Don't Miss!
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Vikram Review: யாரு அந்த கோஸ்ட்? கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மிரட்டல்.. விக்ரம் விமர்சனம்!
நடிகர்கள்: கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா
இசை: அனிருத்
இயக்கம்: லோகேஷ் கனகராஜ்
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜின் தரமான சம்பவமாக வெளியாகி உள்ள விக்ரம் படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போம்..
கர்ணன் எனும் மாற்றுப் பெயருடன் விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். அவரை அப்பாவாக தத்தெடுத்து வளர்க்கும் மகனாக காளிதாஸ் ஜெயராம் வருகிறார்.
காளிதாஸின் மனைவியாக நடிகை ஸ்வாதிஷ்டா சோகமாக இருக்காங்க அவரது குழந்தைக்கு இதயத்தில் கோளாறு அதை கனிவாக பார்த்துக் கொள்ளும் தாத்தாவாக இருக்கிறார் கமல். காளிதாஸ் ஜெயராம் கொலை செய்யப்பட்டதும், கமல் குடிகாரராக மாறுகிறார். பின்னர் அவரும் கொடூரமான முறையில் கொல்லப்படுவது போல விக்ரம் படம் ஆரம்பிக்கிறது.
Vikram Twitter Review: சர்வதேச தரத்தில் மிரட்டும் விக்ரம்.. முதல் பாதி எப்படி இருக்கு?

பகத் ஃபாசில் விசாரணை
கமலையும் காளிதாஸையும் கொல்லும் அந்த கேங் யார் என்பதை கண்டுபிடிக்கும் ஸ்பெஷல் ஃபோர்ஸ் போலீஸ் அதிகாரியாக பகத் ஃபாசில் வருகிறார். முதல் பாதியில் அவரது விசாரணை காட்சிகள் தான் படத்தை அதிகளவில் கொண்டு செல்கிறது. தனது முட்டைக் கண்களால் அவர் நடித்து மிரட்டும் அழகு அட்டகாசம். அவருக்கு மனைவியாக காயத்ரி நடித்துள்ளார்.

3 மனைவியுடன் போதை வாழ்க்கை
பிக் பாஸ் ஷிவானி நாராயணன், மகேஷ்வரி மற்றும் மைனா நந்தினி என மூன்று மனைவிகளுடன் பிரம்மாண்ட வீட்டில் கஞ்சா, கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்கும் வியாபாரி சந்தனமாக விஜய்சேதுபதி மிரட்டுகிறார். பாப்பாய் கார்ட்டூனில் ஸ்பினாச் சாப்பிட்டால் சக்தி வருவதை போல, கஞ்சாவை எடுத்து கடித்த உடன் சக்தி வந்து விஜய்சேதுபதி அடிக்கும் இடங்கள் பக்காவாக செட் ஆகி இருக்கு. விஜய்சேதுபதி போலீஸ்காரரை சுட்டு விட்டு ஆட்டோவில் இருந்து இறங்கும் ஓப்பனிங் காட்சிக்கே கைதட்டல்கள் தெறிக்கிறது. பவானிக்கு போட்டியாக சந்தானம் வந்து விட்டார்.

கோஸ்ட் யாரு
முகமூடி போட்டுக் கொண்டு கொலை, கொள்ளைகளை செய்யும் கூட்டத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பகத் ஃபாசில் இறங்கி இருப்பார். ஆரம்பத்தில், முகமூடி அணிந்த நபரை பிடித்து விட்டு அதை கழட்டி பார்த்தால் நரேன் இருப்பார். ஆனால், அதன் பின்னரும், முகமூடியின் வேட்டை தொடரும், யாரு அந்த கோஸ்ட் என தேடும் பகத் ஃபாசிலுக்கு இன்டர்வெல் பிளாக்கில் செம சர்ப்ரைஸ் இருக்கும் ரசிகர்களுக்கும் அந்த காட்சி மிகப்பெரிய கூஸ்பம்ப்ஸ் கொடுப்பது நிச்சயம்.

விக்ரம் கதை என்ன
மகனை கொன்றவர்களை பழி வாங்கும் தந்தையாக விக்ரம் கமல் போராடுவது தான் படத்தின் கதையாக இருக்கும் என நினைக்கும் இடத்தில் செம ட்விஸ்ட் கொடுத்து, ஒட்டுமொத்த போதைப் பொருட்களையும் அழித்து No Drugs Society ஆக மாற்றும் யுத்தத்தை கமல் செய்வது தான் விக்ரம் படத்தின் மூலக் கதை. ஒவ்வொரு நடிகருக்கும் அவருக்கான போர்ஷனை சரியாக கொடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தன்னை நிரூபித்து இருக்கிறார்.

பிளஸ்
விக்ரம் படத்தின் பிளஸ் என்றால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் என படத்தின் நடிகர்கள் மற்றும் டெக்னிக்கல் குழுவை சொல்லிக் கொண்டே போகலாம். படத்தின் மையக் கதை, இயக்குநர் வைத்துள்ள ட்விஸ்ட்டுகள், ஹாலிவுட் தரத்திலான மேக்கிங் என பல பிளஸ்கள் தமிழ் சினிமா ரசிகர்களை காலரை தூக்கி தியேட்டரில் கெத்தாக அமர வைத்துள்ளது.

நெகட்டிவ்
கைதி படத்தை பார்க்காதவர்களுக்கு படம் சில இடங்களில் கனெக்ட் ஆகாமல் போகலாம். கைதி படத்தை போலவே விக்ரம் படத்தின் மையக் கதையும் அமைந்துள்ளது. மேலும், ரகசிய ஏஜென்ட் என்கிற பெயரில் சந்தான பாரதி, வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் திடீரென சண்டை போடுவது என சில காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். ஆனால், இந்த காட்சிகள் படத்திற்கு பெரிய அளவில் பாதிப்பை கொடுக்கவில்லை என்பது தான் ஆறுதல்.

செம சண்டை
பேட்ட படத்தில் ரஜினிக்கும் விஜய்சேதுபதிக்கும் சண்டைக் காட்சி இருக்காது. ஆனால், மாஸ்டர் படத்தில் இருவருக்கும் இடையே பயங்கரமான சண்டைக் காட்சி இடம்பெற்று இருக்கும். இந்நிலையில், விக்ரம் படத்தில் கமல்ஹாசன் மற்றும் விஜய்சேதுபதி இருவரும் மோதும் சண்டைக் காட்சியை அன்பறிவு மாஸ்டர்கள் அதகளப்படுத்தி உள்ளனர். கஞ்சா அடித்து சக்தியை பெற்று விஜய்சேதுபதி கமலை வெளுத்து வாங்க, மூர்ச்சையாகி போகும் பேரக் குழந்தையை காப்பாற்றி விட்டு அந்த குழந்தை அழும் சத்தத்தால் எனர்ஜி பெறும் கமல் விஜய்சேதுபதியை துவம்சம் செய்யும் காட்சியில் தியேட்டரே எழுந்து கத்துகிறது.
ரோலெக்ஸ் சம்பவம்
மொத்தத்தில் தனது குரு கமல்ஹாசனுக்கு ஒரு சூப்பர் கம்பேக் படமாக விக்ரம் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நடிகர் சூர்யா கடைசியில் ரோலெக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் வரும் அந்த காட்சி வெறித்தனம். இப்படியொரு கிரே ஷேட் கதாபாத்திரத்தை சூர்யா ஒத்துக் கொண்டதே பெரிய விஷயம் தான். விக்ரம் 3, கைதி 2 என ரசிகர்கள் அடுத்தடுத்து எதிர்பார்ப்புகளை எகிற விடுவார்கள். விக்ரம்.. டிக்கெட் வாங்குறோம்!