twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கதாநாயகன் விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    2.5/5
    Star Cast: விஷ்ணு விஷால், கேதரின் தெரசா, சூரி
    Director: தா முருகானந்தம்
    -எஸ் ஷங்கர்

    நடிகர்கள்: விஷ்ணு விஷால், கேதரின் தெரசா, சூரி, ஆனந்தராஜ், நட்ராஜ், சரண்யா

    ஒளிப்பதிவு: லஷ்மண்

    இசை: ஷான் ரோல்டன்

    தயாரிப்பு: ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ

    இயக்கம்: தா முருகானந்தம்

    காமெடி... இந்த ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் படமெடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் தமிழ் சினிமா இயக்குநர்கள். அப்படி எடுக்கப்பட்ட படங்களில் ஒன்றுதான் கதாநாயகன்.

    தனது முந்தைய படமான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் பாணியிலேயே இந்தப் படமும் இருக்குமாறு பார்த்துக் கொண்டிருக்கிறார் விஷ்ணு.

    Katha Nayagan Review

    கதைக்கென பெரிதாக மெனக்கெடவில்லை. விஷ்ணுவும் சூரியும் பால்ய நண்பர்கள். இருவரும் தாசில்தார் அலுவலகத்தில் வேலைப் பார்க்கிறார்கள். இயல்பிலேயே ஒதுங்கிப் போகும் சுபாவம் கொண்ட விஷ்ணு மீது கேதரினுக்கு காதல். ஸ்கூட்டரில் ஒரு நாள் லிப்ட் தருகிறார். அப்போதே விஷ்ணுவுக்கும் காதல் பற்றிக் கொள்ள, டூயட் பாடி முடிக்கிறார்கள். கேதரினாவைப் பெண் கேட்டுப் போகிறார் விஷ்ணு. ஆனால் விஷ்ணுவின் ஒதுங்கிப் போகும் பயந்த சுபாவத்தைக் காட்டி பெண் தர மறுக்கிறார் நட்ராஜ். தான் ஒன்றும் கோழையல்ல என்பதை விஷ்ணு எப்படி நிரூபிக்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ் என்பது உங்களுக்கே தெரிந்த விஷயம்தான். இடையில் டாக்டர் விஜய் சேதுபதி செய்யும் குழப்பம், ஷேக் ஆனந்தராஜ் கிட்னி மாற்றம் என ட்விட்ஸ்டுகள்.

    Katha Nayagan Review

    கதாநாயகன் என்ற தலைப்புக்கேற்ப கனகச்சிதமாகத்தான் இருக்கிறார் விஷ்ணு. ஆனால் சில காட்சிகளில் ஏனோ தூங்கி வழிகிறார். மற்றபடி காமெடி, ஆட்டம், பாட்டு என ஒரு வழக்கமான சிரிப்பு - ஆக்ஷன் படத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்.

    சூரிதான் படத்தின் பிரதான பாத்திரம். அவரும் கஷ்டப்பட்டு சிரிப்பை வரவழைக்க முயற்சிக்கிறார். ஷேக் ஆனந்தராஜிடம் அவர் மாட்டிக் கொள்ளும் காட்சியில் தானாகவே சிரிப்பு வந்துவிடுகிறது.

    Katha Nayagan Review

    நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகை என்று பெயரெடுத்த கேதரின், இந்தப் படத்தில் நன்றாக கவர்ச்சி காட்டத் தெரிந்த நடிகைகள் லிஸ்டில் சேர்ந்துள்ளார். கவர்ச்சியில் ஐட்டம் நடிகைகளையே மிஞ்சிவிட்டார்.

    ஆனந்த் ராஜ் ஷேக்காக வந்து அதகளம் பண்ணுகிறார். அவருக்கு பிரியாணி கிண்டும் நபர் ஒரு சுவாரஸ்யம். சரண்யா வழக்கமான அம்மா. இயக்குநர் நட்ராஜ் ஹீரோயின் அப்பாவாக வந்து, பஞ்ச் பேசி கலகலக்க வைக்கிறார்.

    சூரிக்கு அடுத்து காமெடி பண்ணியிருப்பவர் அருள்தாஸ். நல்ல வேளை... இதில் அவருக்கு போலீஸ் உடைக்கு பதில் காமெடி வில்லன் வேடம். அவரை இப்படிப் பார்ப்பது மாறுதலாக, கலகலப்பாக இருக்கிறது.

    லஷ்மணின் ஒளிப்பதிவு, ஷான் ரோல்டனின் இசை.. இரண்டிலுமே புதிதாக ஒன்றுமில்லை. ஒரு காமெடிப் படத்துக்கு டூயட், பில்ட் அப் பாடல்கள் எல்லாம் எதற்குத்தான் வைக்கிறார்களோ?

    காமெடிப் படம் என்று முடிவு செய்த பின், அதற்காக மெனக்கெட்டு காட்சிகள் பிடிக்க வேண்டாமா? முக்கியமான சில காட்சிகள் கடமைக்கு படமாக்கப்பட்ட மாதிரி இருக்கிறது.

    மோசமாக, நெளியவைக்கும் படி எந்தக் காட்சியும் இல்லை என்பதுதான் ஆறுதல். அதற்காகவே இந்தக் கதாநாயகனை ஒருமுறை பார்க்கலாம்.

    English summary
    Review of Vishnu Vishal- Catherine Thresa's Katha Nayagan Movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X