விரட்டிக்காதலிக்கிறார். அஜீத் ஒதுங்கி ஒதுங்கி போகிறார்.இடைவேளைக்குப் பிறகு, மும்பையில் ரெளடிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியதும், ஒரு மிகப் பெரிய ரெளடியை சிறையில் தள்ளி விட்டு, தமிழ்நாட்டுக்கு வந்ததும்காட்டப்படுகிறது.

சிறையில் இருந்து வெளிவரும் ரெளடி, அஜீத்தைத் தேடி தர, அவரை அஜீத் கொல்வதோடு படம் முடிகிறது. என்னபாட்ஷா வாசனை வருதா?

ஜனா கேரக்டரில் அஜீத் அசத்துகிறார். கமல், அர்விந்த்சாமிக்கு அடுத்து செம பெர்சனாலிட்டியான ஹீரோ என்றால்அது அஜீத்தான். முழுக்கு முழுக்க தன்னைச் சுற்றி வரும் கதை என்பதை உணர்ந்து, ஒவ்வொரு பிரேமிலும்மிரட்டியிருக்கிறார். கொஞ்சம் நல்ல கதையைத் தேர்வு செய்து, நடித்தால் சூப்பர் ஸ்டார் நாற்காலி இவருக்குதொட்டு விடும் தூரம்தான்.

இயல்பான நடிப்புத் திறமையும், மெச்சூரிட்டியான முகமும் உடைய ஸ்னேகா இது போன்ற படங்களைத்தவிர்ப்பது அவரது சினிமா வாழ்க்கைக்கு நல்லது. இருப்பினும் இந்தப் படத்திலும் எந்த அளவுக்கு தனதுகேரக்டரை மெருகேற்ற முடியுமோ அந்த அளவுக்கு செய்திருக்கிறார்.

கேரக்டர்களுக்குப் பொருத்தமான ஆட்களைத் தேர்வு செய்ததற்காக இயக்குனரைப் பாராட்டியே தீர வேண்டும்.ரகுவரன், ராதாரவி, டெல்லி கணேஷ், மனோரமா, ரியாஸ்கான், ஸ்ரீவித்யா, தியாகு, இளவரசு என எல்லாரும்கச்சிதமான தேர்வு. எல்லாரும் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் என்பதால், கதையில் இருக்கும் பலவீனத்தைகதாபாத்திரங்கள் மூலம் ஈடுகட்டுகிறார்கள்.

யாரப்பா அது வசனகர்த்தா மோநா பழனிச்சாமி? பல காட்சிகளில் வசனங்களில் முத்திரை பதித்திருக்கிறார்.எல்லாரையும் கொன்னுட்டு சுடுகாட்டுக்கா பெரிய மனுஷனாகப் போறே, தப்பு எங்க நடந்தாலும் வருவேன்; அதுஎன் தப்பில்லை, ஜனாவைத் தேடி வர்றவங்களுக்கு பயமில்லை, அபயம் தான் என்பது போன்ற வசனங்கள்மூலம்கேரக்டர் பில்ட் அப்புக்கு பெரிதும் உதவுகிறார்.

கிராமத்தில் நடக்கும் சண்டைக்காட்சிகளில் உறுமி மேளத்தில் உறுமும் பின்னணி இசை, மும்பையில் நடக்கும்சண்டைக்காட்சிகளில் டிரம்ஸில் அதிர்வதும் ரசிக்க வைக்கிறது.

இயக்குனர் ஷாஜி கைலாஷ் மீது ஒரு குற்றப்பட்டியலே வாசிக்கலாம். பல இடங்களில் ஏற்கனவே பார்த்த ஞாபகம்வருவதும், அஜீத் வரும்போதெல்லாம் கூட இருப்பவர்கள், ஜனா வந்துட்டாரு இனி கவலையில்லை என்றுரொம்பவும் செயற்கையாக கூறுவதும் படத்துக்கு பெரிய பலவீனங்கள். நடிகர்களின் பலத்தில் தட்டுத் தடுமாறிநகரும் கதை கிளைமாக்சில் மொத்தமாக படுத்து விடுகிறது.

ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகும் வில்லன் பெரிசாக ஏதாவது பண்ணுவார் என்று எதிர்பார்த்தால் பொசுக்கென்றுஅஜீத் கையால் செத்து விடுகிறார். அதே போல் கிராமத்தில் வில்லத்தனம் பண்ணும் ராதாரவி என்னவானார் என்றகேள்விக்கும், ஸ்னேகாவை அஜீத் ஏற்றுக் கொண்டாரா என்ற கேள்விக்கும் பதிலில்லாமல் படம் முடிந்து விடுகிறது.அஜீத் கார் ரேஸில் கலந்து கொள்ளும் அவசரத்தில் படத்தை வேக வேகமாக முடிக்கச் சொல்லி விட்டார் போலும்.

பாட்ஷா படத்தை பார்க்காதவர்களும், அஜீத்தை பாட்ஷா கேரக்டரில் பார்க்க விரும்பும் அவரது ரசிகர்களும் ஜனாபடத்தைப் பார்க்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil