»   »  பாட்டு எப்படி?

பாட்டு எப்படி?

Subscribe to Oneindia Tamil

முரளிக்குத் தங்கையாக தேவயானி. தேனிசைத் தென்றல் தேவாவின் இசை. பழைய பாசமலர் படம் மாதிரி என்று சொல்கிறார்கள். பாட்டிலும் அதுதெரிகிறது.

வெற்றிக் கொடி கட்டு, பொற்காலம் பாடல்களின் சாயல் தெரிந்தால் அதற்கு தேவா பொறுப்பல்ல.

"ஆனந்தம் ஆனந்தம் .. உன்னி கிருஷ்ணன் பாடியிருக்கிறார். முத்துலிங்கம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுதியிருக்கிறார். திருச்சி ரேடியோ மெல்லிசைமாதிரி இருக்கிறது.

முத்துலிங்கத்தின் "காவேரி ஆத்தங்கரை ஓரம் .. தேவா பாடியிருக்கிறார். தாலாட்ட நினைத்திருக்கிறார். கொஞ்சம் ஆங்காங்கே குரல்ஒத்துழைக்காததால் துக்கம் பீறிடுகிறது. கேட்கலாம்.

அனுராதா ஸ்ரீராமின் ஹஸ்கி குரலில் "கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்.. வாலியின் பாட்டு. கலக்க நினைத்திருக்கிறார்கள். ஆனா வேற மாதிரி போய் விட்டது.மானிட்டர் இல்லாத கம்ப்யூட்டர் மாதிரி இருக்கிறது. ஒரே வெறுமை. போரடிக்கிறது.

கட்டிப் புடிடா கட்டிப் புடிடா பாடலும் இருக்கிறது. ஸாரி .. அதே போன்ற பாடல் இருக்கிறது. "சாமக் குளிரடிக்குது .. இந்தப் பாட்டை எழுதியதுகாளிதாஸ். இவரை ஞாபகம் இருக்கிறதா?. புருஷ லட்சணம் படத்தில் 108 அம்மன் பெயரை வைத்து பாடல் எழுதி பிரபலமானவர். இப்படி ஒரு பாட்டைஎழுதியிருக்கிறார்.

சாமக் குளிரடிக்குது பாட்டைப் பாடியுள்ளவர் எஸ். ஜானகி. பழைய முக்கல் முனகல் அப்படியே தொனிக்கிறது. வால்யூமைக் குறைத்து வைத்துத்தான்வீட்டில் கேட்க முடியும், கொஞ்சம் நெளிய வைக்கிறது. ஜானகியின் குரலுக்கு வயதே கிடையாதா?

"துளித் துளி மழைத் துளி .. சுஜாதாவின் இனிய குரலில். மொத்த பாடல்களிலேயே வார்த்தைகள் புரிவது இந்தப் பாடலில்தான். பாடலுக்குச்சொந்தக்காரர் நந்தலாலா. ஜில்லுன்னு இருக்குது நந்தலாலா!.

கண்ணுக்கு கண்ணாக- ஓலை வெடி மாதிரி.

பிரியமானவளே ..தெனாலி ..

சீனு ... வானவில் ...

வண்ணத் தமிழ் பாட்டு...சினேகிதியே ...

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil