India
  For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Kanne Kalaimane Review: இயற்கை விவசாயம், காதல், கணவன் - மனைவி உறவு... 'கண்ணே கலைமானே' - விமர்சனம்!

  |

  Rating:
  2.5/5

  கண்ணே கலைமானே படம் எப்படி இருக்கு

  சென்னை: கணவன் - மனைவி இடையேயான அன்பையும், புரிதலையும் சமூக அக்கறை கலந்து சொல்கிறது கண்ணே கலைமானே.

  இயற்கை விவசாய ஆர்வலரான சோழவந்தான் கமலக்கண்ணன் (உதயநிதி) ஒரு வேளாண் பட்டதாரி. பொருளாதார நிலையில் சிறப்பான இடத்தில் இருக்கும் கமலக்கண்ணன், நேர்மை, உண்மை, நியாயம் மற்றும் உலகில் உள்ள அனைத்து நல்ல குணங்களும் படைத்த சாதுவான பிள்ளை. வங்கியில் லோன் வாங்கி ஊராருக்கு உதவி செய்து வருகிறார் கமலக்கண்ணன். இவர் லோன் வாங்கியிருக்கும் வங்கியின் மேலாளராக வருகிறார் பாரதி (தமன்னா). இருவருக்கும் முதலில் மோதல், பின்னர் காதல் என படம் நகர்கிறது. ஆனால் இந்த காதல் திருமணத்தில் கைக்கூடுவதற்கு தடையாக இருக்கிறார் உதயநிதியின் பாட்டி வடிவுக்கரசி. அப்பா மற்றும் பாட்டி பேச்சை தட்டாத உதயநிதி, தமன்னாவை எப்படி கரம்பிடிக்கிறார், அந்த திருமண உறவு என்ன ஆகிறது என்பது தான் மீதி படம்.

  15 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் அஜித் ஹீரோயின் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் அஜித் ஹீரோயின்

  Kanne kalaimane movie review

  ஏற்கனவே பல சினிமாக்களில் நாம் பார்த்த கதை தான். அதை தன்னுடைய ஸ்டைலில் சொல்லியிருக்கிறார் சீனுராமசாமி. வழக்கம் போல இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசக் காட்சிகள் என எதுவும் இல்லாமல், குடும்பத்துடன் சென்று படம் பார்க்க கேரண்டி கொடுக்கிறார் இயக்குநர். ஆனால் படம் சுவாரஸ்யமாக இருக்கிறதா என்பது தான் கேள்வி.

  படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை ஒரே மாதிரி மெதுவாக நகர்கிறது. விவசாயிகள் தற்கொலை, நீட் தேர்வு, இயற்கை விவசாயம் உள்பட ஏகப்பட்ட விஷயங்களை படத்தில் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவை அனைத்தும் படத்தின் ஒரு பகுதியாக இல்லாமல், வேண்டுமென்றே திணிக்கப்பட்ட பிரச்சாரமாக வருவதால் ஓவர் டோஸாக மாறி மயக்கம் வர வைக்கிறது. உதயநிதியின் இமேஜை தூக்கிப்பிடிக்க இயக்குனர் நிறையவே மெனக்கெட்டு இருக்கிறார்.

  Kanne kalaimane movie review

  படத்தில் உதயநிதிக்கும் தமன்னாவுக்கும் இடையேயான காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக திருமணத்துக்கு பிறகான காட்சிகள் நல்ல ரொமான்ஸ். அதுபோல், தமன்னாவுக்கு ஏற்படும் பிரச்சினை படத்தின் ஹைலைட்.

  ஷார்ட் குர்தா, ஜோல்னா பை என ஒரு சமூக ஆர்வலர் கெட்டப்பில் மிகவும் சமத்து பிள்ளையாக வருகிறார் உதயநிதி. உண்மையிலேயே இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். தமன்னாவை வடிவுக்கரசி எங்கோ அழைத்து சென்றுவிட்டார் என அறிந்து பதறும் அந்த காட்சியை உதாரணமாக குறிப்பிடலாம். ஆனால் படம் முழுவதும் 'நான் ரொம்ப நல்லவன் சார்' என்ற இமேஜை கட்டிக்காக்க போராடுகிறார்.

  Kanne kalaimane movie review

  தமன்னாவா இது என கேட்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது அவரது கெட்டப்பும், காஸ்ட்யூமும். வெள்ள வெளேர் நிறத்தில், காலர் வைத்த முக்கால் கை ப்ளவுஸ், கைத்தறி சேலை, வகுடெடுத்து வாரிய தலை என சுத்தமாக செட்டாகவில்லை. அமைதியாக நடிக்கிறேன் என்ற பேரில், நன்றாக நடிக்க வேண்டிய காட்சிகளில் கூட கோட்டைவிட்டிருக்கிறார். தர்மதுரை தமன்னா இதில் மிஸ்ஸிங்.

  பூ ராம், வடிவுக்கரசி, வசுந்தரா உள்பட படத்தில் வரும் மற்ற நடிகர்கள் எல்லோருமே தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக தாயை மீறி மகனின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என நினைத்து ஏங்கும் காட்சியில், பூ ராம் அசத்துகிறார். உதயநிதியை உயர்ந்த மனிதனாக காட்ட வேண்டும் என்பதற்காகவோ என்னவோ, அவருடன் நான்கு அரை டிக்கெட்டுகள் வருகின்றன. இதில் தீப்பெட்டி கணேசனின் ஒரு சில முணுமுணுப்புகள் மட்டுமே சிரிக்க வைக்கின்றன.

  யுவனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு ரம்மியமாக இருக்கின்றன. வைரமுத்து வரிகளில் எந்தன் கண்களை காணோம் பாடல் மனதைக் கொள்ளை கொள்கிறது. தனது அக்மார்க் பின்னணி இசை மூலம் காட்சிகளை மெருகேற்றி இருக்கிறார் யுவன்.

  Kanne kalaimane movie review

  ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவில், நடிகர்களை தவிர மற்ற அனைத்துமே அழகாக தெரிகிறது. மிக மெதுவாக, நிறுத்தி நிதானமாக காட்சிகளை கோர்த்திருக்கிறார் எடிட்டர் காசிவிஸ்வநாதன். சில நேரம் பார்வையாளர்களின் பொறுமையையும் சோதிக்கிறார்.

  முதல் பாதியில் சமூக பிரச்சினை, காதல் என நகரும் படம், இரண்டாம் பாதியில் குடும்ப பிரச்னையில் நுழைந்துவிடுகிறது. இரண்டாம் பாதியில் வரும் நிறைய காட்சிகளில் லாஜிக் மிஸ்ஸிங். மொத்தத்தில் இது சீனுராமசாமி படம் தானா என்ற கேள்வியே படம் முடிந்து வெளிவரும் போது மனதில் எழுகிறது.

  English summary
  The tamil movie Kanne Kalaimane is a family drama, starring Udhayanidhi, Tamanna in the lead roles, directed by Seenu Ramasamy.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X