twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Kalaga Thalaivan Review: உதயநிதி ஸ்டாலினுக்கு வில்லனான பிக் பாஸ் ஆரவ்.. கலகத் தலைவன் விமர்சனம்!

    |

    நடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், ஆரவ்
    இசை: ஸ்ரீகாந்த் தேவா
    இயக்கம்: மகிழ் திருமேனி

    Rating:
    3.0/5

    சென்னை: தடம் படத்திற்கு பிறகு அடுத்த தரமான சம்பவத்தை பண்ணப் போகிறார் மகிழ் திருமேனி என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினை வைத்து மீகாமன் இயக்குநர் கொடுத்துள்ள படம் தான் கலகத் தலைவன்.

    பிக் பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ் இந்த படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்துள்ளார்.

    உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக இந்த படத்தில் நிதி அகர்வால் நடித்துள்ளார் முக்கியமான வேடத்தில் கலையரசன் நடித்துள்ள இந்த படம் எப்படி இருக்கு என்பது குறித்து விரிவான விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க..

    Kalaga Thalaivan Twitter Review: உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வாலின் கலகத் தலைவன் ட்விட்டர் விமர்சனம்!Kalaga Thalaivan Twitter Review: உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வாலின் கலகத் தலைவன் ட்விட்டர் விமர்சனம்!

     கலகத் தலைவன் கதை

    கலகத் தலைவன் கதை


    குறைவான எரிபொருளை கொண்டு இயங்கும் வாகனங்களை தயாரித்து வெளியிடும் வஜ்ரா நிறுவனம் சுற்றுப்புறச் சூழலுக்கு கெடுதல் விளைவிக்கும் வகையில் அந்த வாகனங்களை தயாரித்து வரும் விஷயத்தை கசியவிடுவது யார்? இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன பங்கு உள்ளது. கார்ப்பரேட் நடத்தும் அரசியலை சமூக கருத்தோடு சொல்லி வித்தியாசமான திரைக்கதையை படமாக்கிய விதத்தில் மகிழ் திருமேனி மாஸ் காட்டி உள்ளார்.

    திரைக்கதை எப்படி

    திரைக்கதை எப்படி

    உதயநிதி ஸ்டாலின் தான் இந்த விஷயங்களை செய்கிறாரா? என்கிற ரீதியிலும் அதன் பின்னர் இதற்கு கலையரசன் தான் காரணம் என்றும் பின்னர் மீண்டும் ஒரு சூப்பர் ட்விஸ்ட் வைத்து திரைக்கதையை முதல் பாதியில் விறுவிறுப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.

    இடைவேளை மாஸ்

    இடைவேளை மாஸ்

    கார்ப்பரேட் ஆலை மூலமாக பாதிக்கப்பட்ட மக்கள் போராடிய நிலையில், உதயநிதி ஸ்டாலினின் பெற்றோர்கள் கொல்லப்படுகின்றனர். அவரை எடுத்து வளர்க்கும் பெண் தான் உதயநிதி ஸ்டாலினை இப்படியொரு மிஷனில் இறங்கச் செய்கிறார். அதற்காக டெக்னாலஜி துணை கொண்டு 8 ஆண்டுகள் தன்னை மறைத்து வாழும் காட்சிகளில் எல்லாம் உதயநிதி ஸ்டாலின் தனது நடிப்பை ரொம்பவே மேம்படுத்தி உள்ளார்.

    கொடூர வில்லனாக ஆரவ்

    கொடூர வில்லனாக ஆரவ்

    வஜ்ரா நிறுவனத்தின் சீக்ரெட் அம்பலமான நிலையில், அதனை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்க கார்ப்பரேட் நிறுவனத்தால் நியமிக்கப்படும் கொடூர வில்லன் தான் பிக் பாஸ் ஆரவ். கீழ் மட்டத்தில் இருந்து ஒருத்தர் ஒருத்தராக தேடிப் பிடித்து அவர் போட்டுத் தள்ளும் காட்சிகள், மற்றும் இதற்கு காரணம் யார்? ஏன் இதை செய்தார் என்று கண்டுபிடிக்கும் இடங்கள் எல்லாமே ஆரவ் மிரட்டி எடுத்து இருக்கிறார்.

    பலம்

    பலம்

    உதயநிதி ஸ்டாலின், ஆரவ் மற்றும் கலையரசனின் நடிப்பு படத்திற்கு பெரும் பலமாக மாறி உள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனியின் கதை தியேட்டரில் கடைசி வரை ரசிகர்களை என்ன சொல்லப் போகிறார்? எப்படி கொண்டு போகப் போகிறார் என்கிற விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சமே வைக்கவில்லை. ஒளிப்பதிவு, பின்னணி இசை எல்லாமே சிறப்பு.

    பலவீனம்

    பலவீனம்

    கதையை முற்றிலுமாக டீவியேட் செய்து ஸ்லோ டவுன் செய்வதே நாயகி நிதி அகர்வாலின் காதல் போர்ஷன் தான். பூமி, ஈஸ்வரன் படங்களை போலவே இந்த படத்திலும் அவர் பெரிதாக மெனக்கெட்டு நடிக்கவே இல்லை. முதல் பாதிக்கு பின்னர், இரண்டாம் பாதியில் கதையின் வேகம் முற்றிலுமாக குறைந்து விட்டது ரசிகர்களை தியேட்டரில் ரொம்பவே நெளிய வைத்து விட்டது. அதை மட்டும் இயக்குநர் சரி செய்திருந்தால் கலகத் தலைவன் இன்னமும் கொடி கட்டி பறந்திருக்கும்!

    English summary
    Kalaga Thalaivan Review: Udhayanidhi Stalin, Arav done a super job, but Director Magizh Thirumeni missed a great victory in second half mistakes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X