»   »  கலகலப்பு 2 - முதல் பார்ட் பேரைக் காப்பாற்றியதா கலகலப்பு 2? #Kalakalappu2

கலகலப்பு 2 - முதல் பார்ட் பேரைக் காப்பாற்றியதா கலகலப்பு 2? #Kalakalappu2

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங்காக திகழ்ந்த, திகழும் சுந்தர் சி ஹீரோவான பிறகு இயக்குவதை சிலகாலம் நிறுத்தினார். ஹீரோ கேரியர் அடி வாங்க கையில் எடுத்த காமெடிக்களம்தான் கலகலப்பு. விமல், சிவா, அஞ்சலி,ஓவியா இவர்களோடு சந்தானம் என்று மினிமம் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கலகலப்பு காமெடியில் வயிற்றை பதம் பார்த்ததால் செம கல்லா கட்டியது. அந்த அறுவடையை மீண்டும் கண்டிருக்கிறதா பார்ட் 2?

விமல் - ஜீவா, சிவா - ஜெய், சந்தானம் - சிவா, பழைய ஹோட்டல் - பழைய லாட்ஜ், வைரம் - மாஜி அமைச்சரின் 500 கோடி டாகுமெண்ட்ஸ், அடி வாங்கும் இளவரசு - விடிவி கணேஷ் என்று அதே கேரக்டர்களும் அதே சிச்சுவேஷன்களும்தான். அதே கலகலப்பும்தான்.

Kalakalappu 2 Review

பாடாவதி லாட்ஜை வைத்துக்கொண்டு பாடுபடும் கேரக்டர் ஜீவாவுக்கு. மூதாதையரின் சொத்தை மீட்க வரும் ஜெய் நண்பர் ஆகிறார். இருவருக்குமே காமெடியும் ரொமான்ஸும் நன்றாக வருகிறது.
படத்தின் கவர்ச்சி கோட்டாவுக்கு நிக்கி கல்ராணியும் கேதரின் தெரசாவும். செம குளுகுளு.

சுமார் 25க்கு மேற்பட்ட காமெடியன்கள் அவரவர்கள் வேலையை கனகச்சிதமாக செய்திருக்கிறார்கள். முக்கியமாக யோகி பாபு, சதீஷ், மனோபாலா, ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

Kalakalappu 2 Review

காமெடியை விட இந்த பார்ட் 2 வில் கலர்ஃபுல் தூக்கல். ஒளிப்பதிவு இயக்குநர் யுகே செந்தில்குமார் கைவண்ணம். ஹிப் ஹாப் ஆதியும் கமர்ஷியல் படத்துக்கு தேவையானதை இசையாக்கி இருக்கிறார்.

திரைக்கதையில் இன்னும் காமெடி சேர்த்திருக்கலாம். அடி வாங்குவதை் தாண்டி ஒரு காமெடி பார்ட் 1 இல் இருந்தது. அது இதில் மிஸ்ஸிங்! மற்றபடி பார்ட் 1 ஐ விட பார்ட் 2 வில் ஆட்கள் அதிகம். அதுவே படத்துக்கு பெரிய பலம்தான்.

கலர்ஃபுல் கிளாமர் எண்டெர்டெய்னர்!

English summary
Sundar C's Kalakalappu 2 is a colurful comedy entertainer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil