For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Kantara Review: ஆதிக்குடிகளின் உரிமைப் போராட்டம்.. ரிஷப் ஷெட்டியின் காந்தாரா விமர்சனம்!

  |

  நடிகர்கள்: ரிஷப் ஷெட்டி, கிஷோர், சப்தமி கவுடா

  இசை: அஜனீஷ் லோக்நாத்

  இயக்கம்: ரிஷப் ஷெட்டி

  Rating:
  4.0/5

  சென்னை: கன்னட திரையுலகையே கதிகலங்க வைத்த காந்தாரா திரைப்படம் இன்று தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

  படத்தை பார்த்து மிரண்டு போன நடிகர் தனுஷ், பிரபாஸ், கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என புரமோஷன் செய்து வருகின்றனர்.

  புரமோஷன்களை எல்லாம் தாண்டி ஆதிக்குடிகளின் உரிமைப் போராட்டத்தை சினிமா எக்சலன்ஸ் உடன் திரையில் கடத்தியிருக்கும் ரிஷப் ஷெட்டியின் மேக்கிங்கிற்காகவே படத்தை கண்டிப்பாக பார்க்கலாம். வாங்க காந்தாரா விமர்சனத்துக்குள் செல்வோம்..

  ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த காந்தாரா... தமிழ் வெர்ஷனில் நாளை ரிலீஸ்!ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த காந்தாரா... தமிழ் வெர்ஷனில் நாளை ரிலீஸ்!

  காந்தாரா கதை

  காந்தாரா கதை

  காந்தாரா என்றால் மாயவனம். ரிஷப் ஷெட்டி இயக்கி டபுள் ஆக்‌ஷனில் நடித்துள்ள இந்த படத்தின் கதை என்னவென்றால், நிம்மதி இல்லாமல் அலையும் அரசன் ஒரு பழங்குடியின மக்கள் வழிபடும் தெய்வத்தின் சிலை கண்டதும் நிம்மதியடைய அந்த மக்களுக்கு தனது நிலத்தின் பெரும்பகுதியை எழுதிக் கொடுக்கிறார். ஆனால், அதன் பின்னர் சில காலம் கழித்து மன்னனின் வம்சாவளி வந்த ஒருவர் மக்களிடத்தில் இருந்து அதை பிடுங்க நினைக்கிறார்.

  சிறு தெய்வத்தின் சாபம்

  சிறு தெய்வத்தின் சாபம்

  பூத கோல நடனம் ஆடும் அப்பா ரிஷப் ஷெட்டியின் மீது அந்த சிறு தெய்வத்தின் அருள் வந்து இறங்கியது போல நடனமாடி அப்போ, இதுவரை நான் கொடுத்த நிம்மதியை திருப்பிக் கொடுக்க முடியுமா? என கேட்கிறது. மேலும், தானமாக வழங்கிய நிலத்தை மீண்டும் கேட்கும் நீ ரத்தம் கக்கி சாவாய் என சாபமிட, அதே போல அந்த அரச வம்சாவளி வந்தவர் இறக்கிறார். அதன் பின்னர் நிலம் அந்த பழங்குடியின மக்களுக்கே சொந்தமாகிறது.

  அரசு கொண்டு வரும் பிரச்சனை

  அரசு கொண்டு வரும் பிரச்சனை

  அதன் பிறகு 20 ஆண்டுகள் கழித்து, 1990 காலக்கட்டம் என காட்டப்படுகிறது. பூர்வக்குடி மக்களை வன அதிகாரிகள் உதவியுடன் அரசு அங்கிருந்து அப்புறப்படுத்த நினைக்கிறது. ஆனால், அதை எதிர்த்து அந்த பூதகோல நடனமாடியவரின் மகன் ஹீரோ சிவா (ரிஷப் ஷெட்டி) எப்படி போராடுகிறார் என்பது தான் இந்த காந்தாரா படத்தின் ஒட்டுமொத்த கதையே..

  ஹீரோ என்ட்ரி

  ஹீரோ என்ட்ரி

  கர்நாடகாவில் பிரபலமான கம்பளா ரேஸ் மூலம் ஹீரோ ரிஷப் ஷெட்டி எருமை மாடுகளை விரட்டிக் கொண்டு வரும் என்ட்ரியே தியேட்டரை தெறிக்கவிடுகிறது. அப்பா, மகன் என இரு வேடங்களிலும், பூதகோல நடனம் ஆடும் காட்சிகளிலும் ரிஷப் ஷெட்டி தான் ஒரு ஆகச் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். பாசம், ரொமான்ஸ், காமெடி என கமர்ஷியல் ரசிகர்களையும் தனது இயக்கத்தால் கவர்ந்துள்ளார் ரிஷப் ஷெட்டி.

  நீங்க நல்லவரா கெட்டவரா

  நீங்க நல்லவரா கெட்டவரா

  பொன்னியின் செல்வன் படத்தில் ரவிதாசனாக நடித்திருந்த கிஷோர் காந்தாரா படத்தில் வன அதிகாரியாக வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ஆதிக்குடி மக்களை விரட்டியடிக்க வரும் அவரது கதாபாத்திரம் கடைசி வரை நீங்க நல்லவரா? கெட்டவரா? என கெஸ் பண்ண முடியாத ரீதியிலே அமைக்கப்பட்டு இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்.

  பிளஸ்

  பிளஸ்

  காந்தாரா திரைப்படம் கன்னட திரையுலகில் கலெக்‌ஷனை அள்ளிய நிலையில், தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. கேஜிஎஃப் படத்தை தயாரித்து ஹம்பலே தயாரிப்பு நிறுவனம் வெறும் 16 கோடி பட்ஜெட்டில் இப்படியொரு தரமான படத்தை கொடுக்க முடியும் என நிரூபித்துள்ளது. சாமி ஆடும் காட்சிகள் எல்லாம் பேய் படம் பார்க்கும் எஃபெக்ட்டை இசையமைப்பாளர் அஜனீஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ் காஷ்யப் கொடுத்துள்ளது படத்தை வேறு தளத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. ஆதிக்குடிகளின் வாழ்க்கையை சில ஆதயத்திற்காக மாற்ற அரசு ஏன் முயற்சிக்க வேண்டும்? அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் உரிமை எந்த அரசுக்கும் இல்லை என ஆணித்தரமாக வசனங்கள் மூலமும் காட்சிகள் மூலமாகவும் கிளைமேக்ஸில் நாயகன் ரிஷப் ஷெட்டி நடித்துள்ள விதம் தான் அனைவரையும் படத்தை பார்க்க தூண்டுகிறது.

  மைனஸ்

  மக்களின் உரிமைக் குரலுக்கான படத்தில் தேவையில்லாமல் வன அதிகாரிகளுடன் நாயகன் சண்டை போடும் காட்சிகளில் ஓவர் பில்டப் வைத்திருப்பதை தவிர்த்து இருக்கலாம். ஆங்காங்கே சில தொய்வுகள் கதையின் வேகத்தை கட்டுப்படுத்துகின்றன. ஆனால், கதையின் நோக்கம், காட்சியின் வீரியத்தை பார்க்கும் போது இந்த சின்ன சின்ன குறைகள் பெரிதாக தெரியாது. நிச்சயம் தியேட்டருக்கு சென்று காந்தாரா படத்தை பார்த்து வியக்கலாம்.

  English summary
  Kantara Movie Review in Tamil (காந்தாரா விமர்சனம்): Kannada actor and director Rishab Shetty's master mind brilliant performance and making makes Kantara movie a huge success at box office and getting positive reviews from critics also.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X