ஜெயம் ரவியின் 25வது படம்.. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்.. பூமி பட ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: ஜெயம் ரவியின் 25வது படமான பூமி திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகி உள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூக்குத்தி அம்மன் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ள ஜெயம் ரவியின் பூமி படம் எப்படி இருக்கு என நெட்டிசன்கள் விமர்சித்துள்ள ட்விட்டர் விமர்சனம் இதோ..

சமூக அக்கறை நிறைஞ்சிருக்கு

சமூக அக்கறை நிறைஞ்சிருக்கு

விவசாயத்தை மையமாக வைத்து இயக்குநர் லக்‌ஷமன் இயக்கியுள்ள பூமி திரைப்படத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அமெரிக்காவில் ஹாட்ஸ்டார் யு.எஸ்.ஏவில் படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்தேன். அதிக சமூக அக்கறை கொண்ட படமாக பூமி இருக்கு. ஜெயம் ரவி தனது தோளில் ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி சுமப்பது சிறப்பு என பாராட்டி உள்ளார்.

விவசாயத்தை மையப்படுத்தி

விவசாயத்தை மையப்படுத்தி

விவசாயத்தை பற்றிய படமாக பூமி உருவாகி உள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளை எதிர்த்து விவசாயிகள் போராடும் வழக்கமான கதையையே இயக்குநர் லக்‌ஷமன் இயக்கி உள்ளார். ஜெயம் ரவியின் நடிப்பு சிறப்பு என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

ஜெயிச்சுட்டோம் பூமி

ஜெயிச்சுட்டோம் பூமி

நாம ஜெயிச்சிட்டோம் பூமி என ஜெயம் ரவி ரசிகர்கள் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்த்து கொண்டாடி வருகின்றனர். யூடியூபரான மதன் கெளரியின் ரெஃபரன்ஸ் படத்தில் இடம்பெற்று இருப்பதையும் ரசிகர்கள் குறிப்பிட்டு பாராட்டி வருகின்றனர்.

தரமான சம்பவம்

தரமான சம்பவம்

பூமி தரமான சம்பவம் நல்ல உணர்வு பூர்வமா இருந்துச்சு.. பாத்துட்டு சொல்லுங்க இமான் மீயூசிக் சூப்பர். உண்மையாவே இரண்டு மணி நேரம் ரொம்ப Enjoy பண்ணோம்.. Thanks to OTT platform.. fdfs tickets கிடைக்காம இவனுங்க பாத்து Review பண்ணி Train விட்றுவானுங்க.. அது இல்லாம எல்லோரையும் பார்க்க வைத்ததற்கு நன்றி!

திருட்டு பிரின்ட் லீக்

திருட்டு பிரின்ட் லீக்

ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் வெளியான பூமி திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நள்ளிரவு 12 மணிக்கே வெளியான நிலையில், அதிகாலையிலேயே டெலிகிராமில் ஹெச்.டி. பிரின்ட்டுகள் சுடச் சுட தரவிறக்கம் செய்யப்பட்டு பார்க்கப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்களிலும் அதன் லிங்கை பப்ளிக்காக ஷேர் செய்து வருவது காலக் கொடுமை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X