twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாட்டு எப்படி?

    By Staff
    |

    "ரன்" பட வெற்றிக்குப் பிறகு லிங்குசாமி- வித்யாசாகர் மீண்டும் கூட்டணி சேரும் படம், "அட்டகாசம்" படத்தின் வெற்றிக்குப் பிறகுவரும் அஜீத் படம் என்பதால் "ஜி" படத்திற்கும் அதன் பாடல்களுக்கும் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது. ஜியும்ஏமாற்றவில்லை.

    படத்தின் அத்தனை பாடல்களையும் ஒருவரே எழுதாமல், தனக்கென பிரத்யேகமாக 5 பாடலாசிரியர்கள் கொண்ட ஒரு குழுவைவைத்துக் கொண்டு ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலைத் தருவது வித்யாசாகரின் வழக்கம். "ஜி" படத்திலும் அது தொடர்கிறது.

    மொத்தம் 6 பாடல்கள். அதில் ஒரு நிமிடப் பாடல் ஒன்றும் அடக்கம். அறிவுமதி, பா.விஜய், நா.முத்துக்குமார், விவேகா, யுகபாரதிஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

    1.கிளியே கிளியே...

    முதலில் "கிளியே கிளியே கிளியக்கா" என்று ஒரு டூயட் பாடல். அறிவுமதியின் பேனா ஜாலியாக பாடல் வரிகளைஎழுதியிருக்கிறது.

    "ரன்" படத்தில் "காதல் பிசாசே காதல் பிசாசே ஏதோ செளக்கியம் பர்ர்ருவாயில்லை" என்று பாடிய உதித் நாராயண் இந்தப் பாடலைசுஜாதாவுடன் இணைந்து பாடியிருக்கிறார்.

    உதித் பாடியதுதான் தெளிவாக இல்லை என்றால், சுஜாதா பாடியதும் அதேபோல் தான் இருக்கிறது. இருப்பினும் பாடலுக்குவித்யாசாகர் போட்ட மெட்டு பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது. கேசட்டில் முதல் பாடலாக இந்தப் பாடலை வைத்ததுநல்ல முடிவுதான்.

    2. டிங் டாங் கோயில்மணி...

    அடுத்து "டிங் டாங் கோயில்மணி" என்று ஒரு மெலடி பாடல். பா. விஜய் வரிகளை எம். பாலகிருஷ்ணாவும், மதுஸ்ரீயும் ஜீவன்குறையாமல் பாடியிருக்கிறார்கள்.

    ஆங்கில வார்த்தைகளை அதிகம் கலந்து, அர்த்தமற்ற பாடல்களையே அதிகம் எழுதி வரும் பா. விஜய் இந்தப் பாடலை அழகாகஎழுதியுள்ளார். பாடல் வரிகள் மயிலிறகாய் வருடிச் செல்கிறது.

    கனவுகளே கனவுகளே
    பகல் இரவுபோல் நீள்கிறதே
    இதயத்திலே உன் நினைவு
    இரவு பகல் ஆகிறதே

    ஆகிய வரிகள் தேர்ந்த புதுக்கவிதையைப் படித்த நிறைவைத் தருகின்றன. பாலகிருஷ்ணாவின் குரல் கொஞ்சம் ஜேசுதாஸையும்,கொஞ்சம் உன்னிமேனனையும் நினைவுபடுத்துகிறது. மெலடி ரசிகர்களை இந்தப் பாடல் நிச்சயம் கவரும்.

    3. திருட்டு திருட்டு...

    உதித் நாராயண் பாடியதைக் கேட்டபின்பு, மனோ - ஸ்ரீலேகா பார்த்தசாரதி குரலில் இந்தப் பாடலைக் கேட்பது ஒரு ஆறுதலைஅளிக்கிறது.

    நா. முத்துக்குமார் எழுதியிருக்கிறார். "திருட்டு திருட்டு திருட்டு ராஸ்கல் திருட வாயேண்டா" என்ற முதல் வரியிலிருந்தே தெரிந்துகொள்ளலாம், திருட வரச் சொல்வது எதையென்று. அடுத்த வரும் வரிகள் அதையே மெய்ப்பிக்கின்றன.

    திருகாணி கழண்டு ஓடவும்
    தலைகாணி கேலி செய்யவும்
    தனியா நீ நினைச்சி சிரிக்கவும்
    வரவா வரவா

    என்று கதாநாயகன் கேட்க, அதற்கு கதாநாயகியின் பதிலைப் பாருங்கள்.

    கண்ணால உளவு பார்க்கவும்
    கையால களவு பார்க்கவும்
    செலவெல்லாம் வரவு பார்க்கவும்
    வாடா வாடா

    அகநானூற்றுப் பாடல் ஒன்றை யதார்த்த மொழியில் கேட்கும் அனுபவத்தை இந்தப் பாடல் தருகிறது.

    4. சரளாக் கொண்டையில்...

    "சரளாக் கொண்டையில் சாமந்திப் பூவை சடகோபன் தான் வச்சான்டா" என்று ஒரு நிமிடப் பாடல் ஒன்று இருக்கிறது. எஸ்.பி.பி.போல் குரலில் குழைவுடன் கார்த்திக் பாடியிருக்கிறார்.

    "கிரி" படத்தில் "ஏய் கையை வைச்சிக்கிட்டு சும்மாயிருடா" பாடலின் பீட்டுடன் தொடங்கும் பாடல், கிருஷ்ண கானத்தில் வரும்,"ஆயர் பாடி மாளிகையில்" பாடல் மெட்டில் தொடர்ந்து செல்கிறது. ரொம்ப நாளைக்கு முன்பு வந்த பாடல் என்பதால் எல்லோரும்இதை மறந்திருப்பார்கள் என்று வித்யாசாகர் நினைத்து விட்டாரோ?

    5. எத்தனை எத்தனை...


    "தோல்வி நிலையென நினைத்தால்" போல ஒரு பாடல் கேட்டு எத்தனை நாளாச்சு என்று ஏங்குபவர்களுக்காக இதோ ஒரு பாடல்."எத்தனை எத்தனை நீண்ட இரவுகள் இன்றைக்காவது விடியாதா" என்று கேள்வியுடன் பாடலைத் தொடங்குகிறார் யுகபாரதி.

    ஷங்கர் சம்புகேவின் குரல் வித்யசாகரின் மெட்டுக்கு நன்றாகவே ஒத்துழைத்து இருக்கிறது. தன்னம்பிக்கை தரும் வரிகள் பாடல்முழுவதும் நிரம்பியிருக்கிறது. சாம்பிளுக்கு சில வரிகள்:

    இறுகி இறுகி போன இரவை
    இன்னும் பொறுத்தல் முறையில்லை
    இறுதி வரை வாழ்வை நொந்து
    இறந்து போவதில் பலனில்லை
    உறுதியோடு நாளும் உழைத்தால்
    உலகம் நமக்குப் பெரிதில்லை
    இன்னொரு இன்னொரு தூய விடுதலை
    அன்னை பூமியைத் தழுவாதா?

    6. வம்பை விலைக்கு...

    விஜய் படங்களில் எல்லாம் படம் தொடங்கிய 10 நிமிடத்தில் ஒரு டப்பாங்குத்து பாடல் வருமே, "மச்சான் பேரு மதுரை", "நீ எந்தஊரு நான் எந்த ஊரு" என்று, அதேபோல ஒரு பாடல்தான் "வம்பை விலைக்கு வாங்கும் வயசுடா".

    இந்த மாதிரி டப்பாங்குத்து பாடல்களுக்கு மெட்டு போடுவது வித்யாசாகருக்கு அல்வா சாப்பிடுவதுமாதிரி. சும்மா சொல்லக்கூடாது இந்தப் பாடலில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

    கே கேயின் குரலிலும் இளமைத் துள்ளல் இருப்பதால், அஜீத் மட்டும் கரெக்டாக டான்ஸ் ஆடியிருந்தால், இந்தப் பாடல் ரொம்பநாளைக்கு டாப் டென்னில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    விவேகா பாடல் வரிகளுக்காக ரொம்பவும் மெனக்கெடவில்லை என்று தெரிகிறது.

    மொத்த கேசட்டையும் கேட்டு முடிக்கும்போது, கமெர்ஷியல் படத்திற்குத் தேவையான பாடல்களைத் தருவதில் இந்த முறையும்வித்யாசாகர் வெற்றி பெற்றிருப்பதாகவேத் தோன்றுகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X