For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  காளிதாஸ் செம்ம கிளாஸ் , கல்லா கட்டும் பாஸ்

  |

  Rating:
  4.0/5
  Star Cast: பரத், சுரேஷ் சந்திரா மேனன்
  Director: ஸ்ரீ செந்தில்

  சென்னை : காளிதாஸ் படத்தின் கதையை சொல்லி புரிய வைக்க ஒரே ஒரு வார்த்தை போதும் . ஆனால் அதை சொல்லி விட்டால் படம் பார்க்கும் போது நமக்கு ஏற்படும் டென்ஷன் , ஆச்சர்யம் , ஸ்வாரஸ்யம் எல்லாம் போயி விடும் . ஆகையால் அந்த வார்த்தையை எங்கும் பயன்படுத்தாமல் திரை விமர்சனம் செய்ய வேண்டும் என்பது தான் இந்த படத்தின் அழகு.

  நடிகர் பரத் போலீஸாக அசத்தியிருக்கும் படம் தான் காளிதாஸ், பரத்திற்கு மிக முக்கிய படம் இதுவாகும் ஏனெனில் சினிமா துறையில் கடந்த சில ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார் பரத் ,அவரின் சிம்பா படம் ரசிகர்களிடத்தில் நல்ல வெற்றியை பெற்றிருந்தாலும் வியாபார ரீதியில் தோல்வி படம்தான் .இதனால் இந்த படத்தின் வெற்றி மிக முக்கியமானதாக பார்க்கபடுகிறது .

  kalidas is a suspense thriller released today

  காளிதாஸ் படத்தில் பரத்துடன் தானா சேரந்த கூட்டம் படத்தில் வில்லனாக நடித்த சுரேஷ்மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.இந்த படத்தில் பரத் முதன்முதலாக போலீஸாக நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்கி உள்ளார் ஶ்ரீ செந்தில் ,படத்திற்கு இசை அமைத்து உள்ளார் விஷால் சந்திரசேகர் .இந்த படத்தை மணி தினகரன்,எம்.எஸ்.சிவனேசன் மற்றும் வி பார்கவி படத்தை லீப்பிங் ஹார்ஸ் எண்டர்டெயிண்மென்ட் பேனரின் கீழ் தயாரித்து உள்ளனர்.

  காளிதாஸ் படத்தில் பரத்துடன் தானா சேரந்த கூட்டம் படத்தில் வில்லனாக நடித்த சுரேஷ்மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.இந்த படத்தில் பரத் முதன்முதலாக போலீஸாக நடித்திருக்கிறார்.
  காளிதாஸ் படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லாக உருவாகி இருக்கிறது .சமீபத்தில் பரவலாக பேசப்பட்ட பூளு வேல் விளையாட்டை பற்றி படத்தில் பேசியிருக்கிறார்கள் .இன்றைய நாகரீக வளர்ச்சியில் இணையத்தின் பயன்பாடு சிலர் உயிரையும் பறிக்கும் என்ற உண்மையையும் மிக சுவாரஸ்யமான முறையில் கூறியிருக்கிறார்கள் . ஆனால் பூளு வேல் பற்றி பேசியதோடு மட்டும் இல்லாமல் கதையில் பல புதிய முடுச்சுகள் போட்டு நம்மை திசை திருப்பி இருக்கிறார்கள். பக்காவான ஸ்கிரீன்பிளே .

  kalidas is a suspense thriller released today

  நம்மை சில இடங்களில் சீட்டின் நுனிக்கு அழைத்து சென்று பி பி ஏற்றுகிறார்கள். இயக்குனர் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் என்பது நிதர்சனமான உண்மை. இப்படி பட்ட படங்கள் பார்க்கும் பொழுது தான் ஏதோ தாக்கம் ஏற்பட்டு சில காட்சிகள் மனதில் ஓடிகொண்டே இருக்கும் .

  பரத் போலீஸ் கதாபாத்திரத்தில் மிக கனகட்சிதமாக பொருந்தி உள்ளார் .பரத் எப்பவும் காதல் மற்றும் குடும்ப படங்களையே அதிகம் தேரந்தெடுத்து நடிப்பார் ,அவரின் படங்களில் காளிதாஸ் படம் முற்றிலும் மாறுப்பட்டது .முழுக்க முழுக்க சுவாரஸ்யம் நிறைந்த படம்தான் காளிதாஸ். காதல் பரத் என்று பலர் சொல்ல கேட்டு இருக்கிறோம் , இனியாவது காளிதாஸ் பரத் என்று பலர் சொல்லவேண்டும்.

  kalidas is a suspense thriller released today

  ஒரு விஷயத்தில் பரத்தை மிக அதிகமாக பாராட்டியாக வேண்டும் . தன்னுடன் நடிக்கும் மற்ற கதாபாத்திரத்துக்கு தான் அதிக காட்சிகள் மற்றும் சில பல முக்கித்துவங்கள் இருக்கிறது என்று தெரிந்தும் இந்த கதையை தேர்ந்து எடுத்து அருமையாக செய்திருக்கிறார்.

  மெர்டர் மிஸ்டரி என்று கதையை எந்தவிதத்தில் பார்த்தாலும் , நாம் எந்த ஒரு காட்சியிலும் சலிப்பு தட்டாமல் நம்மை உட்காரவைப்பது தான் சவால் . அந்த சவாலை ஏற்று சிறப்பாக செய்துருக்கிறார் இயக்குனர்.
  பல கொலைகள் , அதன் பின்னணி , யார் காரணம் என்ற சஸ்பென்ஸ் நிறைந்த படங்கள் என்று நாம் பல படங்கள் பார்த்து இருந்தாலும் இந்த படம் ஏதோ ஒரு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் கொடுத்து நம்மை உட்காரவைக்கிறார்கள்.

  kalidas is a suspense thriller released today

  ஆதவ் இந்த படத்துக்கு ஒரு மிக பெரிய பிளஸ் , அன்பை வாரி வாரி கொடுக்கணும் ,அதே சமயம் தன் பார்வையில் கொடூரங்களை கொண்டு வர வேண்டும் இரண்டையும் சிறப்பாக செய்திருக்கிறார்.
  ஆன் ஷித்தல் நடிப்பில் அவ்வளவு மெச்சுரிட்டி , கதாநாயகி மட்டும் இல்லை , இந்த படத்தின் ஆணி வேர் ஆன் ஷித்தல் தான் . பயப்படுவதிலும், கோபப்படுவதிலும் , அன்புக்குக்காக ஏங்குவதிலும் , இன்னும் எத்தனை முகபாவங்கள் முடியுமோ அத்தனையும் அட்டகாசமாக செய்து இருக்கிறார்.

  படத்தில் காமெடி என்பது கான்ஸ்டாப்பில் கொடுக்கும் கவுண்டர் டைலாக்ஸ் தான். சரியான நேரத்தில் நம்மை கொஞ்சம் சிரிக்க வைத்து ஒரு சின்ன ரீலாக்ஸேஷன் கொடுக்கிறார். மற்றபடி படம் முழுக்க சுவாரஸ்யங்கள் தான். படத்தில் ஒரே ஒரே மைனஸ் தான் - பரத் கண்டுபிடிக்க முடியாத விஷயங்களை தன் மேல் அதிகாரி சுரேஷ் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதை தெளிவு படுத்தவில்லை. இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி நிறைய உணர்வு பூர்வமான விஷயங்கள் , காதல், காமம் , கொலை, தேடல் , கணவன் மனைவி உறவு என்று பல இடங்களில் நம்மை திசை திருப்பி ஆச்சரியங்கள் கொடுக்கிறார்கள்.

  சுரேஷ் மேனன் நடிப்பு பிரமாதம் , ஏன் இவ்வளவு காலம் நடிக்காமல் இருந்தார் என்பது தான் பலரது கேள்வி.
  படத்தின் இரண்டாம் பாதி விஷால் சந்திரசேகர் பின்னணி இசையில் மிரட்டி எடுக்கிறார். பாதி பேர் தியேட்டரில் பயந்து போயி கண்களை மூடிய தருணங்கள் உள்ளது என்பது தான் படத்துக்கு கிடைத்த வெற்றி. இசைக்கு கிடைத்த வெற்றி.

  இவனா இருக்குமோ அவனா இருக்குமோ , இல்லை வேறு யாரா இருக்குமோ என்பதை பல காட்சிகளில் நம்மை சுழல வைத்து மிஸ்டரி மேஜிக் செய்துருக்கிறார் இயக்குனர். கண்டிப்பாக சஸ்பென்ஸ் திரில்லர் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த படத்தை என்ஜாய் செய்து பார்க்கலாம்.

  காளிதாஸ் கண்டிப்பாக கல்லா கட்டும் பாஸ் .

  English summary
  Barath acted cop story is kalidas and it has good talk among barath fans and the movie is a suspense thriller with lots of hidden secrets and different knots with murder mystery . vishaal chandrasekar has done wonders in the bgm of this movie and sri senthil who directed this script is sure going to reach heights.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X